• இனிய ஹோலி வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய ஹோலி  வாழ்த்துக்கள் !

  Men dance as others throw coloured powder on them during Holi celebrations in Kolkata, India, March 24, 2016. REUTERS/Rupak De Chowdhuri

 • தார்ணாவில் பங்களிப்போம் !

  20-06-2017  நாடு தழுவிய தார்ணா.

  கோரிக்கைகளை வென்றெடுக்க  உற்சாகமாக கலந்துகொண்டு தார்ணாவை வெற்றிபெறச் செய்வோம்.

  கோரிக்கைகள்:-

  1) 01-01-2017 முதல் நடைபெறவேண்டிய ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்தை முடிவு செய்ய !

  2) நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக முடிவு செய்ய !

  3) BSNL தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்யும் 08.05.2017 தேதியிட்ட BSNL கார்ப்போரேட்  அலுவலகக் கடிதத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற வலியுறுத்தி….. !

    

 • மருத்துவப்படி சில விளக்க உத்தரவு குறிப்புக்கள்

  மருத்துவப்படி வழங்குவதில் உள்ள சந்தேகங்களுக்கான விளக்க உத்தரவுகள்.

  After Corporate office issued orders restoring quarterly medical allowance ,limiting it to 50% of what was entitled, many queries and doubts are being raised, as to what would be the real impact of the order. In this connection the relevant order issued by the corporate office is given,which is self explanatory.

  view the orderELIGIBILITY OF MEDICAL ALLOWANCE-RELEVANT ORDER. 

  குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவச்செலவு (Medical Reimbursement Sheme)  ஈடுசெய்யும் திட்டத்தில் பயனளிப்பு சம்பந்தமான சந்தேகங்களுக்கான உத்தரவு.

  Another doubt being raised is whether family pensioners are eligible for MRS. Yes, they are very much eligible and the relevant order is reproduced.

  view the order>FAMILY PENSIONERS ARE ELIGIBLE FOR MRS- CLARIFICATION

 • AIBDPA இலஞ்சி – 4வது மாநிலமாநாடு

  AIBDPA இலஞ்சி – 4வது மாநில மாநாடு

  12 x 8 (BSNL RAMAR) s copy

   

  வருகைதரும் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !!!

 • காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 001காரைக்குடி மாவட்ட மாநாடு.

  Picture 011

                    காரைக்குடி மாவட்ட மாநாடு 08-01-2016 அன்று மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர். மோகன்தாஸ், BSNLEU மாவட்டச்செயலர் தோழர். பூமிநாதன், கணக்கு அதிகாரி திரு. பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவித் தலைவர் தோழர். ராமன், மாநில உதவித் தலைவர் தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

            மாநாட்டின் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் தோழர். M. முத்துராமலிங்கம், மாவட்டச் செயலர் தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் தோழர். R. சுப்பிரமணியன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய காரைக்குடி மாவட்டச் சங்கத்தையும் புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது. 

   

   

 • வெற்றிகரமான வேலைநிறுத்தம்

  பிரான்ஸில் நடைபெற்ற ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்களின் வெற்றிகரமான வேலைநிறுத்தம்.

               தொழிலாளர் சட்டங்களை திருத்தி அமைக்கக் கோரி கடந்த 18-05-2016 அன்று பிரான்ஸ் தேசம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவிற்கு ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

            தொழிலாளர் நலன்களுக்கு எதிரான சட்டங்களை தடுக்கவும் தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களை அமுல் படுத்தவும் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால் நாடு தழுவிய அளவில் ரயில் சேவை முடங்கியது. போராட்டம் வெற்றி பெற தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • வெற்றி வெற்றி BSNLEU மகத்தான வெற்றி

  10-05-2016ல் BSNLலில் நடைபெற்ற சங்க அங்கிகாரத் தேர்தலில் BSNLEU மகத்தான வெற்றிபெற்ற இடங்கள்.

  குன்னூர்

  பாண்டி

  நெல்லை

  தூத்துக்குடி

  நாகர்கோவில்

  தர்மபுரி

  விருதுநகர்

  ஈரோடு

   

  NFTE வெற்றி பெற்ற மாவட்டங்கள்

  தஞ்சை

  CGM O

  கடலூர்

  காரைக்குடி

  கும்பக்கோணம்

   

 • IDA பஞ்சப்படி மாற்றம் இல்லை

  01-04-2016 முதல் 30-06-2016 வரையிலான இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் பஞ்சப்படி உயர்வு இல்லை. அதனால் முதல் காலாண்டில் (01-01-2016) வழங்கப்பட்ட 112.4 சத பஞ்சப்படியே தொடரும் என தெரியவருகிறது.

 • BJP மத்திய அரசைக் கண்டித்து வேலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.

  மூத்த குடிமக்களின் சேமிப்புக்களுக்கு வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை குறைத்த BJP மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

  IMG-20160401-WA0013

          மூத்த குடிமக்கள் சேமிப்புக்களுக்கு வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை குறைத்த மத்திய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து வேலூரில் 01-04-2016 காலை 10மணிக்கு தலைமை அஞ்சலகம் முன்பு AIBDPA-AIPRPA இணைந்த ஆர்ப்பாட்டம்.

 • பொது வேலைநிறுத்தம் 2016 செப்டம்பர் 02ல்

  மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு அறைகூவல்.

         30-03-2016ல் டெல்லியில் உள்ள மாவ்லங்கர் மஹாலில் வைத்து நடைபெற்ற மத்திய தொழிற்சங்க சிறப்பு மாநாடு தோழர். A.K. பத்மநாபன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிலாளர் மற்றும் மக்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. டாக்டர். சஞ்சீவரெட்டி,INTUC, ஹர்பஜன் சிங்,HMS, குருதாஸ்தாஸ் குப்தா, AITUC, தபன்சென் CITU உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

             2016 ஜூன் ஜூலை மாதங்களில் மாநில மாவட்ட அளவில் தொழிலாளர்களை திரட்டிட கருத்தரங்கம் நடத்திடவும் 2016 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நாடு தழுவிய மகாதார்ணா நடத்துவது என்றும் 2016செப்டம்பர் 2ம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

               BSNLEU சார்பில் பேட்ரன் தோழர். V.A.N. நம்பூதிரி, பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ, துணைப் பொருளாளர் தோழர். குல்தீப் சிங் கலந்து கொண்டனர்.