• “பிரதர்” – K. A. பரமசிவம் நினைவேந்தல்

  வேலூர்  அன்புத் தோழர் ” பிரதர்” – K. A. பரமசிவம் நினைவேந்தல்.

        வேலூர் மாவட்ட சங்கப்பணிகளில் அரணாக இருந்து செயல்பட்ட அன்புத்தோழர் “பிரதர்” – K. A. பரமசிவம் நினைவேந்தல் நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோழர் K.G. போஸ் கொள்கைகளை வேலூரில் அமுல்படுத்தி செயலாற்றிடும் தோழராக KAP திகழ்ந்தார்.

     The legendary trade union leader com. K.A.Paramasivam’s death anniversary today 24.2.18. He is the pillar of trade union movement at vellore. He followed the rincile of. K.G.Bose till his death. BSNLEU and AIBDPA jointly garlanded his photo and observed silence today.

 • DOT செயலருடன் BSNL சங்கத் தலைவர்கள் சந்திப்பு

  DOT செயலருடன் BSNL சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை.

           23.02.2018 டெல்லி பேரணி முடிவில் கூட்டமைப்புச் சங்கங்களின் தலைவர்கள் DOT செயலரை சந்திப்பது என்றும் கோரிக்கைகளை விளக்கி பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டு செயலரை சந்தித்தனர். கூட்டணி சங்கங்களின் சார்பில் தோழர். P. அபிமன்யு GS, BSNLEU, தோழர். சந்தேஷ்வர் சிங், GS, NFTE, தோழர். K. செபாஸ்டின், GS, SNEA, தோழர். பிரகலாத் ராய்,  GS,  AIBSNLEA, தோழர். ஜெயபிரகாஷ், GS, FNTO, தோழர்.  N. D. ராம், GS, SEWA BSNL, தோழர். மல்லிகார்ஜூனா தலைவர், BSNL MS, ஆகியோரும் BSNL DOT நிர்வாகத்தின் சார்பில் DOT செயலர் திருமதி. அருணா சுந்தர் ராஜன், DOT சிறப்பு செயலர் ஸ்ரீ சிவசைலம், இணை செயலர் ஸ்ரீ அமித் யாதவ், இயக்குனர் (PSU) ஸ்ரீ பவன் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                         நமது கோரிக்கைகளான ஊதிய மாற்றம், துணை டவர் கம்பேனி அமைப்பு, ஒய்வூதிய மாற்றம், பணி ஓய்வு வயது குறைப்பு ஆகியனவைகளை விரிவாகவும் அழுத்தமாகவும் தலைவர்கள் எடுத்துரைத்தனர். இவை சம்பந்தமாக 24.02.2018ல் மத்திய அமைச்சருடன் விவாதிக்க ஏற்பாடு உள்ளதாக எடுத்துரைத்தார்.

 • புதிய சரித்திரம் படைத்த டெல்லி பேரணி

  BSNL ALL UNIONS / ASSONS அனைத்து சங்கங்களும் நடத்திய வரலாற்று சிறப்பான சஞ்சார் பவனை நோக்கிய பேரணி.

      23.02.2018 BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக அதிகாரிகள் ஊழியர்கள் பல்லாயிரக்கணக்காக கலந்து கொண்ட பேரணி – வரலாற்று சிறப்பாக சஞ்சார்பவனை நோக்கி நடைபெற்றது. ஜன்பத் கிழக்கு கோர்ட்டில் தொடங்கிய பேரணி டால்டாயிஸ் மார்க் பார்லிமென்ட் தெரு வழியாக பார்லிமென்ட் தெரு காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது. 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி முடிவில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

              கூட்டமைப்புச் சங்கங்களின் தலைவர்கள் தோழர். P. அபிமன்யு GS, BSNLEU, தோழர். சந்தேஷ்வர் சிங், GS, NFTE, தோழர். K. செபாஸ்டின், GS, SNEA, தோழர். பிரகலாத் ராய்,  GS,  AIBSNLEA, தோழர். ஜெயபிரகாஷ், GS, FNTO, தோழர்.  N. D. ராம், GS, SEWA BSNL, தோழர். ரவி சில் வர்மா, GS, AIGETOA, தோழர். மல்லிகார்ஜூனா தலைவர், BSNL MS, தோழர்.  S. D. சர்மா, GS, BSNL ATM, வெட்ரன் தலைவர்கள் தோழர். V.A.N. நம்பூதிரி, தோழர். G.L. ஜோகி ஆகியோர்  எழுச்சி மிக்க உரை நிகழ்த்தினர். கோரிக்கைகளில் தீர்வில்லை என்றால்  போராட்டம் தொடரும் என்றும் அனைவரும் பெருவாரியாக கலந்து கொள்ளவும் தலைவர்கள் கண்டன உரையில் தெரிவித்தனர்.

                        மத்திய தொழிற் சங்க தலைவர்கள் தோழர்கள். தபன்சென், MP, GS, CITU, வித்தியாசாகர் கிரி, செயலர், CITU, ஜில் சிங் INTUC, தலைவர் டெல்லி மாநிலத் தலைவர் ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  பேரணியில் கலந்துகொண்ட அனைவரையும் தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • வாழ்த்துக்கள் பேரணி வெற்றிபெற – டெல்லி சஞ்சார் பவனை நோக்கி !

   அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாபெரும் பேரணி – டெல்லி சஞ்சார் பவனை நோக்கி !

  கீழ்க்கண்ட   கோரிக்கைகளை வென்றெடுக்க நடைபெரும் பேரணி !

   

  A) 1.1.2017 முதல் 3வது சம்பள உயர்வை 15 சத ஊதிய மாற்றத்தோடு வழங்கிடு !

  B) ஓய்வூதியர்களின்  ஓய்வூதிய மாற்றக் கோரிக்கையை நிறைவேற்று !!

  C) 2வது சம்பள உயர்வில் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !!!

  D) துணை டவர் கம்பேனி அமைக்கும்திட்டத்தை கைவிடு !!!!

  E) ஓய்வுபெறும் வயதை 60வதிலிருந்து 58டாக குறைக்காதே !!!  

  பேரணி வெற்றிபெற AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது !

  கலந்து கொள்ளும் அனைவருக்கும் செவ்வணக்கம் !

 • மாபெரும் கருத்தரங்கம் – வேலூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஏற்பாடு.

   

                   வேலூர் மாவட்ட மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் 23.02.2018 காலை 1000 மணி அளவில் நிதித்தீர்வு காப்பீட்டு (FRDI) மசோதாவை எதிர்த்து வேலூரில் மாபெரும் கருத்தரங்கம்.

 • அஞ்சல் ஆர்எம்எஸ் 3வது மாநில மாநாடு – சென்னை.

  வெற்றிகரமாக நடைபெற்ற அனைத்திந்திய  அஞ்சல் – ஆர்எம்எஸ் ஓய்வூதியர்   3வது மாநில மாநாடு – சென்னை.

   

     AIPRPA அனைத்திந்திய  அஞ்சல் – ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாநில மாநாடு சென்னையில் வைத்து 21.02.2018 அன்று மாநிலத் தலைவர் தோழர்.M. கண்ணையன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டின் பொதுநிகழ்ச்சியில் AIBDPA சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி, மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், சென்னை  மாவட்டச் செலர் தோழர் T. கோதண்டம் உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர்.

                  AIPRPA மாநில பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரன் வரவேற்புரை மற்றும் துவக்க உரை நிகழ்த்தினார். CPMG திரு. M. சம்பத், முன்னாள் CPMG திரு. சீனு பரமானந்தம், AIBDPA மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், AIPRPA கேரளா மாநில பொதுச் செயலர் தோழர். V. S. மோகனன், TNRTA பொதுச் செயலர் தோழர். M. ராதாகிருஷ்ணன், RM FNPO மாநிலச் செயலர் தோழர். P. குமார் மற்றும்பலர் வாழ்த்துரை வழங்கினர்.

 • DOT செயலருடன் BSNL அனைத்து ஊழியர்சங்க கூட்டமைப்பு சந்திப்பு

  ஊதிய / ஓய்வூதியமாற்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி  DOT செயலருடன் அனைத்து BSNL ஊழியர்சங்க கூட்டமைப்பு சந்திப்பு.

       அனைத்து அதிகாரிகள், ஊழியர்சங்க கூட்டமைப்பு (All Unions / Assn of BSNL) சார்பில் தோழர்கள். P. அபிமன்யு, GS, BSNLEU, K. செபாஸ்டின் GS, SNEA, பிரகலாத்ராய், GS, AIBSNLEA ஆகியோர் DOT செயலர் திருமதி. அருணா சுந்தரராஜனை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து உடனே நிறைவேற்றிட வற்புறுத்தினர். அதில் முக்கிய கோரிக்கையான 3வது ஊதியமாற்றம் ஓய்வூதிய மாற்றம் உடனடி அவசியம் என கூறினர்.

         குறுகிய கால நிகழ்வாக இந்த சந்திப்பு நடைபெற்றாலும் சங்க பிரதிநிதிகளைச் சந்தித்த DOT செயலர் கோரிக்கைகளை கூர்ந்து கேட்டதுடன் விரைவான சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதிகூறினார்.

 • மருத்துவப்படியினை காலநீடிப்பு செய்யக்கோரி BSNLEU GS அபி – CMDயுடன் சந்திப்பு

   Medical Allowance without Voucher முறையை (மருத்துவப்படியினை) காலநீடிப்பு செய்து ஓய்வூதியர்களுக்கு வழங்கிடக்கோரி BSNLEU GS தோழர். அபிமன்யு- CMDயுடன் சந்திப்பு.

              20-02-2018 அன்று BSNL CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவாவை சந்தித்த BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யு, தோழர். ஜான் வர்க்கீஸ் AGS சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முக்கியமானதாக

                  BSNL MRS திட்டத்தின் without voucher முறையில் மருத்துவப்படி வசதியினை விரும்பும் ஓய்வூதியர்களுக்கு பரிட்ச்சார்த்த அடிப்படையில் ஏப்ரல் 2017 மற்றும் ஜூலை 2017 காலாண்டு மருத்துவப்படி வழங்கப்பட்டது. அது மேலும் நீட்டிப்பு செய்யும் நிலை இல்லாமல் இருந்தது. அதனை காலநீடிப்பு செய்து வழங்கிடக்கோரி CMDயிடம் பேசினார் தோழர். P. அபிமன்யு. CMDயும் பொறுப்புடன் பரிசீலித்து உரிய கவனத்துடன் தேவையின் அவசியம் கருதி அனுகூலமாக பரசீலிப்பதாக கூறினார்.

             காலாண்டு மருத்துவப்படி வழங்குவதை காலநீடிப்பு செய்யக்கோரி CMD BSNLலிடம்  கோரிக்கை வைத்த BSNLEU மத்தியச் சங்கத்திற்கும் அதன் பொதுச்செயலர் தோழர். அபிக்கும் AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

 • வெற்றிகரமாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட “காத்திருப்பு போராட்டம்”

  வெற்றிகரமாக நடைபெற்ற நாகர்கோவில் மாவட்ட “காத்திருப்பு போராட்டம்”.

        Bsnl MRS திட்டத்தின் without vouchar முறையில் மருத்துவப்படி வசதியினை விரும்பும் ஓய்வூதியர்களுக்கு பரிச்சார்த்த அடிப்படையில் ஏப்ரல் 2017 மற்றும் ஜூலை 2017 காலாண்டு மருத்துவப்படி அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையிலும் நாகர்கோவில் மாவட்டத்தில் மட்டும் அதற்கான அடிப்படை பணிகூட நடைபெறாமல் இன்று வரை மருத்துவப்படி வசதி வழங்கப்படாததை கண்டித்தும் உடனடியாக அதற்கான பணியினை தொடங்கிடக்கோரியும் உடனடியாக கணக்கீடு முடித்து தாமதமின்றி வழங்கக் கோரியும்காத்திருப்பு போராட்டம்” மாவட்டத்தலைவர் தோழர். சாகுல் ஹமீது தலைமையில்  19-02-2018 அன்று காலை 1000 மணி முதல் 1300மணி வரை நாகர்கோவில் GM bsnl அலுவலகத்தில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். மீனாக்ஷி சுந்தரம் பேசினார். போராட்டத்தை வாழ்த்தி Benleu மாவட்டசெயலாளர் தோழர். ராஜு உரையாற்றினார்.

   

          AIBDPA தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டும், நாகர்கோவில் DGM bsnlஐ தொடர்பு கொண்டும் நாகர்கோவில் சங்கத்திற்கு வழங்கிய ஆலோசனையின்படி DGMஐ மாவட்டச் செயலர் சந்தித்தார். ஓய்வூதியர்களின் பிரச்சனைகளில் உள்ள மெத்தனப்போக்கு சுட்டி காண்பிக்கப்பட்டது. அவரும் நேரடி கவனம் செலுத்தி விரைவான தீர்விற்கு உதவுவதாக தெரிவித்ததால் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

               உரிய நேரத்தில் கவனம் செலுத்தி போராடிய நாகர்கோவில் மாவட்டத் தோழர்களையும் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்ப்பதாக அறிவித்த மாநில, மாவட்ட நிர்வாகத்தையும் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

  போராட்டமின்றி எதுவும் நடக்காது ! வாழ்த்துக்கள் !!

 • நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

  உற்சாகமாய் நடைபெற்ற  நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

              நாகர்கோவில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 12.02.2018 அன்று காலை 11மணி அளவில் நாகர்கோவில் நகர YMCA ஹாலில் வைத்து மாவட்ட உதவித் தலைவர் தோழர். V. சங்கரலிங்கம் தலைமையில் உற்சாகமாய் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். மீனாட்சி சுந்தரம் அஞ்சலி உரையினை நிகழ்த்தியதோடு வந்திருந்த தோழர்களை வரவேற்று வரவேற்புரையும்  நிகழ்த்தினார். மேலும் மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளையும் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.  

   

       அகில  இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. காளிபிரசாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தை துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார். தனது துவக்க உரையில் இன்றைய அரசியல் சூழல், பென்ஷனர் பிரச்சனைகள், மக்களின் பிரச்சனைகள் என விரிவான உரையாற்றினார். நெல்லை மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் விரிவான சிறப்புரை ஆற்றினார். தனது சிறப்புரையில் மாவட்ட அளவில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள், AIBDPA கடந்து வந்த போராட்டப்பாதை, அதனால் ஓய்வூதியர்களுக்கு கிடைத்திட்ட பொருளாதார பலன்கள், சந்தித்த இடையூறுகள், தொடரும் போராட்டங்கள், பட்ஜெட் 2018 – இன்றைய அரசியல் சூழல் மாற்றம் அடையாத வருமான உச்சவரம்பு, மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் என விரிவாக பேசினார். கூட்ட முடிவில் மாவட்ட மாவட்டப்பொருளாளர் தோழர். A. அரிஹரன் மாவட்ட வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றதோடு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.