• 16-04-2018ல் தமிழ் மாநிலச் செயற்குழு கூட்டம் – மதுரையில்

  மதுரையில் தமிழ் மாநிலச் செயற்குழு கூட்டம்.

           AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 16-04-2018 திங்கட்கிழமையன்று மதுரையில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் : மதுரை  தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவைமைய வளாகம், முதல்மாடி, மனமகிழ் மன்றம்.

  நேரம் :  16-04-2018 திங்கட்கிழமை, காலை 1000 மணி

  துவக்க உரை : 

  மத்தியச் சங்க ஆலோசகர் தோழர். V. A. N. நம்பூதிரி, AIBDPA

   

  ஆய்படு பொருள் 

  (1) (அ) செயல் அறிக்கை 

       (ஆ)  நிதி நிலை அறிக்கை

  (2) அமைப்பு நிலை

          (அ)   உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்.

          (ஆ)  பகுதிப்பணம் அனுப்பிய விபரம்.

           (இ)  78.2 % நிதி

           (ஈ)  மாவட்ட மாநாடுகள்

         (உ)  மாநில மாநாடு

  (3) நடந்து முடிந்த இயக்கங்கள் பரிசீலனை.

  (4)  பென்ஷன் மாற்றம்.

  (5) மாநில அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்.

   (6) டெலிபென்ஷனர்

  (7) தீர்மானங்கள்

  (8) இன்னபிற 

     அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும்,  சிறப்பு  அழைப்பாளர்களும், மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

  குறிப்பு :- பகுதிப்பணம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் மற்றும் 78.2% IDA நிலுவைத்தொகை நிதி வழங்க வேண்டிய மாவட்டங்கள் அதனை செலுத்தும் வகையில் தயாரிப்புடன் வரவேண்டும்.

 • AIBDPA நெல்லை 3வது மாவட்ட மாநாடு.

  நெல்லை 3வது மாவட்ட மாநாடு.

  நாள் : 2018 மார்ச் 25, ஞாயிற்றுக் கிழமை.

  இடம் : நெல்லை “நவஜீவன் டிரஸ்ட்” கட்டிடம். ( புதிய பேருந்து நிலையம் அருகில்)

  தலைமை : தோழர். S. முத்துசாமி, மாவட்டத் தலைவர்,

  வரவேற்புரை : தோழர். D. கோபால், மாவட்டச் செயலர்,

  துவக்க உரை :  

  தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர், AIBDPA.

  சிறப்புரை :

  தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA.

  தோழர்.K. காளிபிரசாத், அகில இந்திய அமைப்புச் செயலர்.

  தோழர். S. நடராஜா, மாநிலப் பொருளாளர். 

   

  வாழ்த்துரை :

  தோழர். S. தாமஸ், CVP, AIBDPA.

  தோழர். N. சூசை மரிய அந்தோணி, DS, BSNLEU.

  தோழர். V. சீதாலட்சுமி, COS BSNLEU.

  தோழர். S. முருகன், DS TNTCWU.

  தோழர்.A. மீனாட்சி சுந்தரம், DS AIBDPA NGC.

  தோழர். M. பெருமாள்சாமி, CVP AIBDPA. 

  தோழர். P. ராமர், DS AIBDPA TT.

  தோழர். M. அய்யாசாமி, DS AIBDPA VGR.

  தோழர்.S. வைகுண்டமணி, DS, அனைத்துத் துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு.

   தோழர். S. நெடுஞ்செழியன், DS TNRTA.

  தோழர். S. ராஜாமணி, CAGS, மின்வாரிய ஓய்வூதியர் சங்கம்.

  தோழர். P. முத்துக்கிருஷ்ணன், DS, போக்குவரத்து ஓய்வூதியர் அமைப்பு.

  மற்றும் சகோதர சங்க பொறுப்பாளர்கள்.

  நன்றி உரை : தோழர். D. சந்திரபோஸ்.

 • விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் மறைவு

  நெஞ்சார்ந்த அஞ்சலி!

  மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியும்
  கடவுளுக்கு எதிரான மிகப்பெரும்
  அறிவியல் போராளியுமாய் இருந்த
  தன் அறிவால் மட்டுமே இதுவரை
  வாழ்ந்து வந்த மாபெரும் அறிஞர்
  ஸ்டீபன் ஹாக்கிங் இன்று தம்
  76 ஆம் வயதில் காலமானார்.
  அவருக்கு நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலி !!!

   

         ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, (ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) , ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.

        இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளை (black holes) களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியூட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன வென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்று பெயர்.

  சாதாரண மக்களுக்காக அவர் எழுதிய நூல்கள்-

  காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)

  கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)

  பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)

        ஆனால் எதிர்பாராத விதமாக இன்று தமது மூளையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரது அறிவியல் கருத்துகள், அறிவியல் உலகிற்கு மிகுந்த அசைவூக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள கருத்துகளாக என்றும் உயிர்ப்புடன் நிலவும். ஸ்டீபன் ஹாக்கிங்சைப் புறந்தள்ளிவிட்டு அறிவியலை எவரும் கற்க முடியாது.

  ஒரு வேளை, அறிவியல் மரணமடையும் காலத்தில்தான் ஸ்டீபன் ஹாக்கிங்சின் உண்மையான மரணம் நிகழும்.

 • தற்கொலையல்ல…. போராட்டமே தீர்வு…. வென்றனர் விவசாயிகள் !

  எழுச்சியுடன் நடைபெற்ற மகாராஷ்டிர விவசாயிகள் பேரணி வெற்றியில் நிறைவடைந்தது.

           மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முதல் மும்பாய் வரை 2018 மார்ச் 06 முதல் மார்ச் 12 வரை 200 கிலோமீட்டர் தூர எழுச்சி மிக்க விவசாயிகளின் பேரணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

                   நவீன தாராளமயக் கொள்கையால் வாழ்வாதாரத்தை இழந்த இந்திய விவசாயிகளில் இதுவரை 4லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதில் மகராஷ்டிர விவசாயிகள் 76 ஆயிரம் பேர். ஒவ்வொரு மரணத்திற்கு பின்னும் ஒரு விவசாயக் குடும்பம் அழிந்துள்ளது. ராஜஸ்தானைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் நடைபெற்ற இன்றைய விவசாயிகள் பேரணி சரித்திரம் படைத்துள்ளது. மோடி அரசினாலும் பிஜேபி மாநில அரசுகளாலும் கடும் பாதிப்பிற்கு உள்ளான விவசாயிகளே வீதியில் வந்து போராடுகின்றனர். விவசாயிகளின் கோபத்தைக் கண்ட அகில இந்திய விவசாயிகள் சங்கமும் சிபிஎம் கட்சியும் வடிவம் கொடுத்தன. வழிச்செலவுக்கு கூட காசு இல்லாமல் புறப்பட்ட விவசாயிகளுக்கு  வழிநெடுகிலும் மக்கள் ஆதரவு பெருகியது. நெடும் பயணத்திலும் தலித், முஸ்லிம், சீக்கிய அமைப்பினர்களும் விவசாயிகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்கினர். மேலும் குருத்வாராக்களிலும், மசூதிகளிலும் இருந்தும் உணவு வழங்கப்பட்டது.

       ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டக்களத்தில் இணைந்தனர். சட்டமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகளுடன் தலித் அமைப்புகளும் கரம் கோர்த்தனர். பொருளாதார நகரமான மும்பாய் “மகத்தான மக்கள் திரளுக்கு” வரலாற்றுச் சாட்சியமாக மாறியது. போராட்டக்காரர்களை வாழ்த்தி CPM கட்சியின் பொதுச்செயலர் தோழர். சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

            போராட்ட எழுச்சியைக்கண்ட மகாராஷ்டிர அரசு பணிந்தது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகள் சங்க  அகில இந்தியத் தலைவர் அசோக் தாவ்லே தலைமையிலான பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் 9 அம்ச கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு எழுத்துபூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. 

     தற்கொலையல்ல…. போராட்டமே தீர்வு…என்று வென்று காட்டிய மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் சபாஷ் சொல்லி பாராட்டுவதோடு கலந்து கொண்ட அனைவருக்கும் செவ்வணக்கம் கூறுகிறது.

 • வேலூரில் மகளிர் தின கொண்டாட்டம்

  வேலூரில் விமரிசையாக நடைபெற்ற சர்வதேச  மகளிர் தின கொண்டாட்டம்.

   

                 08-03- 2018 வியாழக்கிழமை அன்று வேலூர் பெல்லியப்பா  கட்டிடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமையில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் மிக உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

            AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். C. ஞானசேகரன், மாநில அமைப்புச் செயலர் தோழர். K. கிருஷ்ண மூர்த்தி, BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.  C. தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சமூக ஆர்வலர் தோழர். பிரவீனா சிறப்புரை ஆற்றினார். இன்றைய வாழ்வில் பெண்களின் நிலைபாடு, உடல் ஆரோக்கியம் பேணுவது, உணவு முறைகளில் நமது பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விவரித்ததோடு வாழ்வியலில்நமது கடமைகளையும் எடுத்துரைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் உட்பட 100 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

          சர்வதேச மகளிர் தின கருத்தரங்கை சிறப்பாக நடத்திய வேலூர் மாவட்டச் சங்கத்தை சபாஷ் சொல்லி தமிழ் மாநிலச் சங்கம் பாராட்டுகிறது. தொடரட்டும் இப்பணி !

 • மகளிர் தின வாழ்த்துக்கள் !

  அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !

  அன்பினில் அறிவினில் உறைவிடமாய் பெண் உயர்ந்து விளங்கிட – பெண் விடுதலையே சமூக வளர்ச்சி என்ற நோக்கில் அனைத்து மகளிரும் சமூக விடுதலையோடு உயர்ந்திட சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் !

  போற்றுவோம் பெண்மையை !!

  பெண்ணின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம்.

 • வேலூரில் மகளிர் தினக் கொண்டாட்டம்.

  வேலூரில் AIBDPA சார்பில் மகளிர் தினக் கொண்டாட்டம்.

      2018 மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வேலூரில் உள்ள பெல்லியப்பா கட்டிடத்தில் வைத்து அன்று காலை 1000மணி அளவில் AIBDPA சார்பில் மாவட்டத் தலைவர் தோழர்.  V. ஏழுமலை தலைமையில் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை வேலூர் மாவட்டச்சங்கம் செய்து வருகிறது.

 • AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

     AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

   

        AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 27.02.2018 அன்று சென்னையில் உள்ள BSNLEU சங்க அலுவலகக் கட்டிடத்தில் வைத்து சிறப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். M. அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர். T. கோதண்டம் அஞ்சலி தீர்மானத்தோடு வரவேற்புரையையும் ஆற்றினார்.

        மாநில செயலாளர் தோழர். C. K. நரசிம்மன் கலந்து கொண்டு டெல்லி நடைபெற்ற பேரணி, மத்திய மாநிலச் சங்கங்களின் சிறப்பான போராட்டங்களால் பெற்ற சலுகைகளையும்,  DOT செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுகள், பினனர் தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவாரத்தை முடிவுகள் அது சம்பந்தமான விமர்சனம்,  இன்றைய மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளால் மக்கள் படும் துயரங்களையும் குறிப்பாக ஓய்வூதியர்களின் சிரமங்களையும் தனது  சிறப்புரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

                      நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. முன்னதாக மாவட்ட மாநாட்டை ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

 • ஓய்வூதிய மாற்றம் – தேவையற்ற விமர்சனங்கள்

  “போராடாமல் பெற்றதில்லை – போராடி தோற்றதில்லை .” ஓய்வூதிய மாற்றம் பெற போராடிய சங்கங்களை பாராட்டுவோம் – தேவையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுவோம் !

         கடந்த 24.02.2018 அன்று ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக AUAB பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களை – மனதளவில் ஏற்காமல் – சில ஓய்வூதிய சங்கத் தோழர்கள் தேவையற்ற விமர்சனங்களை முன் வைப்பது வருத்தம் அளிக்கிறது.

              All Unions / Associtions of BSNL போராட்டங்கள் பணியில் உள்ள 1.85 லட்சம் ஊழியர்களுக்கானது மட்டும் அல்ல. பணி ஓய்வு பெற்ற 2 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது. கடந்த 2015 ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளில் நடத்திய வீரம் செரிந்த வேலைநிறுத்தமே 60:40 என்ற வரைமுறை அரசால் கைவிடப்பட காரணமாக அமைந்தது. இதன்மூலம் BSNL ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய அளவீடுகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டது.

       ஊதிய மாற்றம் செய்தபின் 01.01.2017 முதல் வழங்கவேண்டிய ஓய்வூதிய மாற்றம் வழங்குவது என்ற நிலை நிர்வாகத்திடம் இருந்து வந்தது. இது DOT கடித எண் no. 24 – 1 /2018 தேதி 21.02.2018 ல் சொல்லப்பட்டது. ஆனால் 24.02.2018 அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. பல கட்ட போராட்டங்களை AUAB நடத்தியதோடு அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையே ஓய்வூதியமாற்றம் செய்ய ஒத்துக்கொள்ளப்பட்டது.

            இந்த உடன்படிக்கையே சில ஓய்வூதிய சங்கத் தோழர்களை மனதளவில் இடையூறு செய்கிறது. இதுபோன்ற மாய்மால விமர்சனங்களை தவிர்ப்போம். 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் என்ற கோரிக்கையே All Unions  / Associtions of BSNL சங்ககூட்டமைப்பிற்கு கிடைத்த உடனடி வெற்றியாகும். அதே நேரத்தில் நிரந்தரமான ஓய்வூதிய கொள்கை அமைந்திட AUAB வழி செய்யும் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு. அதனால் இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்போம். ஓய்வூதியர்களுக்காக எந்த போராட்டமும் செய்யாமல் சாய்வு நாற்காலிகளில் சாய்ந்துகொண்டு விமர்சிப்பவர்களை புறம் தள்ளுவோம். “போராட்டங்கள் தோற்றதில்லை.  போராடாமல் பெற்றதில்லை.”

     2வது ஓய்வூதியமாற்றம், 78.2 சத நிலுவைத்தொகை, காலாண்டு மருத்துவப்படி, இலவச தொலைபேசி அழைப்பு வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பலகட்ட போராட்டங்களை AIBDPA தனித்தும் BSNLEUவுடன் இணைந்தும் நடத்தி வெற்றி கண்டுள்ளன. என்றென்றும் நம்மோடு போராடி உரிமைகளை பெற்றுத்தரும் BSNLEU கூட்டணிச் சங்கங்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுகளும்.

              AIBDPA மாவட்டச் செயலர்கள் தங்கள் பகுதியில் மாவட்டபொதுக்குழு, செயற்குழு, பகுதிகுழுக் கூட்டங்கள் நடத்தி மேற்க்கண்ட தகவல்களை ஓய்வூதியர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • மந்திரியுடன் நடைபெற்ற ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.

  தொலைத்தொடர்பு மந்திரியுடன் AUAB நடத்திய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.

     தொலைத்தொடர்பு மந்திரி திரு. மனோஜ் சின்ஹாவுடன் நடைபெற்ற ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற பேச்சுவார்தையின் நிகழ்வுகளை கீழே காணலாம்.

  Note on the discussion.

  (1) 3rd Pay Revision.

  So far, the DoT has been maintaining that BSNL employees are not eligible for 3rd Pay Revision. In today’s meeting the Hon’ble Minister agreed that the issue of 3rd Pay Revision of BSNL employees would be processed and would be taken for the approval of the DPE and the Cabinet. This is a great achievement. We have broken the stalemate that prevailed in the Pay Revision issue. At the same time we have to be vigilant, till the final approval is given by the Cabinet.

  (2) Formation of Subsidiary Tower Company.

  The AUAB representatives expressed their apprehension that in the name of formation of the Tower Company, the 66,000 mobile towers of BSNL are being snatched away from BSNL. They also pointed out that the decision of the Cabinet that, the Subsidiary Tower Company would remain under the control of BSNL Management, has been violated, through the appointment of an IAS officer as the CMD of Subsidiary Tower Company. They further pointed out that even BSNL Management was not taken in to confidence in the appointment of an IAS officer as the CMD of the Subsidiary Tower Company, which clearly shows that the Subsidiary Tower Company would not be under the control of BSNL Management. The reply given by the Hon’ble Minister in this regard is non-committal and not satisfactory. The AUAB has to find ways and means to ensure the rolling back of the Subsidiary Tower Company.

  (3) Pension Revision.

  The representatives of AUAB strongly argued that pension revision should be done to the BSNL pensioners. It was pointed out that the BSNL pensioners and the Central Government pensioners are covered by the same rules. They argued that when pension revision is settled for the Central Government pensioners, the same should not be denied to the BSNL pensioners. The Hon’ble Minister assured that needful action would be taken to settle this issue, and directed the Secretary to take necessary action.

  3) ஓய்வூதிய மாற்றம் :-

  ஓய்வூதிய மாற்ற கோரிக்கையில் AUAB தலைவர்கள் திறனான வாதங்களை முன் வைத்தனர். மத்திய அரசு மற்றும் BSNL ஓய்வூதியர்கள் ஒரே சட்ட விதிகளுக்குள் இருப்பதாகவும், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்காமல் காலதாமதம் செய்வதை ஆட்சேபித்தனர். அமைச்சர் உடனே தலையிட்டு தேவையான நடவடிக்கையை செய்வதாக உறுதி அளித்தார். மேலும் DOT செயலருக்கு உடனடி செயல்பாட்டை செய்திட பணித்தார்.

  (4) Calculation of Pension Contribution.

  It was strongly argued that pension contribution in respect of BSNL employees cannot be calculated on the basis of maximum of the pay scale, when the same is calculated on the basis of actual basic pay, in the case of Central Government employees on deputation. It was pointed out that as per the DoP&T order issued in 2006, pension contribution of the Central Government employees is being deducted on the basis of actual pay only w.e.f. 01.01.2017. The Hon’ble Minister directed the Secretary, DoT, that this issue should be settled as per Government orders.

  (5) Allotment of 4G spectrum to BSNL.

  The AUAB representatives pointed out that it will be extremely difficult for BSNL to compete with the private operators, without providing 4G service. They strongly argued that the proposal of the BSNL Management, for the allotment of 4G spectrum by the Government, should be accepted. The Hon’ble Minister replied in the positive and assured that needful action would be taken and spectrum will beallotted to BSNL.

  (6) Reduction of retirement age from 60 to 58.

  The AUAB representatives strongly argued that the retirement age of the BSNL employees should not be reduced from 60 to 58, as a measure for the revival of BSNL. The Hon’ble Minister told that the government is not having any proposal to reduce the retirement age from 60 to 58.

  (7) Left out issues of the 2nd PRC.
  The AUAB representatives pointed out that this issue is lingering on very long time and needs to be settled. The Hon’ble Minister stated that this issue would be looked into by the Secretary, DoT. At the end of the meeting, the Hon’ble Minister stated that the representatives of AUAB could meet him again,
  as well as the Secretary, DoT, in continuation of today’s meeting. The representatives of AUAB heartily thanked the Minister for his positive response to most of the issues.

          After the meeting with the Hon’ble Minister, a meeting of the AUAB was held in the FNTO’s office. All the General Secretaries expressed their satisfaction with regards to the progress in the issues. They also expressed the view that all these have happened only because of the united struggles and massive mobilisations by the entire Non-Executives and Executives, for which they deserve appreciation.

  *****