• 2015 – இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  Happy New Year hd wallpaper 2015

  இனிய 2015 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 • நோய் தரும் நூடுல்ஸ் நுகர்வோர் விழிப்புணர்வு !

  noodules

  விளம்பரங்கள் மூலம் இந்தியச் சந்தையை அசுரத்தனமாக ஆக்கிரமித்து, எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ் சத்தான உணவுதானா? நிச்சயமாக இல்லை. மின்னல் வேகத்தில் தயாராகிவிடும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட பின், செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா? 48 மணி நேரம்!
  இது சம்பந்தமாக நான் ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அதில், பதினைந்து நிறுவனங்களின் நூடுல்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தினேன். நூடுல்ஸ்களில், இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என, இந்தியாவில் அளவு மதிப்பீடுகள் ஏதும் வரையறுக்கப்படாத காரணத்தால், உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அளவுகளை வைத்து நான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளாய், அதிர்ச்சியை மட்டுமே பெற்றேன்.
  நம்மிடம் விற்கப்படும் எல்லா நூடுல்ஸ்களிலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்கமாக உப்பு, மற்றும் கொழுப்பு உள்ளன. 100 கிராம் நூடுல்ஸில், 130 மி.கி., முதல் 600 மி.கி., வரை, சோடியத்திற்கு அனுமதி உண்டு. ஆனால், நாம் சாப்பிடும் நூடுல்ஸ்களில் 821 மி.கி., முதல் 1,943 மி.கி., வரை சோடியம் இருக்கிறது. இது தவிர, பேப்பர் கப், குளிரூட்டிகள், கட்டடப் பொருட்களை ஒட்டுவதற்கு மற்றும் குஷன் தயாரிக்கப் பயன்படும், ‘ஸ்டைரோம்’ எனும் மெழுகு, நூடுல்ஸில் உள்ளது. இவற்றால், உணவுக்குழாய் பாதிப்பு, உடல் பருமன். புற்றுநோய் அபாயங்கள் உண்டு.

  ஆகவே, குழந்தைகளே… உங்களுக்கு மிகவும் பிடித்த பொருளில் ஆபத்து அதிகம் உண்டு; புரிந்து கொள்ளுங்கள்! பெற்றோரே… புரிய வையுங்கள்!

  ப்ரீத்திஷா
  தலைமை பொதுமேலாளர்
  ஆமதாபாத் நுகர்வோர் விழிப்புணர்வு ஆராய்ச்சி மையம்

 • தோழர் M.பலவேசம் மறைவு.

  candleITEU தூத்துக்குடி மாவட்டச்செயலரும், BSNLEU முன்னாள் மாவட்டத்தலைவரும், AIBDPA உறுப்பினருமான தோழர்.M.பலவேசம் (TM, Rtd, TT) அவர்களின் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகிறோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

 • அமெரிக்கா-கியூபா நல்லுரவு

  cuba

  55ஆண்டுகளுக்கும் மேலாக பல விதமான பொருளாதார தடைகளை கியூபா மீது அமெரிக்கா விதித்ததோடு சொல்லொண்ணா இடையூறுகளைச் செய்தபோதிலும் அவற்றையெல்லாம் முறியடித்து சுயசார்பு  பொருளாதா ரத்தைக் கட்டி உலகையே வியக்க வைத்தது கியூபா. இன்று இருநாடுகளும் நல்லுரவை வளர்த்திட  நேசக்கரங்கள் நீட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. தடைகள் நீங்கி உறவு மலர வாழ்த்துகிறோம். ஆனாலும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும் கியூபா.

 • தோழர் சித்துசிங் மறைவு.

  BSNLEU வெட்ரன் தலைவர்களில் ஒருவரும், முன்னால் அகில இந்திய உதவிப் பொதுச்செயலருமான தோழர். சித்து சிங் (NTR) மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகிறோம். பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

 • வேலூர் தோழர்களுக்கு மனம் நிறைந்த பராட்டுக்கள்.

  thankyou

  AIBDPA தமிழ் மாநிலச்சங்கத்தின் விருதுநகர் மாநிலச் செயற்குழு கூட்டத்தின் முடிவின்படி வேலூரில்  மாநில மாநாட்டை நடத்திட முடிவு செய்யப்பட்டது. முடிவு செய்த நாள் முதல் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் தனது மாவட்ட தோழர்களின் துணையோடு மிக சரியாக திட்டமிட்டு மாநாட்டு பணிகளை செய்திருந்தது பாராட்டுக்குரியது.  தியாக தீப தொடரோட்டம், மாநாட்டிற்கு ஒரு மண்டபம், தங்குவதற்கு  ஒரு மண்டபம், கொடி தோரணங்கள், அருசுவை உணவு, முத்தாய்ப்பாக நினைத்த நேரத்திலெல்லாம் காப்பி- டீ என முகம் கோணாத உபசரிப்பு என எதையும் பாக்கி இல்லாமல் திரம்பட செய்த பணி மனதில் நிறைந்துள்ளது. ஓய்வூதியர்களின் மாநாடா  இது என மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சிறப்பாக நடத்திட்ட வேலூர் தோழர்களுக்கும் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதனுக்கும் நெஞ்சு நிறை  பாராட்டுக்கள்.

 • AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !

  AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.

  மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக [Read More…]

 • AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு- வேலுரில் 16-12-2014 துவங்கிது.

 • மூன்றாவது மாநில மாநாட்டு அழைப்பிதழ் !

  BSNL

  மூன்றாவது மாநில மாநாட்டு அழைப்பிதழ்

  நடைபெறும் இடம் : தோழர் K.A.பரமசிவம் அரங்கம்.

  K.M.நாதன் மஹால்,

  டோல்கேட், வேலூர் – 632001

  நாள் : 2014 டிசம்பர் 16 மற்றும் 17

  சார்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் வருக, வருக என அன்புடன் வரவேற்கிறோம்.