• வேலூர் தோழர்களுக்கு மனம் நிறைந்த பராட்டுக்கள்.

    thankyou

    AIBDPA தமிழ் மாநிலச்சங்கத்தின் விருதுநகர் மாநிலச் செயற்குழு கூட்டத்தின் முடிவின்படி வேலூரில்  மாநில மாநாட்டை நடத்திட முடிவு செய்யப்பட்டது. முடிவு செய்த நாள் முதல் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன் தனது மாவட்ட தோழர்களின் துணையோடு மிக சரியாக திட்டமிட்டு மாநாட்டு பணிகளை செய்திருந்தது பாராட்டுக்குரியது.  தியாக தீப தொடரோட்டம், மாநாட்டிற்கு ஒரு மண்டபம், தங்குவதற்கு  ஒரு மண்டபம், கொடி தோரணங்கள், அருசுவை உணவு, முத்தாய்ப்பாக நினைத்த நேரத்திலெல்லாம் காப்பி- டீ என முகம் கோணாத உபசரிப்பு என எதையும் பாக்கி இல்லாமல் திரம்பட செய்த பணி மனதில் நிறைந்துள்ளது. ஓய்வூதியர்களின் மாநாடா  இது என மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சிறப்பாக நடத்திட்ட வேலூர் தோழர்களுக்கும் வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதனுக்கும் நெஞ்சு நிறை  பாராட்டுக்கள்.