• குடியரசு தின வாழ்த்துக்கள்

  66வது குடியரசு தின வாழ்த்துக்கள்.

  279082

                      இந்திய மக்களுக்கு AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் 66வது குடியரசு தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

   

 • வேலூர் தோழர்களுக்கு பாராட்டு.

  காணும் பொங்கலன்று ஓய்வூதியர்களை வீட்டிற்கே சென்று சந்தித்து வாழ்த்து கூறிய வேலூர் தோழர்கள்.

                   17-01-2015 அன்று வேலூர் மாவட்ட தோழர்கள் AIBDPA மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலை , மாவட்டச் செயலர் தோழர் ஜோதி சுதந்திரநாதன், தோழர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தோழர் பார்த்தசாரதி மற்றும் பல தோழர்கள் நமது ஓய்வூதியர் சங்கத் தோழர்களை அவர்களின்  வீட்டிற்கே சென்று பொங்கல் வாழ்த்து கூறியது பாராட்டிற்குரியது.

                     மறைந்த திரு. சந்தானம் அவர்களின் துணைவியார்  திருமதி. சந்தானம் அவர்கள் பொங்கல் வாழ்த்து கூறச்சென்ற நமது தோழர்களை நா தழுதழுக்க வரவேற்றது நெகிழ்ச்சி அடையவைத்ததாக  தோழர். ஜோதி சுதந்திரநாதன் கூறினார்.

                     இதுபோன்ற நிகழ்வுகளில் மற்ற மாவட்டச் சங்கத் தோழர்களும் ஈடுபடவேண்டும்  என மாநிலச் சங்கம் வேண்டுவதோடு வேலூர் தோழர்களையும் மனதார பாராட்டுகிறது.

   

   

   

 • AIBDPA ஆலோசகர் தோழர்.VAN.நம்பூதிரி -DOTசெயலருடன் சந்திப்பு

  78.2சத பஞ்சப்படி இணைப்பு சம்பந்தமாக உத்தரவு  வெளியிட வலியுறுத்தி…..

   

            16-01-2015 அன்று நமது AIBDPA ஆலோசகர் தோழர்.V.A.N.நம்பூதிரி அவர்கள் DOT செயலர் திரு. ராகேஷ் கார்க் அவர்களை சந்தித்து 78.2சத பஞ்சப்படி உத்தரவு வெளியிடுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்த்து உடனடியாக வெளியிட ஏதுவாக கேபினட் குறிப்புகளை  அனுப்பிட நினைவுபடுத்தினார். அதற்கான ஏற்பாடுகளை போர்க்காலஅடிப்படையில் செய்திட வற்புறுத்தினார்.

     DOT செயலரும் வேகமாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்திட, அருகில் இருந்த மெம்பர் (Finance)ஐயும் மற்ற அதிகாரிகளையும்  DOT செயலர் கேட்டுக்கொண்டார்.

          விரைவான நடவடிக்கை மூலம் 78.2 சத பஞ்சப்படி கிடைக்க அனத்துமட்டங்களும் செயல்பட AIBDPA தமிழ் மாநிலச் சங்கம்  வேண்டுகிறது.
 • பொங்கல் வாழ்த்துக்கள்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   

   

  அனைத்து வளங்களும் பெற்று மங்கலம் பொங்கிட பொங்கிடும் பொங்கல் எங்கும் தங்கிட AIBDPA தமி்ழ் மாநிலச்சங்கத்தின் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

 • அஞ்சலகங்கள் முன்பு 12-01-2015 ஆர்ப்பாட்டம்

  மருத்துவப்படி ரூபாய் 500 வழங்கிடக்கோரி

          மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கடந்த 19-11-2014 முதல் உயர்த்தப்பட்ட மருத்துவப்படி (Medical Allowance) ரூபாய் 500/- உத்தரவு வெளியிடப்பட்டு வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்பட்டு பெற்றுவருகிறார்கள். ஆனால் அஞ்சலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு இன்றுவரை அது அமுலாகவில்லை. உயர்த்தப்பட்ட மருத்துவப்படியை உடனடியாக வழங்கிடக்கோரி அனைத்து அஞ்சலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம் வருகின்ற 12-01-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விட்டுள்ளது. 

     AIBDPA சங்க தோழர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்கிட AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • 01-01-2015 முதல் 100.3சத பஞ்சப்படிக்கான DPE உத்தரவு.

  DPEயின் 100.3சத பஞ்சப்படி உயர்விற்கான உத்தரவு.

  attachment(12)

 • தேசம் தழுவிய தர்ணா – FORUM சார்பில் 3நாட்கள் – BSNLஐ புத்தாக்கம் செய்ய

  BSNL – தேசம் காக்க FORUM சார்பில் நடைபெற்ற 3நாள் தொடர் தர்ணா

  கடந்த 06-01-2015 முதல் இன்று 08-01-2015 வரை நாடு தழுவிய தர்ணாப் போராட்டம் BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. BSNLஐ பாதுகாக்க ஒரு குடையின் கீழ் நின்று போராடியது பாராட்டிற்குரியது.

  AIBDPA மத்திய, மாநிலச் சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வூதியர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்ததால் பல மாவட்டங்களிலும் இந்த தர்ணாவில் AIBDPA தோழர்களும் கலந்து கொண்டனர். தர்ணாவில் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ் மாநிலச்சங்கம் பாராட்டுகிறது.

 • நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

  7லட்சம் தொழிலாளர்கள் – 06-01-2015 முதல் – 5 நாட்கள் – தொடர் வேலைநிறுத்தம்..

  BJP (நரேந்திர மோடி)யின் மத்திய அரசின் “நிலக்கரிசுரங்கங்களை தனியார் மயப்படுத்தும் ” தவரான கொள்கையை எதிர்த்து, மத்திய தொழிற்சங்கங்களான BMS, INTUC, AITUC, CITU, HMS ஆகியவற்றின் அறைக்கூவலுக்கிணங்க இந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 06-01-2015 முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

  மோடி அரசின் பொதுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் கொள்கையை எதிர்த்து நடைபெறும் வீரம் செறிந்த வேலைநிறுத்தம் வெற்றிபெற  AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • BSNLஐ புத்தாக்கம் செய்திடக்கோரி இன்று 06-01-2015 முதல் 08-01-2015 வரை நடைபெரும் நாடுதழுவிய தார்ணாப் போராட்டம்

  AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் இந்த தார்ணாவில் கலந்து கொள்வதோடு போராட்டம் வெல்ல வாழ்த்துகிறது.

 • 06-01-2015 இன்று நடைபெற்ற தார்ணா போராட்டம்

  IMG_20150106_121348 IMG_20150106_121439