• மே தின வாழ்த்து.

  உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

  IMG_214982930794731

  உழைப்பவன் கையில் உலகம் வரும்வரை போராடுவோம்.

 • குஜராத் – ஜாம்நகரில் – AIBDPA மத்தியச் செயற்குழு

  குஜராத் மாவட்டச் சங்கங்களின் எழுச்சிமிக்க பேரணியுடன்

  28-04-2015ல் மத்திய செயற்குழு துவக்கம்.

  IMG_200669496124226

  பேரணியின் ஒரு பகுதியினர்.

  IMG_200639553752288

  மேடையில் தலைவர்கள்.

  IMG_199783989565793

  மத்திய செயற்குழு உறுப்பினர்கள்.

            28-04-2015 அன்று குஜராத் மாநிலம் ஜாம்நகரில்  குஜராத் மாநில மாவட்டச்சங்கத் தோழர்களின் எழுச்சிமிக்க பேரணியுடன் காலை 1100 மணி அளவில் “தோழர்.S.K. வியாஸ் அரங்கில்” அகில இந்திய தலைவர் தோழர்.A.K. பட்டாசார்ஜி தலைமையில் செயற்குழு துவங்கியது.

        தலைமை விருந்தினராக JOINT CCA திரு. கமல் கபூர், தோழர்.V.A.N. நம்பூதிரி, குஜராத் வெட்ரன் தலைவர் தோழர். A.C. SHAH, ஜாம்நகர் DGM திரு. கஹானே, BSNLEU மாநிலத் தலைவர் தோழர். D.H.திருபாதி என முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  

        இரவு 0830 மணி வரை சிறப்பாக நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இடைக்கால அறிக்கையை பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் அவர்களும், இடைக்கால வரவு செலவு கணக்கை அ.இ.பொருளாளர் தோழர். M.P. குன்ஹானந்தனும் சமர்ப்பித்தனர்.

 • புரட்டி போட்டது பூமி அதிர்ச்சி – நேபாளத்தை – பலி 4000ஐ தாண்டுகிறது.

  சக்திமிக்க நிலநடுக்கம் – 7.9 ரிக்டர் அளவு – துயர்துடைக்க கைகொடுப்போம்.

  IMG_148709397570994

                   25-04-2015 அன்று இந்திய நேரப்படி காலை 11.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவானது. தலைநகர் காத்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்திநகர் என நேபாளத்தையே புரட்டிப் போட்டது. பலி4000க்கும் மேல் எனவும் படுகாயம் 8500க்கும் மேலிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

            இந்த நிலநடுக்கம் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், சென்னை வரை உணரப்பட்டது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72ஆக இருக்கிறது.

 • BSNLலில் 21-04-2015 முதல்22-04-2015 வரை இரண்டுநாள் வேலைநிறுத்தம் வெற்றி.

  தமிழ்மாநிலத்தில் -பல AIBDPA மாவட்டச்சங்கங்கள் – வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

  images (2)

           கோவை, ஈரோடு, வேலூர், மதுரை, காரைக்குடி, திருச்சி, தூத்துக்குடி, கடலூர், பாண்டி உள்ளிட்ட  பல மாவட்டங்களில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டனர்.     

            மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வால்போஸ்ட் போட்டது உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

  ஒன்றுபட்ட போராட்டம் வென்றுகாட்டும் நிச்சயம் !

 • BSNLலில் 2015 ஏப்ரல் 21 & 22 நாடு தழுவிய வேலைநிறுத்தம்.

  வேலைநிறுத்தம் வெற்றிபெற AIBDPA தூத்துக்குடி மாவட்டச் சங்கம் சார்பில் போஸ்டர்.

  BSNL

 • வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்ட மாநாடு.

  19-04-2015 AIBDPA வேலூர் மாவட்ட 2வது மாநாடு.

                விண்ணைமுட்டும் கோஷங்களுக்கிடையே சங்கக்கொடியை ஏற்றிவைத்து, வீரம் செரிந்த வேலூரில் AIBDPA வேலூர் மாவட்ட 2வது மாநாடு துவங்கியது.

                தோழர். E.ஏழுமலை தலைமையில் துவங்கிய மாநாட்டில் மாவட்டச் செயலர் தோழர். B.ஜோதி சுதந்திரநாதன்  வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

            அகில இந்திய துணைத்தலைவர் தோழர்.M.மோகன்தாஸ் துவக்க உரை நிகழ்த்திட, விரிவான சிறப்புரையை மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் ஆற்றினார். 

              ஈரோடு மாவட்டச்செயலர் தோழர். N.குப்புசாமி, அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K.ஆறுமுகம், மாநில அமைப்புச் செயலர் தோழர். C.ஞானசேகரன், வங்கி, காப்பீடு, தபால், மாநில ஓய்வூதியர் சங்கத்தலைவர்கள், BSNLEU மாவட்டச் செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

          200க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் மாவட்டத் தலைவராக தோழர். V.ஏழுமலையும், மாவட்டச் செயலராக தோழர். B.ஜோதி சுதந்திரநாதனும், மாவட்டப் பொருளாளராக தோழர். P.ஸ்ரீதரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

     சிறப்பாக நடைபெற்ற வேலூர் மாவட்ட மாநாட்டையும், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

 • 162 ஆண்டுகள் மக்கள் பணியில் – இந்திய ரயில்வே துறை

  images (1)

   1853 ஏப்ரல் 16 முதல் இன்று வரை 162 ஆண்டுகள் மக்கள் பணியில் இந்திய ரயில்வே.

       13 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டது இந்திய ரயில்வே. நாடு முழுக்க 1,15,000 கிலோ மீட்டர் வழிதடத்துடன் 7200க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்களைக் கொண்டது. 

             நாள் ஒன்றுக்கு 23 மில்லியன் பயணிகள் என வருடத்திற்கு 8,397 பில்லியன் பயணிகளை ஏற்றி இறக்கி சேவை செய்துள்ளது கடந்த 2014 – 15ல் இந்திய ரயில்வே. மேலும் 1050.18 மில்லியன் மெட்டிரிக் டன் பொருட்களையும் ஏற்றி இறக்கியுள்ளது.

          2014 – 15ல் அதன் வருவாய் ரூபாய். 1069.27 பில்லியன். பயணிகளின் மூலம் ரூபாய். 402.80 பில்லியன்.

          இவ்வளவு பெரிய நெட் ஒர்க் கொண்ட இந்திய ரயில்வேத் துறையினை BJP(மோடி) அரசு தனியார் மயப்படுத்த முடிவு செய்துள்ளது.

             மக்கள் சக்தியுடன் ஒன்று பட்டு எதிர்த்து தனியார் மயத்தை முறியடிப்போம்.

   

 • ஏற்றம் காணும் ஏர் இந்தியா – லாபவழியில் இன்று.

  “முயன்றால் முடியாதது எதுவும் இல்லை – பாராட்டுவோம் ஏர் இந்திய நிறுவனத்தையும் அதன் ஊழியர்களையும்.”

  download (1)

   

  கடந்த ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் 2014 டிசம்பரில் லாபம் ரூபாய் 14.6 கோடி. 2011-12ல் சந்தித்த நஷ்டம் ரூபாய் 7,599கோடி. 2012-13 நஷ்டம் ரூபாய் 5,490 கோடி. 2013 டிசம்பரில் 168.7 கோடி. இன்று நஷ்டத்திலிருந்து மீண்டது பாராட்டு.

         நஷ்டத்திலுள்ள BSNLஐயும் லாபமுள்ள நிறுவனமாக நம்மால் மாற்ற முடியும். தேவையான  கருவிகள் இருந்தால்-நம்மிடம் பறிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைத்தால் BSNLஐ புத்தாக்கம் செய்ய முடியும். அதற்கான வேலைநிறுத்தம் 2015 ஏப்ரல் 21&22 தேதிகளில் நடைபெற உள்ளதால் தார்மீக ஆதரவு கொடுப்போம் .

  வளமான BSNL – வளமான பாரதம் படைக்க போராடுவோம்.

 • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  இனிய தமிழ் – மன்மத ஆண்டு – புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   

  mantle

 • AIBDPA தமிழ் மாநிலச்சங்க சுற்றறிக்கை – 4.

  தமிழ் மாநிலச் சங்கச் சுற்றறிக்கை – 4

   

  Circular 4 2015