• EPF பென்ஷனர்களுக்கு அல்வா கொடுக்கும் BJP அரசு

    EPF ஓய்வுதியர்களுக்கு ரூ.1000 பென்ஷன் வழங்கப்பட்ட 6மாதங்களில் நிறுத்தம்.

          பென்சனர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் பலகட்ட போராட்டங்களை  நடத்தி காங்கிரஸ் ஆட்சியில் ஒத்துக்கொண்ட EPF ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 1000/- BJP (மோடி) அரசு ஆட்சிக்கு வந்த உடன் அறிவிக்கப்பட்ட பென்ஷன் திட்டம் கடந்த 2014அக்டோபர் முதல் 2015மார்ச் வரை வழங்கப்பட்டது.

              ஆனால் இன்று அது EPFOவால் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போராடிப் பெற்ற சலுகை பறிக்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட தயாராவோம்.

  • AIBDPA வேலூர் மாவட்டச்சங்க 2வது மாநாடு 19-04-2015.

    JpegAIBDPA வேலூர் மாவட்ட 2வது மாவட்டமாநாடு  19-04-2015ல்   நடைபெற உள்ளது.               Jpeg

    தலைமை   :

    தோழர். V.ஏழுமலை, மாவட்டத்தலைவர்

    வரவேற்பு    :

    தோழர்.B. ஜோதி சுதந்திரதாதன், மாவட்டச்செயலர்.

    துவக்கவுரை :

    தோழர்.S.மோகன்தாஸ், அகிலஇந்தியஉதவித்தலைவர், AIBDPA.

    சிறப்புரை :

    தோழர்.C.K.நரசிம்மன், மாநிலச்செயலர், AIBDPA.

    மற்றும் மத்திய, மாநிலச்சங்க தலைவர்கள். 

    வாழ்த்துரை :

    திரு.C.A. ரெட்டி, பொது மேலாளர், BSNL.

    மற்றும் சகோதர சங்க தலைவர்கள்.

     மாவட்ட மாநாடு சிறக்க மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

     

  • AIBDPA சிறப்பு பேரவைக்கூட்டம் – ஊட்டி & கோவையில்

    AIBDPA மாநிலத்தலைவர், மாநிலச் செயலர் கலந்து கொள்ளும் சிறப்புக்கூட்டம்.

              நீலகிரி மாவட்ட AIBDPA சங்கம் 09-04-2015ல் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேரவைக்கூட்டத்திலும்,

     

    IMG_20150410_145704

    கோவை சிறப்புக்கூட்டத்தில் மாநிலச்செயலர் தோழர்.CKN உரை.

                  கோவை மாவட்ட AIBDPA சங்கம் 10-04-2015ல் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேரவைக்கூட்டத்திலும் 

                  நமது AIBDPA மாநிலத்தலைவர் தோழர்.S. மோகன்தாஸ், மாநிலச்செயலர் தோழர்.C.K. நரசிம்மன், ஈரோடு AIBDPA மாவட்டச் செயலர் தோழர். குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

  • பாரத பிரதமர் மோடியின் உபதேசம்

    ஊருக்கா  (யாருக்கு)  உபதேசம்   ?

          சமையல் எரிவாயு, உணவு, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளுக்கான மானியங்களை படிப்படியாக வெட்டி, ஒட்டுமொத்தமாக மானியங்களைப் பறிப்பது என்ற முடிவோடு மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

          இதன் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு மானியத்தை வெட்டுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றமே தலையிட்டு உத்தர விட்டபிறகும் கூட, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை கொடுக்கவேண்டுமென நாடு முழுவதுமுள்ள மக்களை மோடி அரசு கட்டாயப்படுத்தி யுள்ளது. இதன் நோக்கம், ஒட்டுமொத்தமாக மானிய சிலிண்டரை ஒழித்துக்கட்டுவதே ஆகும்.

         இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக, ஒவ்வொரு அரசு விழாவிலும் பிரதமர் மோடி பேசுகையில், மானிய சிலிண்டர் பெறுவது குற்றம் என்ற பாணியில் பேசி வருகிறார். முதலில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மானிய சிலிண்டர் பெறுவதை கைவிட வேண்டும் என்றார். இப்போது கார்ப்போரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றுபவர்கள் மானிய சிலிண்டர் பெறுவதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

         மும்பையில், ரிசர்வ் வங்கியின் 80ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடை பெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் 15.3 கோடி பேர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்து கின்றனர். ஒவ்வொரு வங்கியும் தங்கள் ஊழியர்கள் சிலிண்டருக்கான மானியங்கள் பெறுவதை விட்டுக்கொடுப்பதை உறுதிப்படு்த்த வேண்டும். இதுவரை 2 லட்சம் வாடிக்கையாளர் கள் தாமாகவே முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை துறந்துள்ளனர். இதேபோல் பெரும் தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் சிலிண்டர் மானியத்தை கைவிட ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

        அடுத்து மாநில , மத்திய அரசு ஊழியர்கள், பொதுதுறை ஊழியர்கள்  அதிகாரிகள் என அவரது பட்டியலில் நடுத்தர வர்க்கத்தினரையும் அதைத்தொடர்ந்து அனைவரையும் சேர்ப்பார் என்று தெரிகிறது.

         மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில்  கார்ப்பொரேட்  நிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகளை  அள்ளி  வழங்கியுள்ளது. சலுகைகளின் மதிப்பு  5.49 லட்சம் கோடி ரூபாய்.

       பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள். கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு  கோடிக்கணக்கில் சலுகைகள் அளித்து விட்டு அதன் ஊழியர்களிடம் சில நூறு ரூபாய்களை விட்டுத் த்ருமாறு உபதேசம் செய்கிறார் .

    மோடி யாருக்காக செயல்படுகிறார் ?

         அதானிகளுக்கு அள்ளி வழங்கும் வள்ளல் பாமரனிடம் மானியங்களை விட்டுக் கொடுக்கச் சொல்லும் விந்தை.

              தங்கள் கட்சி உறுப்பினர்கள் 8.80 கோடியில்  இலவசங்களை விட்டு கொடுத்தவர்கள் எத்தனை பேர்? சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் வார்டு கவுன்சிலர் தொடங்கி MLA,MP, அமைச்சர்களில் இலவசங்களை  விட்டுக் கொடுத்தவர்கள் எத்தனை பேர்? பெரும் முதலாளிகள் எத்தனை பேர் ????

          5ஆண்டுகளில் மன்மோகன் சுற்றிய  நாடுகளை 300ரே நாட்களில் சுற்றி காசைகரியாக்கும் பிரதமரே !

    உபதேசம் ஊருக்கென்றால் இனிக்கும். 

  • 2G – அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு – மாறன் சகோதரர்களின் சொத்துக்கள் முடக்கம்

    அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை – 742 கோடி சொத்துக்கள் முடக்கம்

    ஏர்செல்  –  மேக்சிஸ் 2G -ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களின் 742கோடி சொத்துக்களை முடக்கிட மத்திய அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

              காலம் கடந்தாலும் விரைந்து நீதி கிடைத்திட நடவடிக்கை அவசியம்.

  • பஞ்சப்படி உயர்வு 01-04-2015 முதல் 0.2சதம்


    01-04-2015 முதல் பஞ்சப்படி (IDA) 0.2 சதம் உயர்ந்து மொத்தம் 100.5 சதமாக மாறியுள்ளது என தெரியவருகிறது