• பாரத பிரதமர் மோடியின் உபதேசம்

  ஊருக்கா  (யாருக்கு)  உபதேசம்   ?

        சமையல் எரிவாயு, உணவு, வேளாண்மை உள்பட பல்வேறு துறைகளுக்கான மானியங்களை படிப்படியாக வெட்டி, ஒட்டுமொத்தமாக மானியங்களைப் பறிப்பது என்ற முடிவோடு மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

        இதன் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு மானியத்தை வெட்டுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றமே தலையிட்டு உத்தர விட்டபிறகும் கூட, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை கொடுக்கவேண்டுமென நாடு முழுவதுமுள்ள மக்களை மோடி அரசு கட்டாயப்படுத்தி யுள்ளது. இதன் நோக்கம், ஒட்டுமொத்தமாக மானிய சிலிண்டரை ஒழித்துக்கட்டுவதே ஆகும்.

       இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக, ஒவ்வொரு அரசு விழாவிலும் பிரதமர் மோடி பேசுகையில், மானிய சிலிண்டர் பெறுவது குற்றம் என்ற பாணியில் பேசி வருகிறார். முதலில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மானிய சிலிண்டர் பெறுவதை கைவிட வேண்டும் என்றார். இப்போது கார்ப்போரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியாற்றுபவர்கள் மானிய சிலிண்டர் பெறுவதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

       மும்பையில், ரிசர்வ் வங்கியின் 80ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடை பெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் 15.3 கோடி பேர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்து கின்றனர். ஒவ்வொரு வங்கியும் தங்கள் ஊழியர்கள் சிலிண்டருக்கான மானியங்கள் பெறுவதை விட்டுக்கொடுப்பதை உறுதிப்படு்த்த வேண்டும். இதுவரை 2 லட்சம் வாடிக்கையாளர் கள் தாமாகவே முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை துறந்துள்ளனர். இதேபோல் பெரும் தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் சிலிண்டர் மானியத்தை கைவிட ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

      அடுத்து மாநில , மத்திய அரசு ஊழியர்கள், பொதுதுறை ஊழியர்கள்  அதிகாரிகள் என அவரது பட்டியலில் நடுத்தர வர்க்கத்தினரையும் அதைத்தொடர்ந்து அனைவரையும் சேர்ப்பார் என்று தெரிகிறது.

       மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில்  கார்ப்பொரேட்  நிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் தர்ம தாராளத்துடன் சலுகைகளை  அள்ளி  வழங்கியுள்ளது. சலுகைகளின் மதிப்பு  5.49 லட்சம் கோடி ரூபாய்.

     பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கும்மாளமடித்து வருகிறார்கள். கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு  கோடிக்கணக்கில் சலுகைகள் அளித்து விட்டு அதன் ஊழியர்களிடம் சில நூறு ரூபாய்களை விட்டுத் த்ருமாறு உபதேசம் செய்கிறார் .

  மோடி யாருக்காக செயல்படுகிறார் ?

       அதானிகளுக்கு அள்ளி வழங்கும் வள்ளல் பாமரனிடம் மானியங்களை விட்டுக் கொடுக்கச் சொல்லும் விந்தை.

            தங்கள் கட்சி உறுப்பினர்கள் 8.80 கோடியில்  இலவசங்களை விட்டு கொடுத்தவர்கள் எத்தனை பேர்? சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் வார்டு கவுன்சிலர் தொடங்கி MLA,MP, அமைச்சர்களில் இலவசங்களை  விட்டுக் கொடுத்தவர்கள் எத்தனை பேர்? பெரும் முதலாளிகள் எத்தனை பேர் ????

        5ஆண்டுகளில் மன்மோகன் சுற்றிய  நாடுகளை 300ரே நாட்களில் சுற்றி காசைகரியாக்கும் பிரதமரே !

  உபதேசம் ஊருக்கென்றால் இனிக்கும்.