• புரட்டி போட்டது பூமி அதிர்ச்சி – நேபாளத்தை – பலி 4000ஐ தாண்டுகிறது.

    சக்திமிக்க நிலநடுக்கம் – 7.9 ரிக்டர் அளவு – துயர்துடைக்க கைகொடுப்போம்.

    IMG_148709397570994

                     25-04-2015 அன்று இந்திய நேரப்படி காலை 11.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9ஆக பதிவானது. தலைநகர் காத்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்திநகர் என நேபாளத்தையே புரட்டிப் போட்டது. பலி4000க்கும் மேல் எனவும் படுகாயம் 8500க்கும் மேலிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

              இந்த நிலநடுக்கம் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், சென்னை வரை உணரப்பட்டது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72ஆக இருக்கிறது.