• AIBDPA நெல்லை மாவட்ட சிறப்புக்கூட்டம்.

    29-05-2015 மாலை  நெல்லையில் நடைபெற்ற AIBDPA மாவட்டச் சிறப்புக் கூட்டம்

            மத்திய செயற்குழு முடிவின்படி 78.2 சத பஞ்சப்படி உத்தரவை அமுல்படுத்தவும், நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை வழங்கிடக் கோரியும் பாரதப் பிரதமருக்கு அஞ்சலட்டை அனுப்பிடும் நிகழ்ச்சியுடன் சிறப்புக் கூட்டமும் நடைபெற்றது.

    JpegJpeg

                  நெல்லை மாவட்டத்தலைவர் தோழர். தாமஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அஞ்சலி உரை நிகழ்த்திய மாவட்டச் செயலர் தோழர். கிருஷ்ணன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

           அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றிட தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக தோழர். முத்துச்சாமி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

     

  • AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழு – தூத்துக்குடியில்.

    2015 ஜூன் 14ல் மாநிலச் செயற்குழு தூத்துக்குடி

    தோழர். P.C.வேலாயுதம் அரங்கில்.

                தமிழ் மாநிலச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் அவர்கள் தலமையில் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3வது தெரு, எண்16. தோழர். P.C. வேலாயுதம் நினைவரங்கில் 14-06-2015 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளதால் அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் தவராது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

            நமது பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் செயற்குழுவில் கலந்து கொண்டு துவக்கிவைத்து உரையாற்றுகிறார்.

    ஆய்படு பொருள்

    1. அறிக்கைகள்  :- (அ) செயல் அறிக்கை  (ஆ) நிதி நிலை அறிக்கை.
    2. அமைப்பு நிலை:-   (அ) உறுப்பினர் சேர்ப்பு – புதுப்பித்தல்   (ஆ) பகுதிப்பணம் அனுப்பிய விவரம்  (இ) மாவட்ட மாநாடுகள்  (ஈ)  மாநில அளவில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள்
    3. மத்திய செயற்குழு முடிவுகள் – போராட்டம்
    4. டெலி பென்ஷனர் சந்தா சேர்ப்பு
    5. காலியான மாநில நிர்வாகிகள் பதவிகளை நிரப்புதல்
    6. தீர்மானங்கள்.

    தோழமை வாழ்த்துக்களுடன்,

    C.K.நரசிம்மன்,

    மாநிலச்செயலர்.

    தமிழ்நாடு.

  • FORUMத்தின் கன்வீனராக BSNLEU பொதுச் செயலர் தோழர். அபிமன்யூ

    13-05-2015ல் நடைபெற்ற FORUM கூட்டத்தில் தோழர். P. அபிமன்யூ  FORUM கன்வீனராக ஏகமனதாகத் தேர்வு.

    25_abi

  • தொலைத்தொடர்பு அமைச்சருடன் AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

    13-05-2015 அன்று தோழர். சங்கர் பிரசாத் தத்தா MPயுடன் AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N.நம்பூதிரியும் தொலைத்தொடர்பு அமைச்சரைச் சந்தித்து  ஓய்வூதியர் பிரச்சனைகளை விவாதித்தனர்.

                 ஓய்வூதியர்களுக்கு 78.2 சத பஞ்சப்படி இணைப்பு வழங்குவதில் உள்ள காலதாமதத்தையும் அதற்கான கேபினட் குறிப்பு தயாராவதில் உள்ள சுணக்கத்தையும் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்திடம் விளக்கமாக எடுத்துரைத்ததோடு அது சம்பந்தமான குறிப்புகளை கடிதமாக அமைச்சரிடம் வழங்கினர். அமைச்சரும் சாதகமான முடிவுகளை வெகு விரைவில் எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

                  மேலும் BSNL ஓய்வூதியர்களுக்கு  மருத்துவப்படி வழங்கிட உள்ள தடையாணையை விலக்கிடவும், BSNL ஊழியர் குடியிருப்புகளை சந்தை விலையை விட குறைவான விலையில் ஓய்வூதியர்களுக்கு வாடகைக்கு வழங்கிடவும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. சாதகமான முடிவுகளை எடுப்பதாக அமைச்சர் கூறினார். 

          FORUM தலைவர்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை DOT அதிகாரிகளோடு ஆலோசிக்க உள்ளதாகவும் BSNL-MTNL பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட ஆலோசிப்பதாகவும் அமைச்சர் கூறினார். அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை வெகு விரைவில் துவங்கிட தோழர். நம்பூதிரி கேட்டுக்கொண்டதை அடுத்து தொலைத்தொடர்பு அமைச்சரும் ஏற்றிக்கொண்டார்.

           மேற்கண்ட ஆலோசனை கூட்டம் சிறப்பாக அமைய உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சங்கர் பிரசாத் தத்தாவிற்கும், தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்திற்கும் AIBDPA ஆலோசகர் தோழர்.V.A.N. நம்பூதிரி நன்றி கூறினார்.

  • AIBDPA சென்னை மாநிலச்சங்க அமைப்புதின மாநாடு.

    11-05-2015 AIBDPA சென்னை மாநிலச்சங்கம் உதயம்.

             இன்று AIBDPA சென்னைமாநிலச் சங்கத்தை முறையாக தனி மாநிலச் சங்கமாக தோழர். K.G.ஜெயராஜ், அகில இந்திய பொதுச் செயலர் துவக்கி வைத்தார்.

             அமைப்பு தின மாநாட்டை தோழர். B. சுப்பிரமணியன் தலைமையேற்றார். 

            தேசியக்கொடியினை தோழியர். செண்பகவல்லியும், சங்கக்கொடியை பொதுச் செயலர் தோழர்.K.G.ஜெயராஜும் ஏற்றி வைத்தனர். தியாகிகளுக்கு அஞ்சலியை தோழர்.N.V.N. பாலகிருஷ்ணனும்,  தோழர். G.S. நரசிம்மன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

                 அகில இந்திய துணைத் தலைவர் தோழர். M. மோகன்தாஸ், AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். K. ஆறுமுகம், BSNLEU சென்னை மாநிலச் செயலர் தோழர். K. கோவிந்தராஜ் ஆகியோர் அமைப்பு மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.

             2015 மே 16,17,18 தேதிகளில் விருதுநகரில் நடைபெறும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டிற்கு AIBDPA சென்னை மாநில அமைப்பு மாநாடு ரூபாய் 5000/- நன்கொடை வழங்கியுள்ளது.

  • ஓய்வூதியர்களின் மேதின சிறப்புக் கூட்டம் – வேலூரில்.

    மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேதின சிறப்புக் கூட்டம் – வேலூரில்.

     

    IMG-20150511-WA0002

    IMG-20150511-WA0000

    IMG-20150511-WA0001

    09-05-2015 வேலூரில் நடைபெற்ற மே தின சிறப்புக் கூட்டத்தின் ஒரு பகுதி.

     

  • AIBDPA ஜாம்நகர் மத்தியச் செயற்குழு போராட்ட அறிவிப்பு

    மருத்துவப்படி மற்றும் 78.2 சத பஞ்சப்படி வழங்கிடக் கோரி மாபெரும் பட்டினிப்போர்

          2015 ஏப்ரல் 28 & 29 தேதிகளில் ஜாம்நகரில் நடைபெற்ற மத்தியச் செயற்குழு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி இரண்டு கட்ட போராட்ட அறைகூவலை விடுத்துள்ளது.                           

          போராட்டம் 1. அனைத்து ஓய்வூதியர்களும் 2015 மே 3வது வாரத்திற்குள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அஞ்சல் அட்டையில் எழுதி பாரத பிரதமருக்கு அனுப்புவது.

            போராட்டம் 2. 2015-ஜூலை 21 & 22 தேதிகளில் அனைத்து CCA அலுவலகம் முன்பும் தொடர் உண்ணாவிரதம் இருப்பது. 

           கோரிக்கைகள்:- 1) 10-06-2013க்கு முன்பு BSNLலில் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் 78.2சத பஞ்சப்படியை உடனே வழங்கு!

        2) BSNL ஓய்வூதியருக்கு காலாண்டிற்கொருமுறை வழங்கிடும் மருத்துவப்படியை வழங்கிட உள்ள தடையை நீக்கு!!

           நேபாள பூகம்ப நிதி:-  மத்திய செயற்குழு முடிவின்படி அனைத்து மாவட்டச்சங்கங்களும் நேபாள பூகம்ப நிதி வசூல் செய்து பாரதப் பிரதமரின் நலநிதிக்கு அனுப்பிடவும்.

    விரிவான மத்திய செயற்குழு முடிவுகளைப் பார்க்கவும்.

    click-here-1

     

     

  • AIBDPA ஜாம்நகர் மத்தியச் செயற்குழு முடிவுகள்

    2நாள் பட்டினிப் போர் 78.2 பஞ்சப்படி  உத்தரவு வெளியிடக்கோரி

            2015 ஏப்ரல் 28&29 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற மத்தியச் செயற்குழு இன்றைய சூழ்நிலையை ஆழ்ந்து பரிசீலித்தது. மேலும் 78.2 பஞ்சப்படியினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கையும் தடை செய்யப்பட்ட மருத்துவப்படி வழங்கிடக் கோரியும் இரண்டுகட்ட போராட்ட அறைகூவலை விட்டுள்ளது. 

    போராட்டம்

    1. 2015 மே 3வது வாரத்தில் பாரதப்பிரதமருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அட்டை அனுப்புவது.

    2. 2015 ஜூலை 21&22 தேதிகளில் CCA அலுவலகம் முன்பு தொடர் பட்டினிப்போர் நடத்துவது .

            இடைக்கால அறிக்கையும் இடைக்கால நிதி அறிக்கையும் விரிவான கலந்துரையாடலுக்குப் பின் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேபாள பூகம்பத்திற்கு நிதி வசூலித்து அனுப்பிட முடிவு செய்யப்பட்டது. 

    அடுத்த அகில இந்திய மாநாடு ஆந்திரபிரதேசத்தில்

    மத்திய செயற்குழு முடிவு.