• தொலைத்தொடர்பு அமைச்சருடன் AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

    13-05-2015 அன்று தோழர். சங்கர் பிரசாத் தத்தா MPயுடன் AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N.நம்பூதிரியும் தொலைத்தொடர்பு அமைச்சரைச் சந்தித்து  ஓய்வூதியர் பிரச்சனைகளை விவாதித்தனர்.

                 ஓய்வூதியர்களுக்கு 78.2 சத பஞ்சப்படி இணைப்பு வழங்குவதில் உள்ள காலதாமதத்தையும் அதற்கான கேபினட் குறிப்பு தயாராவதில் உள்ள சுணக்கத்தையும் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்திடம் விளக்கமாக எடுத்துரைத்ததோடு அது சம்பந்தமான குறிப்புகளை கடிதமாக அமைச்சரிடம் வழங்கினர். அமைச்சரும் சாதகமான முடிவுகளை வெகு விரைவில் எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

                  மேலும் BSNL ஓய்வூதியர்களுக்கு  மருத்துவப்படி வழங்கிட உள்ள தடையாணையை விலக்கிடவும், BSNL ஊழியர் குடியிருப்புகளை சந்தை விலையை விட குறைவான விலையில் ஓய்வூதியர்களுக்கு வாடகைக்கு வழங்கிடவும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. சாதகமான முடிவுகளை எடுப்பதாக அமைச்சர் கூறினார். 

          FORUM தலைவர்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை DOT அதிகாரிகளோடு ஆலோசிக்க உள்ளதாகவும் BSNL-MTNL பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட ஆலோசிப்பதாகவும் அமைச்சர் கூறினார். அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை வெகு விரைவில் துவங்கிட தோழர். நம்பூதிரி கேட்டுக்கொண்டதை அடுத்து தொலைத்தொடர்பு அமைச்சரும் ஏற்றிக்கொண்டார்.

           மேற்கண்ட ஆலோசனை கூட்டம் சிறப்பாக அமைய உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சங்கர் பிரசாத் தத்தாவிற்கும், தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத்திற்கும் AIBDPA ஆலோசகர் தோழர்.V.A.N. நம்பூதிரி நன்றி கூறினார்.