• தோழர். P. முருகேசன் மறைவிற்கு அஞ்சலி

  AIBDPA மதுரை மாவட்டத்தலைவர் தோழர். P. முருகேசன் மறைவு.

              ITEU, E3, E4, TNTCWU, AIBDPA என பல்வேறு தொழிற்சங்கங்களில் முக்கியத் பொறுப்புக்களில் பணியாற்றி சமூக பொறுப்புடன் தனது இறுதிகாலம் வரை மக்கள் பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரும் AIBDPA மதுரை மாவட்டத் தலைவருமான தோழர். P. முருகேசன் இன்று 29-06-2015 அதிகாலை 0230 மணி அளவில் மரணமடைந்தார்.

                  மதுரையில் இயக்கத்தைக் கட்டுவதில் முன்னணி தோழராக செயல்பட்ட தோழர். P. முருகேசனுக்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

            அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மதுரை மாவட்டத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

 • ரயில்வேயில் தனியார்மயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  2015 ஜூன் 30ல் ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து  ஆர்ப்பாட்டம்

  நடத்தும் BSNLEU வுடன் AIBDPA.

   images (1)

          ஆளும் BJP அரசின் அடுத்த இலக்காக இரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இது அமைத்துள்ள ” பிபேக் தேப்ராய்” கமிட்டியின் பரிந்துரைப்படி…..

     ரயில்வேயின் கணக்குகளை வணிகமுறை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவது

        ஒரு சுயேச்சையான கட்டுப்பாட்டுக்குழு உருவாக்குவது 

         ரயில்வேயின் பாதுகாப்பு, ஊழியர்களின் வீட்டுவசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதியை அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு விடுவது

  எல்லாவற்றிக்கும் மேலாக 

          இருப்புப்பாதைகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, இருப்புப்பாதை தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரயில் வண்டிகளை இயக்குவது என பல பிரிவுகளாக பிரித்து தனியார் மயப்படுத்துவது போன்ற பரிந்துறைகளை எதிர்த்து 

         ரயில்வே சங்கங்கள் 30-06-2015 அன்று நாடு முழுவதும் ” கருப்புதினம்”  கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.

                அதற்கு ஆதரவாக BSNLEU மத்திய செயற்குழு 30-06-2015ல் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளது. நமது மத்தியச் சங்கமும் அதில் கலந்து கொள்ள வேண்டுகோள் விட்டுள்ளது.

          நாடு முழுவதும் நடைபெறும் கன்டண ஆர்ப்பாட்டத்தில் நாமும் கலந்து கொள்வோம். மாவட்ட, கிளை அளவில் BSNLEU தோழர்களோடு AIBDPA  தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் தனியார் மயத்திற்கெதிரான குரலெழுப்புவோம்.

   

 • AIBDPA தமிழ்மாநிலச் சங்க சுற்றறிக்கை

  AIBDPA தமிழ்மாநிலச் சங்க சுற்றறிக்கை எண் : 6.

  AIBDPA 6th Circular

   

 • இந்திய மக்களின் வாங்கும் சக்தியும் விலைவாசியும்

  இந்திய மக்களின் இன்றைய வாங்கும்  சக்தி

           விலைவாசிகளும் மக்களின் வருமானமும் 

  FB_IMG_1435208794530

  பெட்ரோலிய பொருட்கள் விலை – புலி பாய்ச்சல்

  தங்கம் விலை – மான் பாய்ச்சல்

  காய்கறி, பருப்பு விலை – கங்காரு ஓட்டம்,

  தொலைபேசி மின்சாரக்கட்டணம் – முயல் வேகம்

  ஆனால்

  மக்களின் வருமானமோ = ஆமை வேகம்

  “முதலாளிகளின் வருமானம் – ஜெட் வேகம்”

          கடந்த ஓராண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்து  உலக பணக்காரர்களின் வரிசையில் 13வது இடத்திலிருந்து  4வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்திய மக்களில் 6பேருக்கு ஒருவர் பட்டினியால் வாடுகின்றனர்.

 • பாண்டியில் AIBDPA மாவட்டச் சிறப்புக் கூட்டம்.

  பாண்டிச்சேரியில் AIBDPA ஓய்வூதியர் சிறப்புக் கூட்டம்.

        23-06-2015 அன்று  AIBDPA பாண்டிச்சேரி மாவட்ட ஓய்வூதியர்களின் சிறப்புக் கூட்டம் பாண்டி மாவட்டத் தலைவர் தோழர். K. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். M. பாலசுப்பிரமணியன் வரவேற்றார். 30க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

             மாநிலச் செயலர் தனது உரையில் நடைபெற்ற மத்திய, மாநிலச் சங்க செயற்குழு முடிவுகள்,  78.2 சத பஞ்சப்படி பிரச்சனையின் உண்மை நிலை, 2015 ஜூலை 21 & 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் உண்ணாவிரதம் மற்றும் இன்றைய அரசியல் விஷயம் என அனைத்து விபரங்களையும் விவரித்ததோடு புதிய  உறுப்பினர் சேர்க்கைக்கான திட்டமிடுதலையும் நயம்பட எடுத்துரைத்தார்.

             CITU மாவட்ட உதவித் தலைவரும் AIBDPA உறுப்பினருமான தோழர். K. முருகன் தனது உரையில் 2015 செப்டம்பர் 2ல் மத்திய சங்கங்களால் திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் அதனை பாண்டியில் வெற்றிகரமாக்கிட செய்ய வேண்டிய பணிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

        BSNLEU  மாவட்டச் செயலர் தோழர். A. சுப்பிரமணியன், BSNLEU மாவட்ட உதவித் தலைவர் தோழர். கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் தோழர். S. கோவிந்தராஜ் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 • சர்வதேச யோகாதினம்

  21-06-2015

  சர்வதேச யோகாதினம் 

  இன்று கொண்டாட்டம்.

  FB_IMG_1434871356107FB_IMG_1434872494676

   

             இந்திய மக்கள் தொகையில் 6பேருக்கு ஒருவர் பட்டினி என ஐ.நா. நிறுவன புள்ளி விபரம் கூறுகிறது. அவர்களுக்கு தேவை முழுமையான, திருப்தியான உணவு. – ” வெறும் வயிற்றில் (பட்டினியில்) யோகா செய்ய முடியாது.” – அதை தரமுடியாத அரசு விளம்பரம் தேடி அலைகிறது.

  பசி தீர்க்க வழியில்லை !!

  போகம் செய்ய நிலமில்லை !!

  தாகம் தீர்க்க தண்ணீரில்லை !!

  அடிப்படைவசதி ஏதுமில்லை !!

  மூச்சு முட்டும் வாழ்க்கையிலே

  மூச்சுப் பயிற்சி தான் தீர்வா ???

  IMG-20150621-WA0006IMG-20150621-WA0005IMG-20150621-WA0004வாட்ஸ் அப்பில் சுட்டது.

   

 • வெட்ரன் தலைவர் தோழர். நாராயன் மித்ரா சிங் மறைவு.

  AIBDPA கொல்கத்தா தொலைபேசி மாநில உதவித் தலைவர்

  தோழர். நாராயன் மித்ரா சிங் மறைவுக்கு அஞ்சலி.

  21002_761490527297193_5804783332693906121_n

           கொல்கத்தா தொலைபேசி மாநில லைன்ஸ்டாப் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களின் தலைவராக NFPTE காலம் தொட்டு பணியாற்றிய தோழர். N.M. சிங் இன்று 20-06-2015 மாலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

           பிரிவால் வாடும் அவர்தம்  குடும்பத்தினருக்கும் கொல்கத்தா தொலைபேசி மாநிலத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

 • திண்டுக்கல்லில் AIBDPA மாநிலச் செயலர் கலந்து கொண்ட அஞ்சல்-ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற்குழு

  16-06-2015 திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர். C.K.N சிறப்புரை.

           அஞ்சல் – ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க தமிழ் மாநிலச் செயற்குழு கடந்த 16-06-2015 அன்று அதன் மாநிலத் தலைவர் தோழர். N. கண்ணையன் தலைமையில் திண்டுக்கல்லில் துவங்கியது. அனைத்து ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். N.L. ஸ்ரீதரன் துவக்கி வைத்து பேசினார்.

             அகில இந்திய பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரன், AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை. தோழர். K. பாலபாரதி MLA, மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

 • மதுரை முன்னணி ஓய்வூதியர் கூட்டத்தில் மாநிலச் செயலர் தோழர். CKN.

  மதுரையில் AIBDPA முன்னணி ஓய்வூதியர் கூட்டம்.

         கடந்த 15-06-2015 மாலை 0430 மணி அளவில் AIBDPA மதுரை மாவட்ட முன்னணி ஓய்வூதியர்களின் சிறப்புக் கூட்டம் மதுரை மாவட்டத் தலைவர் தோழர். C. முருகேசன் தலைமயில் நடைபெற்றது. 21க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். 

             நடைபெற்ற மத்திய, மாநிலச் சங்க செயற்குழு முடிவுகள்,  78.2 சத பஞ்சப்படி பிரச்சனையின் உண்மை நிலை, 2015 ஜூலை 21 & 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் உண்ணாவிரதம், புதிய  உறுப்பினர் சேர்க்கை மற்றும் இன்றைய அரசியல் விஷயம் என அனைத்து விபரங்களையும் விவரித்ததோடு புதிய  உறுப்பினர் சேர்க்கைக்கான திட்டமிடுதலையும் நயம்பட எடுத்துரைத்தார்.

 • தோழர்.A. M. பாட்டீல் மறைவுக்கு அஞ்சலி

  BSNLEU குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணம்.

             ஹிமாசல் பிரதேசம் டல்ஹௌசியில் 16-06-2015 முதல் நடைபெறும் BSNLEU மத்தியச் செயற்குழுவில் கலந்து கொண்ட குஜராத் மாநிலச் செயலர் தோழர். A.M. பாட்டீல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

            அன்னாரின் மரணச்செய்தி கேட்டு வருந்துகிறோம். அவர்தம் குடும்பத்தினருக்கு  AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் இதயபூர்வ இரங்கலை தெரிவிக்கிறது.