• 78.2 சத பஞ்சப்படி பெற இருந்த முக்கிய தடை உடைத்து முன்னேற்றம்.

  தொலைத்தொடர்பு அமைச்சர் கேபினட் குறிப்புக்கு அனுமதி வழங்கினார்.

          திருத்தி அமைக்கப்பட்ட கேபினட் குறிப்பு DOTயிலிருந்து கடந்த 02-06-2015 அன்று தொலைத்தொடர்பு அமைச்சரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்குப் பின் மீண்டும் DOTக்கு வந்துள்ளதாக 09-06-2015ல் உறுப்பினர்(நிதி) திரு. அன்னி மோராயீஸை சந்தித்த AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி தெரிவித்தார்.

      அடுத்த கட்டமாக மெம்பர் சர்வீசஸுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நான்கு நோடல் துறைகளுக்கு வரிசை கிரமாக அனுப்பப்படும். இந்த பணிகள் முடிந்த பின்  இறுதியாக கேபினட் அமைச்சக அனுமதிக்கு அனுப்பப்படும்.

        20-11-2014 டெல்லி சஞ்சார் பவன் நோக்கி வரலாற்று சிறப்புமிக்க பேரணி.

       மத்திய செயற்குழு முடிவின்படி முதற்கட்ட போராட்டமாக பாரத பிரதமருக்கு 40,000க்கும்  மேற்பட்ட அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது. 

       13-05-2015 தொலைத்தொடர்பு அமைச்சருடன் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

        09-06-2015 உறுப்பினர் (நிதி)யுடன் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

        09-06-2015 நமது பொதுச் செயலர் தோழர். ஜெயராஜ் இயக்குனர் (EST)ருடன் சந்திப்பு. இது போன்ற தொடர்ந்து நடத்திய நமது சந்திப்பு மற்றும் போராட்டம் வெற்றி.

         AIBDPA, FORUM, BSNLEU சங்கங்கள் சரியான நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு பாதி வெற்றியை பெற்றுள்ளோம். முழுமையான உத்தரவு பெறும் வரை நமது திட்டமிட்ட போராட்டங்கள் தொடரும். மேலும் அனைத்து  CCA அலுவலகம் முன்பும் திட்டமிட்டபடி 21 & 22-07-2015 தேதிகளில் தொடர் உண்ணாவிரதம் நடைபெறும்.