• AIBDPA விருதுநகர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

    15-06-2015ல் சிறப்பாக நடைபெற்ற விருதுநகர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

          காலை 1100 மணி அளவில் துவங்கிய கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியாக AIBDPA தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் எழுச்சிமிக்க கோஷங்களுக்கு இடையே சங்கக்கொடியை ஏற்றி வைத்தார். 

    JpegJpeg

           AIBDPA விருதுநகர் மாவட்டத் தலைவர் தோழர். S. முருகேசன் தலைமையில் துவங்கிய மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அஞ்சலிஉரையை மாவட்டப் பொருளாளர் தோழர். M. பெருமாள்சாமி நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

    Jpeg Jpeg Jpeg

                 தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வூதியர்பிரச்சனைகளை குறிப்பாக 78.2 சத பஞ்சப்படி பெறுவதில் உள்ள உண்மைநிலை, இன்றைய அரசியல் சூழ்நிலை போன்ற தகவல்களை விளக்கமாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் எடுத்துரைத்தார்.