• திருப்பதியில் AIBDPA சங்க அகில இந்திய மாநாடு

  06-07-2015ல் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம்.

              06-07-2015 அன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் BSNLEU, AIBDPA மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட சிறப்பான அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் கமிட்டிக் கூட்டம் AIBDPA மாவட்டத் தலைவர் தோழர். Y.N. மூர்த்தி தலைமையில் தொடங்கியது. வந்திருந்த அனைவரையும் BSNLEU மாவட்டச் செயலர் தோழர். Y.S.ராஜூ வரவேற்றார். 

                AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி, BSNLEU மாநிலத்தலைவர் தோழர். G. மோகன்ரெட்டி, BSNLEU AGSம் மாநிலச்செயலருமான தோழர். J.சம்பத்ராவ், CITU தோழர். முரளிதரன், APRTC தோழர். பாலசுப்பிரமணியன், AIBDPA மாநிலச் செயலர் தோழர். ராமச்சந்துருடு, BSNLEU AGS தோழர். M. தாரநாத், மாவட்டச் செயலர் தோழர். ராஜூரெட்டி, AIBDPA, தோழர். M. ராமச்சந்திரைய்யா DGM RTD மற்றும் பல தொழிற்சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

          பின்னர் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குப் பின் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவராக தோழர். Y.ஸ்ரீநிவாசரெட்டி, MLC, வரவேற்புக் குழு பொதுச் செயராக BSNLEU மாவட்டச் செயலர் தோழர். Y.S.ராஜூ, வரவேற்புக் குழு இணைச் செயராக AIBDPA மாவட்டச் செயலர் தோழர். M.ராஜா ரெட்டி, பொருளாளராக தோழர். R.D.V.பிரசாத் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

         மத்தியச் சங்க ஆலோசனையோடு மாநாட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 • பஞ்சப்படி உயர்வு 01-07-2015 முதல் 2.1சதம்

  01-07-2015 முதல் பஞ்சப்படி (IDA) 2.1 சதம் உயர்ந்து மொத்தம் 102.6 சதமாக மாறியுள்ளது .