• திருச்சியில் AIBDPA மாவட்டச் சங்க சிறப்புக்கூட்டம்

    10-07-2015 ல் திருச்சியில் தகவல் பலகை திறப்பு மற்றும் சிறப்புக் கூட்டம்.

                     திருச்சி மாவட்ட AIBDPA சங்க சிறப்புக் கூட்டம் தோழர். P.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தகவல் பலகையை AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

            முன்னதாக நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். ஜான் பாட்சா வரவேற்றார். முதல் செய்தியினை BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். T. தேவராஜ் வெளியிட்டார்.

             BSNLEU மாவட்டச் செயலர் தோழர். அஸ்லம் பாட்சா, AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

            கூட்ட முடிவில் தோழர். சின்னையன் SDE Rtd, நன்றி கூறினார்.