• தேசம் காக்க தேசம் தழுவிய வேலைநிறுத்தம் – 02-09-2015

  மத்திய சங்கங்கள் அறைகூவல் – ஆதரவாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக  அரை நாள் தார்ணா மாவட்ட தலைநகரங்களில் 

  IMG-20150823-WA0005FB_IMG_1440737867350

  தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே ! பொதுத்துறைகள விற்காதே !

  ஓய்வூதியத்தை பங்கு சந்தையில் போடாதே !

  புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடு!

  காலிப்பணி இடங்களை நிரப்பிடு !  உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மத்திய சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் 02-09-2015 அன்று நடத்திட அறைகூவல் விட்டுள்ளன. அதில் BSNL உள்ளிட்ட பொதுத்துறை சங்கங்களும் கலந்து கொள்கின்றன.

                இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும் மாவட்ட அளவில் அரை நான் தார்ணா நடத்திட முடிவு செய்துள்ளன. நமது மாவட்டச் சங்கங்கள் உரிய ஆலோசனை செய்து பங்கெடுக்க மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • ஜூலையில் மொபைல் இணைப்பு வழங்கும் சேவையில் நம்பர் ஒன்னாக BSNL

  2015 ஜூலை மாதத்தில் மொபையில்  சேவை இணைப்பு வழங்கியதில் நம்பர் ஒன்னாக BSNL.

               2015 ஜூலை மாதத்தில் BSNL நிறுவனம் தான் அதிக மொபைல் இணைப்புக்களை கொடுத்து நம்பர் ஒன்னாக  முன்னணியில்  உள்ளது.

  BSNL           :       16 லட்சம் இணைப்புகள்

  AIRTEL         :        11.90 லட்சம் இணைப்புகள்

  IDEA             :        10.25 லட்சம் இணைப்புகள்

            BSNL லின் மொபைல் இணைப்புகள் மே மாதத்தில் 8.6  லட்சமாகவும் ஜூன் மாதத்தில் 11 லட்சமாகவும் இருந்த விற்பனை இந்தளவு உயர்வுக்கு காரணம் 7வது கட்ட மொபைல் விரிவாக்கமும், இலவச ரோமிங் திட்டமும், ஊழியர்களின் உழைப்புமே ஆகும்.

         மேலும் MNP திட்டத்திலும் முன்னேற்றமே துவங்கியுள்ளது.   மற்ற ஆப்பரேட்டர்களுக்கு மாறியவர்களை விட மற்ற ஆப்பரேட்டர்களிடமிருந்து  BSNLலுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளது.  

  மேலும் முன்னேற பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.

   

   

   

   

   

 • சென்னை மாவட்ட ஓய்வூதியர்களின் சிறப்புக் கூட்டம்

  24-08-2015 ல் சென்னை மாவட்ட AIBDPA சிறப்புக் கூட்டம்.

  மாநிலச்செயலர் தோழர் CKN பங்கேற்பு.

                   சென்னை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக் கூட்டம் மாவட்ட உதவித் தலைவர் தோழர். சின்னதுரை  தலைமையில் நடைபெற்றது. நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். சாயிராம் வரவேற்றார். 

           சிறப்புக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 2015 செப்டம்பர் 02ல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் அறை நாள் தார்ணா, 78.2 பஞ்சப்படி, புதிய உறுப்பினர் சேர்ப்பு, அகில இந்திய மாநாடு – திருப்பதி பற்றிய திட்டமிடுதலோடு AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார்.

          சென்னை மாவட்ட AIBDPA சங்கத்தில் நீண்ட காலமாக மாவட்ட பொருளாளராக இருந்ததோடு மாநிலச்சங்கப் பணிக்கு பேரூதவியாக பணியாற்றிய தோழர் வாசுதேவன் குடும்ப சூழ்நிலை காரணமாக தஞ்சைக்கு இடமாறுதலில் செல்வதால் தோழர் வாசுதேவனுக்கு சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் புதிய மாவட்ட பொருளாளராக தோழர். துருவன் ஏகமனதாக  தேர்வு செய்யப்பட்டார். 

          கூட்ட முடிவில் தோழர். துருவன் நன்றி கூறினார்.

 • அகில இந்திய மாநாடு – திருப்பதியில் – 2015 டிசம்பர் 8,9 தேதிகளில்

  AIBDPA அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில்.

                பெரும்பான்மையான மத்தியச் சங்க செயற்குழு மற்றும் அனைத்து மாநிலச் சங்கச் செயலர்களின் ஒப்புதலோடும் நமது அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறும் என நமது பொதுச் செயலர் தோழர்.K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

                       மத்திய செயற்குழு 2015 டிசம்பர் 7ம்தேதி நடைபெரும் எனவும் அதற்கான பயண ஏற்பாடுகளை மாநில, மாவட்டச் செயலர்கள் உரிய முறையில் செய்திட வேண்டியுள்ளார்.

 • சுதந்திர தின வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் 69வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  independence-day-india

 • 12-08-2015ல் FORUMத்தின் சார்பில் நடைபெறும் கண்டன முழக்கத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  12-08-2015ல் துணை டவர் நிறுவனத்தை அமைக்கும் அரசின் முடிவை  கைவிடக்கோரி FORUMத்தின் சார்பில் நடைபெறும் கண்டன முழக்கத்திற்கு AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  அன்பான தோழர்களே !

            05-08-2015ல் கூடிய மத்திய அரசின்  கேபினட் மந்திரிசபை BSNL நிறுவனத்தை காப்பாற்றுவதாக கூறி அதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆலோசனைகளை முன்மொழிந்துள்ளது.

           BSNL நிறுவனம் திருப்பி வழங்கிய BWA ஸ்பெக்ட்ரத்திற்கான ரூபாய் 6700 கோடிக்கு பதில் வெறும் 169.16 ரூபாய் வழங்கிட முடிவு.

            மேலும் BSNL நிறுவனத்தின் 65,000 டவர்களை பிரித்து துணை டவர் கம்பேனி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. 

                 இது போன்ற மோசமான பரிந்துரைகளை ஏற்க மறுத்து நமது கண்டணத்தை பதிவு செய்திட 12-08-2015ல் நாடு தழுவிய அளவில் அனைத்து கிளைகளிலும் FORUM சார்பில் நடைபெறும் கண்டண முழக்கத்தில் AIBDPA தமிழ் மாநிலச் சங்கமும் கலந்து கொள்ள அறைகூவல் விட்டுள்ளதால் மாநிலமுழுவதும் AIBDPA மாவட்டச் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.

 • தேச நலனை பாதுகாக்க தேசம் தழுவிய வேலைநிறுத்தம்

  மத்தியச் சங்கங்கள் பங்கு கொள்ளும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 02-09-2015.

   

   

 • AIBDPA தமிழ் மாநிலச் சங்கச் சுற்றறிக்கை

  AIBDPA தமிழ் மாநிலச் சங்கச் சுற்றறிக்கை எண் : 7.

   

  சுற்றறிக்கை AIBDPA Circular 7

 • சிறப்பாக நடைபெற்ற AIBDPA புதுவை மாவட்டமாநாடு

  புதுவை மாவட்ட AIBDPAவின் 2வது மாநாடு – 01-08-2015.

                    01-08-2015 சனிக்கிழமையன்று புதுச்சேரி SEGA ART GALLARYயில் வைத்து  AIBDPA மாவட்டத் தலைவர் தோழர். K. சிவக்குமார் தலைமையில் புதுவை 2வது மாவட்ட  மாநாடு சிறப்பாக தொடங்கியது.

                 AIBDPA அகில இந்திய உதவித் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் துவக்க உரை நிகழ்த்தினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ, AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

                       மாநாட்டின் முடிவில் மாவட்டத் தலைவராக தோழர். S. ஜெயராமன், மாவட்டச் செயலரக தோழர். P. சக்திவேல், மாவட்டப் பொருளாளராக தோழர். P. மதியழகன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

  IMG_20150801_102059838_HDRIMG_20150801_120145571

  IMG_20150801_105037409IMG_20150801_130104218IMG_20150801_115439027