• 12-08-2015ல் FORUMத்தின் சார்பில் நடைபெறும் கண்டன முழக்கத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  12-08-2015ல் துணை டவர் நிறுவனத்தை அமைக்கும் அரசின் முடிவை  கைவிடக்கோரி FORUMத்தின் சார்பில் நடைபெறும் கண்டன முழக்கத்திற்கு AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் ஆதரவு ஆர்ப்பாட்டம்.

  அன்பான தோழர்களே !

            05-08-2015ல் கூடிய மத்திய அரசின்  கேபினட் மந்திரிசபை BSNL நிறுவனத்தை காப்பாற்றுவதாக கூறி அதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஆலோசனைகளை முன்மொழிந்துள்ளது.

           BSNL நிறுவனம் திருப்பி வழங்கிய BWA ஸ்பெக்ட்ரத்திற்கான ரூபாய் 6700 கோடிக்கு பதில் வெறும் 169.16 ரூபாய் வழங்கிட முடிவு.

            மேலும் BSNL நிறுவனத்தின் 65,000 டவர்களை பிரித்து துணை டவர் கம்பேனி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. 

                 இது போன்ற மோசமான பரிந்துரைகளை ஏற்க மறுத்து நமது கண்டணத்தை பதிவு செய்திட 12-08-2015ல் நாடு தழுவிய அளவில் அனைத்து கிளைகளிலும் FORUM சார்பில் நடைபெறும் கண்டண முழக்கத்தில் AIBDPA தமிழ் மாநிலச் சங்கமும் கலந்து கொள்ள அறைகூவல் விட்டுள்ளதால் மாநிலமுழுவதும் AIBDPA மாவட்டச் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.