• ஜூலையில் மொபைல் இணைப்பு வழங்கும் சேவையில் நம்பர் ஒன்னாக BSNL

  2015 ஜூலை மாதத்தில் மொபையில்  சேவை இணைப்பு வழங்கியதில் நம்பர் ஒன்னாக BSNL.

               2015 ஜூலை மாதத்தில் BSNL நிறுவனம் தான் அதிக மொபைல் இணைப்புக்களை கொடுத்து நம்பர் ஒன்னாக  முன்னணியில்  உள்ளது.

  BSNL           :       16 லட்சம் இணைப்புகள்

  AIRTEL         :        11.90 லட்சம் இணைப்புகள்

  IDEA             :        10.25 லட்சம் இணைப்புகள்

            BSNL லின் மொபைல் இணைப்புகள் மே மாதத்தில் 8.6  லட்சமாகவும் ஜூன் மாதத்தில் 11 லட்சமாகவும் இருந்த விற்பனை இந்தளவு உயர்வுக்கு காரணம் 7வது கட்ட மொபைல் விரிவாக்கமும், இலவச ரோமிங் திட்டமும், ஊழியர்களின் உழைப்புமே ஆகும்.

         மேலும் MNP திட்டத்திலும் முன்னேற்றமே துவங்கியுள்ளது.   மற்ற ஆப்பரேட்டர்களுக்கு மாறியவர்களை விட மற்ற ஆப்பரேட்டர்களிடமிருந்து  BSNLலுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளது.  

  மேலும் முன்னேற பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.

   

   

   

   

   

 • சென்னை மாவட்ட ஓய்வூதியர்களின் சிறப்புக் கூட்டம்

  24-08-2015 ல் சென்னை மாவட்ட AIBDPA சிறப்புக் கூட்டம்.

  மாநிலச்செயலர் தோழர் CKN பங்கேற்பு.

                   சென்னை மாவட்ட AIBDPA சங்க சிறப்புக் கூட்டம் மாவட்ட உதவித் தலைவர் தோழர். சின்னதுரை  தலைமையில் நடைபெற்றது. நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். சாயிராம் வரவேற்றார். 

           சிறப்புக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 2015 செப்டம்பர் 02ல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் அறை நாள் தார்ணா, 78.2 பஞ்சப்படி, புதிய உறுப்பினர் சேர்ப்பு, அகில இந்திய மாநாடு – திருப்பதி பற்றிய திட்டமிடுதலோடு AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார்.

          சென்னை மாவட்ட AIBDPA சங்கத்தில் நீண்ட காலமாக மாவட்ட பொருளாளராக இருந்ததோடு மாநிலச்சங்கப் பணிக்கு பேரூதவியாக பணியாற்றிய தோழர் வாசுதேவன் குடும்ப சூழ்நிலை காரணமாக தஞ்சைக்கு இடமாறுதலில் செல்வதால் தோழர் வாசுதேவனுக்கு சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது. மேலும் புதிய மாவட்ட பொருளாளராக தோழர். துருவன் ஏகமனதாக  தேர்வு செய்யப்பட்டார். 

          கூட்ட முடிவில் தோழர். துருவன் நன்றி கூறினார்.