• சஞ்சார் பவனில் AIBDPA தலைவர்கள்

  78.2 % பஞ்சப்படி கோப்பின் செயல்பாடுகளை கண்டறிய ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரியும் தோழர். K.G ஜெயராஜூம் சஞ்சார் பவன் சென்று விசாரணை.

       கடந்த 28-09-2015 அன்று நமது AIBDPA தலைவர்கள்  ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரியும் தோழர். K.G ஜெயராஜூம் சஞ்சார் பவன் சென்று DOT செயலரை சந்தித்து 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பின் நிலை பற்றி  விசாரிக்க சென்றனர். DOT செயலர் வெளிநாடு சென்றுள்ளதால் உறுப்பினர் (நிதி)யை சந்தித்து விவாதித்தனர்.

          Expenditure இலாகா விளக்கம் கேட்ட விபரங்கள் இறுதி செய்யப்பட்டு உறுப்பினர் (நிதி)யிடமிருந்து இன்று  Establishment இலாகாவிற்கு அனுப்பப்பட்டதாக உறுப்பினர் (நிதி) தெரிவித்தார். Establishment இலாகாவின் DDGஐ சந்தித்து பேசினர். ஓரிரு நாட்களில் கேபினட் குறிப்பு அனுப்புவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    நமது மத்தியச் சங்க முயற்சிக்கள் தொடர வாழ்த்துக்கள். 

 • IDA – பஞ்சப்படி உயர்வு 01-10-2015 முதல் 5.3சதம்

  01-10-2015 முதல் பஞ்சப்படி (IDA) 5.3சதம் உயர்ந்து மொத்தம் 107.9 சதமாக மாறியுள்ளது .

   

 • தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் மறைவு

  தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் மறைவிற்கு அஞ்சலி.

           தென் மாவட்டங்களில் K.G. போஸ் அணியை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவராகவும் E3, E4 மற்றும் ITEU சங்கங்களில் மாவட்ட, மாநில பொறுப்புகளை வகித்தவரும் AIBDPA உறுப்பினருமான தோழர். D.J.J. பெத்தேல்ராஜ் அவர்கள் 21-09-2015 அன்று காலமானார்கள்.

          இருதய சிகிச்சைக்காக  சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்கள். தோழரின் மறைவிற்கு அஞ்சலியையும், அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் தெரிவிக்கிறது.

 • கும்பக்கோணத்தில் சிறப்பாக நடைபெற்ற AIBDPAவின் மாவட்டக்கூட்டம்.

  சிறப்புடன் நடைபெற்ற தஞ்சை கும்பக்கோணம் இணைந்த மாவட்டக்கூட்டம் 13-09-2015 .

         தஞ்சை கும்பக்கோணம் மாவட்டங்களின் இணைந்த மாவட்டக்கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். P.பக்கிரிசாமி தலைமையில் தொடங்கியது. மாவட்டச் செயலர் தோழர். R.A. பக்கிரிநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர்.  S. நடராஜா, BSNLEU கும்பக்கோணம் மாவட்டச் செயலர் தோழர். M. குருசாமி, BSNLEU தஞ்சை மாவட்டச் செயலர் தோழர். D. சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

            சங்கத்தின் வளர்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டமிடப்பட்டது. மேலும் அகில இந்திய மாநாட்டு சார்பாளர் தேர்வும் நடைபெற்றது. 78.2 % பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலை  பற்றி விவாதிக்கப்பட்டது.

            தஞ்சை பகுதியில் சங்க விரிவாக்கத்தை திட்டமிட தோழர். S.N. செல்வராஜ், தோழர். P. பக்கிரிசாமி, தோழர். K.R. பாஸ்கரன், தோழர். E. வாசுதேவன் உள்ளிட்ட தோழர்களின் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

          மாதம் ஒருமுறை பகுதிக்கூட்டமும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்டக்கூட்டமும் நடத்திட ஆலோசிக்கப்பட்டது.

 • அரக்கோணத்தில் AIBDPAவின் பகுதிக்கூட்டம்.

  12-09-2915ல் வேலூர் மாவட்ட பகுதிக்கூட்டம் அரக்கோணத்தில்.

      கடந்த 12-09-2015 அன்று வேலூர் மாவட்டத்தின் பகுதிக்கூட்டம் அரக்கோணத்தில் வைத்து தோழர். ஆதிகேசவன் தலைமையில் துவங்கியது. வந்திருந்த அனைவரையும் பகுதிகுழுச் செயலர் தோழர். ஜெகதீசன் வரவேற்றார்.

    மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதனும் மாநிலச் செயலர் தோழர் சி.கே.நரசிம்மனும் சிறப்புரை ஆற்றினர்.

            அகில இந்திய மாநாடு, ஓய்வூதியர் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. சங்க விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. 78.2% பஞ்சப்படி இன்றைய நிலை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

 • DOT செயலருடன் AIBDPA தலைவர்கள் சந்திப்பு

  காலதாமதமாகும் 78.2 % பஞ்சப்படி இணைப்பை வழங்குவதற்கான கேபினட் குறிப்பை அனுப்பிடக் கோரி

       நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10-06-2013க்கு முன்பு பணிஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பு பிரச்சனையில் தலையிட்டு அதற்கான கேபினட் குறிப்பை விரைவில் அனுப்பிடக்கேட்டு நமது சங்க ஆலோசகர் தோழர் V.A.N. நம்பூதிரியும் பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜூம் DOT செயலர் திரு. கார்கிடம் கடிதம் கொடுத்து அதன் மீது விவாதிக்கப்பட்டது. மேலும் அதனுடைய நகல் கடிதம் மெம்பர் – நிதி அன்னி மோராயீஸ் மற்றும் மெம்பர் – சர்வீசஸ் திரு. N.K. யாதவ் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் கேபினட் குறிப்பு தயார் செய்து அனுப்புவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • பாரத பிரதமருக்கு AIBDPA தலைவர்கள் கடிதம்

  78.2% பஞ்சப்படி இணைப்பை விடுபட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கிடக் கேட்டு பாரத பிரதமருக்கு கடிதம்.

           11-09-2015 அன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10-06-2013க்கு முன்பு பணிஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பு பிரச்சனையில் தலையிட்டு விரைவில் வழங்கிடக் கோரி புதுடெல்லியிலுள்ள இந்திய பிரதமரின் (south block) அலுவலகத்திற்கு சென்று கடிதம் கொடுத்தனர் நமது சங்க ஆலோசகர் தோழர் V.A.N. நம்பூதிரியும் பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜூம்.

    மேலும் அதன் நகல் கடிதத்தை நிதிஅமைச்சருக்கும், தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் வழங்கப்பட்டது. 

 • AIBDPA தமிழ் மாநிலச் சங்கச் சுற்றறிக்கை

  AIBDPA தமிழ் மாநிலச் சங்கச் சுற்றறிக்கை எண் : 8.

  Aibdpa Circular 8 9.9.2015

 • தேசம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஓய்வூதியர்களின் தார்ணா போராட்டம்

  வெற்றிகரமாக நடைபெற்ற மத்திய சங்கங்களின் தேசம் தழுவிய வேலைநிறுத்தம் -ஆதரவாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தார்ணா மாவட்ட தலைநகரங்களில்.

  போராட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் அனைவருக்கும்  நெஞ்சு நிறை நன்றி.

  சென்னையில் மத்திய, மாநில, பொதுத்தறை மற்றும் ஆசிரியர் ஓய்வூதியர் சங்கங்களின் தார்ணா.

  FB_IMG_1441640867342FB_IMG_1441640838096FB_IMG_1441640857047

  தூத்துக்குடியில் நடைபெற்ற ஓய்வூதியர்களின் தார்ணா

  JpegJpegJpeg

   வேலூரில் நடைபெற்ற ஓய்வூதியர்களின் தார்ணா

  20150902_11575920150902_12004120150902_123422

  ஈரோட்டில் நடைபெற்ற ஓய்வூதியர்களின் தார்ணா

  IMG_20150902_105543

   

 • பொது வேலைநிறுத்தம் 2015 செப்டம்பர் 02ல் பாரதமெங்கும்

  தார்மீக ஆதரவு தார்ணா – அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல்.

   ஓய்வூதியத்தை பாதுகாப்போம் !

  ஓய்வூதியர்களை பாதுகாப்போம் !!

  FB_IMG_1441097800857

  ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் :-

  • புதிய  பென்ஷன் திட்டத்தை ரத்து செய் !

  • 100 சத அகவிலைப்படுயை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைத்திடு !

  • காலிப் பணியிடங்களை நிரப்பிடு !

  • வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடு !

  • விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து !

  • EPF பென்ஷனை குறைந்தபட்சம் ரூபாய் 3050/-ஆக வழங்கிடு !

  • அனைத்து முறைசாரா, ஒப்பந்த ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 15,000/- வழங்கிடு !

  • தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்காதே !

  • தொழிலாளர் நலச் சட்டங்களை கறாராக அமுல்படுத்து !

  • பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை ரத்து செய் !

              AIBDPA மத்திய மாநிலச் சங்கங்கள் தார்மீக ஆதரவு. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் தார்ணாவில் கலந்து கொண்டு வேலைநிறுத்தம் வெற்றிபெற ஆதரவளிப்போம்.