• முத்தாய்ப்பாக அமைந்த ஈரோடு AIBDPA சங்க முப்பெரும்விழா

  கொடியேற்று விழா

  தகவல் பலகை திறப்பு விழா

  சிறப்புக் கருத்தரங்கம்

  என முப்பெருவிழா

           29-10-2015 இன்று காலை 1000 மணி அளவில் ஈரோடு தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் தோழர். A. சிவஞானம்  தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் AIBDPA சங்கக் கொடியை அ.இ.துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.  AIBDPA சங்க தகவல் பலகையை மாநிலச் செயலர் தோழர்.  C.K. நரசிம்மன் திறந்து வைத்தார். 

             காலை 11-00 மணி அளவில் ஈரோடுபெரியார் மன்றத்தில் வைத்து மாவட்டத்தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் சிறப்பான கருத்தரங்கம் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி வரவேற்றார். 

       “புதிய பொருளாதாரக் கொள்கையும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸூம், 

         ” உலக தொழிற்சங்க சம்மேளம் (WFTU)” 70 ஆண்டு நிறைவு என்ற தலைப்பில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் தோழர். S. முத்துசுந்தரமும்,

      “ஓய்வூதியர்களின் பிரச்சனைகளும் சங்க செயல்பாடும்” என்ற தலைப்பில் மாநிலச் செயலர் தோழர்.  C.K. நரசிம்மனும் தங்கள் கருத்துக்களை சிறப்பாக பதிவித்தனர். 

  கருத்தரங்கத்தை வாழ்த்தி AIBDPA கோவை மாவட்டச் செயலர் தோழர். L. உமாபதி, AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். P.  ராமசாமி, BSNLEU ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் L. பரமேஸ்வரன், AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். பங்கஜவல்லி. அஞ்சல் & ஆர்எம்எஸ் மாவட்டச் செயலர் தோழர். N. ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

           கருத்தரங்கை மாவட்டப் பொருளாளர் தோழர். S. அய்யாச்சாமி நன்றி கூறி நிறைவு செய்தார்.

   

 • AIBDPA தூத்துக்குடி பகுதி பொதுக்குழுக் கூட்டம் – கோவில்பட்டியில்

  27-10-2015 AIBDPA தூத்துக்குடி மாவட்ட பகுதி பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது

  தோழர். மோகன்தாஸ் சிறப்புஉரை

  தோழர். மோகன்தாஸ் சிறப்புஉரை

               AIBDPA தூத்துக்குடி மாவட்ட பகுதி பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் இன்று காலை 1100 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர். T.K. ஸ்ரீனிவாசன்  தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி உரையினை மாவட்ட உதவிச் செயலர் தோழர். கந்தசாமி நிகழ்த்திட வந்திருந்த அனைவரையும் மாவட்ட உதவித் தலைவர் தோழர். சுப்பையா வரவேற்றார்.

         மாவட்ட மட்ட செய்திகளையும் 78.2%பஞ்சப்படி இணைப்பு, அனைத்திந்திய மாநாடு போன்றவைகளைப் பற்றி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் எடுத்துரைத்தார். அனைத்திந்திய உதவித் தலைவரும் தமிழ்மாநிலத் தலைவருமான தோழர். S. மோகன்தாஸ் இன்றைய அரசியல் நிலையினையும் சிறப்பாக நடைபெற்ற 2015 செப் 2 பொது வேலைநிறுத்தம் பற்றிய சிறப்புகளையும், திருத்தி அமைக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களின் ஆபத்துகளையும் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

  Jpeg

  Jpeg

 • நெல்லையில் முப்பெரும் விழா 28-10-2015

  தோழர். D. கோபாலன் பணிநிறைவு பாராட்டுவிழா,

   சேவை மேம்பாட்டு கருத்தரங்கம்,

  விரிவடைந்த செயற்குழு

  IMG-20151024-WA0014

  CITU, BSNLEU, AIBDPA, TNTCWU &TNUEF தொழிற்சங்க தலைவர்கள் முன்னோடிகள் கலந்து கொள்ளும் விழா.

 • ஈரோட்டில் 29-10-2015ல் முப்பெருவிழா

  கொடியேற்று விழா

  தகவல் பலகை திறப்பு விழா

  சிறப்புக் கருத்தரங்கம்

  என முப்பெருவிழா

  நாள் : 29-10-2015 வியாழக்கிழமை

  நேரம் : காலை 10-30 மணி

  இடம் : பெரியார் மன்றம். ஈரோடு.

  தலைமை : தோழர். A. சிவஞானம் மாவட்டத்தலைவர்.

  தோழர். S. மோகன்தாஸ், மாநிலத் தலைவர்

  “புதிய பொருளாதாரக் கொள்கையும் மதச்சார்பின்மையும்”

  தோழர். S. முத்துசுந்தரம்

  ” உலக தொழிற்சங்க சம்மேளம் (WFTU)”

  தோழர்.  C.K. நரசிம்மன், மாநிலச் செயலர்

  ” சங்க செயல்பாடும் ஓய்வூதியர்களின் பிரச்சனைகளும்”

  வாழ்த்துரை : சகோதரச் சங்கங்கள்.

   

   

   

 • LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016

  LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016 க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திட மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

                    தோழர்களே நமது ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றிட   LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திடவும் அதற்கான  ஒப்படைச்சீட்டு (Acknowledgement)  பெறுவதை ஒவ்வொரு தோழரும் உறுதி செய்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

             மேலும் தரைவழி தொலைபேசி பயன்படுத்தும் ஓய்வூதியர்கள்  2016ம் ஆண்டுக்கான LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்)ழை CSCகளில் வழங்கிட வேண்டுகிறது. 

 • திருப்பதி அனைத்திந்திய மாநாடு 2016 பிப்ரவரி 2 & 3.

  திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த AIBDPA அகில இந்திய மாநாடு தேதி மாற்றப்பட்டு 2016 பிப்ரவரி 2 & 3 தேதிகளில் நடத்த மாநாட்டு வரவேற்புக்குழு அறிவிப்பு.

           BSNLEU ஆந்திர மாநிலச் செயலர் தோழர். J. சம்பத்ராவ் கலந்து கொண்ட AIBDPA அனைத்திந்திய மாநாட்டு வரவேற்புக்குழு 3வது அகில இந்திய மாநாட்டை வருகின்ற 2016 பிப்ரவரி 2 & 3 தேதிகளில் நடத்திட அறிவித்ததோடு அதற்கான பயண ஏற்பாடுகளை செய்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 • AIBDPA சங்க அமைப்பு தினம்.

  21-10-2015 AIBDPA சங்க அமைப்பு தினம்.

  அனைவருக்கும் இனிய அமைப்பு தின நல்வாழ்த்துக்கள்.

                சங்க செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை விளக்கியும், எதிர்கால கடமைகளை வலியுறுத்தியும் அனைத்து மாவட்ட மட்டங்களிலும் அமைப்பு தினத்தை சிறப்பாக கொண்டாட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

         21-10-2015 காலை 1100மணி அளவில் நாகர்கோவில் மாவட்டத்தில் அமைப்பு தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர். காளி பிரசாத் நாகர்கோவில் தொலைபேசி நிலையம் முன்பு கொடி ஏற்றி உரை நிகழ்த்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

   

  1443852720553

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

 • திருப்பதி அனைத்திந்திய மாநாடு தேதி மாற்றம்.

  திருப்பதியில் நடைபெறுவதாக இருந்த AIBDPA அகில இந்திய மாநாடு தேதி மாற்றம்.

      2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறுவதாக இருந்த நமது அகில இந்திய மாநாடு போதிய ஏற்பாடுகள் நிறைவடையாத நிலையில் 2016 பிப்ரவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஒத்தி வைக்கப்படுகிறது என நமது பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

 • FORUM தலைவர்கள் DOT செயலருடன் சந்திப்பு

  78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவு வெளியிடுவது சம்பந்தமாக DOT செயலருடன் FORUM – கோர் கமிட்டி தலைவர்கள் சந்திப்பு.

              FORUMத்தின் – கோர் கமிட்டி தலைவர்கள் தோழர்கள். அபிமன்யூ, கன்வீனர், தலைவர் சந்தேஸ்வர் சிங், பொதுச்செயலர் K. செபாஸ்டின், SNEA,  பொதுச்செயலர் பிரகலாத்ராய் AIBSNLEA ஆகியோர் கடந்த 07-10-2015 அன்று DOT செயலர் திரு. ராஜேஷ் கோர்கை சந்தித்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பு உத்தரவு வழங்குவதில் உள்ள காலதாமதத்தை நினைவுபடுத்தி தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். அவரும் உடனடியாக ஏற்பாடு செய்வதாக கூறினார்.

    மேலும் அடிஷனல் செயலர் திரு. சிவசைலத்தையும் சந்தித்தனர்.

 • வேலூர் மாவட்ட பொதுக் குழுக்கூட்டம்

  05-10-2015ல் வேலூரில் சிறப்பாக நடைபெற்ற AIBDPA மாவட்டக்குழுக் கூட்டம்.

      வேலூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். K. ஏழுமலை  தலைமையில் தொடங்கியது. மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

        மாநில அமைப்புச் செயலர் தோழர்.  C. ஞானசேகரன், தோழர். K. கிருஷ்ணமூர்த்தி,  SDE Rtd, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

              தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்பரையில் 78.2% பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலை, இன்றைய அரசியல்நிலை, இஆர்பி, மருத்துவ பில்களின் தேக்கநிலை உள்ளிட்ட கருத்தாக்கம் மாநிலச் செயலரின் உரையில் இடம்பெற்றது. தோழர். V.மணி, DGM Rtd பிஎஸ்என்எல்லின் வருவாயும் அதன் செலவினங்களையும் விரிவாக தனது உரையில் எடுத்துரைத்தார்.

           150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை தோழர். C. ஸ்ரீதரன் நன்றி கூறி முடித்து வைத்தார்.