• வேலூர் மாவட்ட பொதுக் குழுக்கூட்டம்

    05-10-2015ல் வேலூரில் சிறப்பாக நடைபெற்ற AIBDPA மாவட்டக்குழுக் கூட்டம்.

        வேலூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். K. ஏழுமலை  தலைமையில் தொடங்கியது. மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

          மாநில அமைப்புச் செயலர் தோழர்.  C. ஞானசேகரன், தோழர். K. கிருஷ்ணமூர்த்தி,  SDE Rtd, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

                தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்பரையில் 78.2% பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலை, இன்றைய அரசியல்நிலை, இஆர்பி, மருத்துவ பில்களின் தேக்கநிலை உள்ளிட்ட கருத்தாக்கம் மாநிலச் செயலரின் உரையில் இடம்பெற்றது. தோழர். V.மணி, DGM Rtd பிஎஸ்என்எல்லின் வருவாயும் அதன் செலவினங்களையும் விரிவாக தனது உரையில் எடுத்துரைத்தார்.

             150க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை தோழர். C. ஸ்ரீதரன் நன்றி கூறி முடித்து வைத்தார்.