• முத்தாய்ப்பாக அமைந்த ஈரோடு AIBDPA சங்க முப்பெரும்விழா

  கொடியேற்று விழா

  தகவல் பலகை திறப்பு விழா

  சிறப்புக் கருத்தரங்கம்

  என முப்பெருவிழா

           29-10-2015 இன்று காலை 1000 மணி அளவில் ஈரோடு தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்டத்தலைவர் தோழர். A. சிவஞானம்  தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் AIBDPA சங்கக் கொடியை அ.இ.துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.  AIBDPA சங்க தகவல் பலகையை மாநிலச் செயலர் தோழர்.  C.K. நரசிம்மன் திறந்து வைத்தார். 

             காலை 11-00 மணி அளவில் ஈரோடுபெரியார் மன்றத்தில் வைத்து மாவட்டத்தலைவர் தோழர். A. சிவஞானம் தலைமையில் சிறப்பான கருத்தரங்கம் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி வரவேற்றார். 

       “புதிய பொருளாதாரக் கொள்கையும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸூம், 

         ” உலக தொழிற்சங்க சம்மேளம் (WFTU)” 70 ஆண்டு நிறைவு என்ற தலைப்பில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் தோழர். S. முத்துசுந்தரமும்,

      “ஓய்வூதியர்களின் பிரச்சனைகளும் சங்க செயல்பாடும்” என்ற தலைப்பில் மாநிலச் செயலர் தோழர்.  C.K. நரசிம்மனும் தங்கள் கருத்துக்களை சிறப்பாக பதிவித்தனர். 

  கருத்தரங்கத்தை வாழ்த்தி AIBDPA கோவை மாவட்டச் செயலர் தோழர். L. உமாபதி, AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். P.  ராமசாமி, BSNLEU ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் L. பரமேஸ்வரன், AIBDPA மாநில உதவிச் செயலர் தோழர். பங்கஜவல்லி. அஞ்சல் & ஆர்எம்எஸ் மாவட்டச் செயலர் தோழர். N. ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

           கருத்தரங்கை மாவட்டப் பொருளாளர் தோழர். S. அய்யாச்சாமி நன்றி கூறி நிறைவு செய்தார்.