• AIBDPA ஆலோசகர் நம்பூதிரி மெம்பர் (நிதி) யோடு சந்திப்பு

    78.2 % பஞ்சப்படி இணைப்பு காலதாமதத்தை விரைவிபடுத்திடக் கோரி உறுப்பினர் (நிதி)யோடு AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி சந்திப்பு. 

            26-11-2015 அன்று AIBDPA ஆலோசகர் தோழர். VAN. நம்பூதிரி DOT உறுப்பினர் (நிதி) அன்னி மோராஸை  சந்தித்தார். 78.2 சத பஞ்சப்படி இணைப்பின் காலதாமதத்தை சுட்டிக்காட்டி திருத்தியமைக்கப்பட்ட கேபினெட் குறிப்பை செலவினங்களுக்கான செக்ஷனுக்கு உடனடியாக அனுப்பக் கேட்டுக்க கொண்டார். DOTயின் PSU செக்ஷனின் விளக்கத்தையும் இணைத்து விரைவில் வெளியிட வேண்டினார்.

  • AIBDPA நெல்லை மாவட்ட 2வது மாவட்ட மாநாடு

    IMG-20151124-WA0019IMG-20151124-WA0018

            AIBDPA நெல்லை மாவட்ட 2வது மாவட்ட மாநாடு 23-11-2015 அன்று மாவட்டத் தலைவர் தோழர். S.Thomas அவர்கள் தலமையில் நடை பெற்றது.

    புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    மாவட்டத் தலைவர் : தோழர் S.முத்துசாமி,

    மாவட்டச் செயலர் : தோழர் D.கோபாலன்,

    மாவட்டப்பொருளாளர் : தோழர். சீதாலட்சுமி

            புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் தமிழ்மாநிலச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.

  • AIBDPA நெல்லை மாவட்ட 2வது மாநாடு.

    23-11-2015ல் நெல்லை சீமையிலே எழுச்சியுடன் நடைபெறும் AIBDPA 2வது நெல்லை மாவட்ட மாநாடு.

    Jpeg

    Jpeg

     

    நாள் : 23-11-2015 திங்கள் கிழமை காலை 1000 மணி.

    இடம் : BSNLஊழியர் சங்கம்

    நெல்லை வண்ணாரப்பேட்டை GM அலுவலக வளாகம்.

    தலைமை : தோழர். S. தாமஸ், மாவட்டத் தலைவர், AIBDPA.

    வரவேற்புரை : தோழர். S. முத்துச்சாமி, AIBDPA.

    துவக்க உரை : தோழர். V. கிருஷ்ணன்., மாவட்டச் செயலர். AIBDPA.

    வாழ்த்துரை : தோழமை மற்றும் சகோதரச் சங்க தலைவர்கள்.

    சிறப்புரை :

    தோழர். S. மோகன்தாஸ்,     அனைத்திந்தியஉதவித் தலைவர், AIBDPA.

    தோழர். C.K. நரசிம்மன். மாநிலச் செயலர், AIBDPA.

    நன்றிஉரை : தோழர். P. சங்கரநாராயணன், AIBDPA.

  • கடலூர் மழைவெள்ள நிவாரண நிதி

    தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

               சமீப நாட்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. கடலூர் மக்களின் துயர்துடைக்க அவர்களுக்கான உதவிகளைச் செய்திட நமது மாநிலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

                மாவட்டச்செயலர்கள் தங்களது தோழர்களை அணுகி நிதி உதவி பெற்று மாநிலச்சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

    அனுப்ப வேண்டிய முகவரி :-

    தோழர். எஸ். முத்துகுமாரசாமி

    COM. S. MUTHUKUMARASAMY,

     INDIAN OVERSEAS BANK

    A/C. NO. 135501000003751

    IFS CODE : IOBA0001355

    MANJAKUPPAM

     

  • இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

     

  • NCCPA அனைத்திந்திய மாநாடு

    12227029_1659508674324576_301657230956862719_n12227028_1659508950991215_9187887839509902475_n

    06-11-2015ல் கொல்கத்தா எஸ் கே வியாஸ் நகரில் சிறப்புடன் துவங்கிய NCCPA அனைத்திந்திய மாநாடு

                கொல்கத்தா எஸ் கே வியாஸ் நகரில் 2015 நவம்பர் 6 மற்றும் 7 ம் தேதிகளில் NCCPA அனைத்திந்திய மாநாடு தோழர். R.L. பட்டாசார்ஜீ தலைமையில் துவங்கியது. தேசியக் கொடியை வரவேற்பு கமிட்டியின் தலைவர் தோழர். சிசில் பட்டாசார்ஜீயும், NCCPA கொடியை NCCPA தலைவர் தோழர். R.L. பட்டாசார்ஜீயும் ஓய்வூதியர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.                      

               முன்னாள் மேற்கு வங்க நிதி அமைச்சர் தோழர். ஆசிம் தாஸ் குப்தா மாநாட்டை துவக்கி வைத்து இன்றைய மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை விமர்சித்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி மகாசம்மேளனம் சார்பில் தோழர். K.K.N. குட்டி, தொழிற்சங்கம் சார்பில் தோழர். V.A.N. நம்பூதிரி, தோழர்.S.S. ராய் மற்றும் பல தலைவர்கள் பேசினர். 

          இரண்டாம் நாள் நிகழ்வாக அறிக்கை, வரவு செலவு அறிக்கை. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பேட்ரன்களாக : தோழர். V.A.N. நம்பூதிரி தோழர். R.L. பட்டாசார்ஜீ 

    தலைவராக :  சிவ் கோபால் மிஸ்ரா

    செயல் தலைவராக : தோழர்.S.S. ராய்

    பொதுச்செயலராக : தோழர். K.K.N. குட்டி, 

    துணைப் பொதுச்செயலர்களாக : தோழர்கள் : பவித்ரா ரஞ்சன் சக்ரபர்த்தி. K. ராகவேந்திரன்.

    உதவி பொதுச்செயலராக : தோழர்.  K.G. ஜெயராஜ் உட்பட 5 தோழர்கள்.

    பொருளாளராக : தோழர். H.L. சித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

    சிறப்பாக நடைபெற்ற மாநாட்டையும் புதிய நிர்வாகிகளையும் AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.