• NCCPA அனைத்திந்திய மாநாடு

    12227029_1659508674324576_301657230956862719_n12227028_1659508950991215_9187887839509902475_n

    06-11-2015ல் கொல்கத்தா எஸ் கே வியாஸ் நகரில் சிறப்புடன் துவங்கிய NCCPA அனைத்திந்திய மாநாடு

                கொல்கத்தா எஸ் கே வியாஸ் நகரில் 2015 நவம்பர் 6 மற்றும் 7 ம் தேதிகளில் NCCPA அனைத்திந்திய மாநாடு தோழர். R.L. பட்டாசார்ஜீ தலைமையில் துவங்கியது. தேசியக் கொடியை வரவேற்பு கமிட்டியின் தலைவர் தோழர். சிசில் பட்டாசார்ஜீயும், NCCPA கொடியை NCCPA தலைவர் தோழர். R.L. பட்டாசார்ஜீயும் ஓய்வூதியர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தனர்.                      

               முன்னாள் மேற்கு வங்க நிதி அமைச்சர் தோழர். ஆசிம் தாஸ் குப்தா மாநாட்டை துவக்கி வைத்து இன்றைய மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை விமர்சித்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி மகாசம்மேளனம் சார்பில் தோழர். K.K.N. குட்டி, தொழிற்சங்கம் சார்பில் தோழர். V.A.N. நம்பூதிரி, தோழர்.S.S. ராய் மற்றும் பல தலைவர்கள் பேசினர். 

          இரண்டாம் நாள் நிகழ்வாக அறிக்கை, வரவு செலவு அறிக்கை. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    பேட்ரன்களாக : தோழர். V.A.N. நம்பூதிரி தோழர். R.L. பட்டாசார்ஜீ 

    தலைவராக :  சிவ் கோபால் மிஸ்ரா

    செயல் தலைவராக : தோழர்.S.S. ராய்

    பொதுச்செயலராக : தோழர். K.K.N. குட்டி, 

    துணைப் பொதுச்செயலர்களாக : தோழர்கள் : பவித்ரா ரஞ்சன் சக்ரபர்த்தி. K. ராகவேந்திரன்.

    உதவி பொதுச்செயலராக : தோழர்.  K.G. ஜெயராஜ் உட்பட 5 தோழர்கள்.

    பொருளாளராக : தோழர். H.L. சித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

    சிறப்பாக நடைபெற்ற மாநாட்டையும் புதிய நிர்வாகிகளையும் AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.