• இனிய புத்தாண்டு 2016 நல்வாழ்த்துக்கள்

  சபதம்ஏற்போம் !  சபதம் ஏற்போம் !!

  புத்தாண்டில் சபதம் ஏற்போம் !!!

  நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை பெற 

  78.2% பஞ்சப்படியை பெற 

  புத்தாண்டில் சபதம் ஏற்போம் !!!!

   ஓய்வூதியத்தை பாதுகாப்போம் !

  ஓய்வூதியர்களை பாதுகாப்போம் !!

  பென்ஷனை பாதுகாக்க  போராடுவோம் ! 

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2016 நல்வாழ்த்துக்கள்.

 • “பென்ஷனர்ஸ் போஸ்ட்”

  சென்னையில் கோலாகலம்.

  அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் மத்தியச் சங்க பத்திரிக்கை ” பென்ஷனர்ஸ் போஸ்ட் ” வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலம்.

                    கடந்த 29-12-2015 அன்று சென்னை பூங்கா நகர் அஞ்சலக அலுவலகத்தில் வைத்து அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் மத்தியச் சங்கம் தனது சங்கப் பத்திரிக்கையாக  ” பென்ஷனர்ஸ் போஸ்ட்  ” என்ற பெயரில் பத்திரிக்கையை வெளியிட்டு அறிமுகப்படுத்தியது.

              மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளன மாநிலச் செயலர் தோழர். M. துரைப்பாண்டியன் பத்திரிக்கையை வெளியிட அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் தோழர். N.L. ஸ்ரீதரன் பெற்றுக் கொண்டார் . இவ்விழாவில் AIBDPA தமிழ் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

            சமூக அக்கறையுடன் ஓய்வூதியர்களின் பிரச்சனைகளையும் மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக தொடங்கப்பட்ட “பென்ஷனர்ஸ் போஸ்ட்” சீரும் சிறப்புடனும் நடைபயில AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  images (2)

 • FORUM சார்பில் தமிழமெங்கும் சிறப்புடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

  ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2% பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி அதனை உடனே வழங்கிடக்கோரி 22-12-2015அன்று தமிழகம் எங்கும் FORUM சார்பில் கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம் நடைபெற்றது.  அதில் பெருவாரியாக AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர். 

 • FORUM சார்பில் 22-12-2015ல் கண்டன முழக்கம்.

  ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி உடனே வழங்கிடக்கோரி கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம்.

           பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட 78.2% பஞ்சப்படி இணைப்பு பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்யும் DOT, BSNL நிர்வகத்தைக் கண்டித்தும் 78.2% பஞ்சப்படி இணைப்பை உடனே வழங்கிடக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2015 அன்று ” கருப்பு பேட்ஜ் ” அணிந்து கண்டன முழக்கமிட 10-12-2015ல் டெல்லியில் கூடிய அகில இந்திய FORUMத்தின் சார்பில்  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலத்திலும் FORUMத்தின் முடிவினை அமுல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

            AIBDPA மாவட்டச்  செயலர்கள் உரிய கவனம் செலுத்தி ஓய்வூதியர்களை பெருவாரியாக திரட்டி மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து போராட்டத்தை வெற்றிகரமாக்கிட மாநிலச் சங்கம் வேண்டுகிறது. 

   

 • 17-12-2015ல் தமிழகம் முழுவதும் சிறப்புடன் நடைபெற்ற ஓய்வூதியர் தினம்.

  Jpeg

  [Read More…]

 • 17-12-2015 ஓய்வூதியர் தினம்.

  ஓய்வூதியர் அனைவருக்கும் மாநிலச் சங்க வாழ்த்துக்கள். 

  சபதமேற்போம் ! சபதமேற்போம் ! ! போராடிப் பெற்ற சலுகைகளைப் பாதுகாக்க சபதமேற்போம் !!!

  78.2% பஞ்சப்படி இணைப்பு அனைவருக்கும் கிடைக்க போராடுவோம் !!!

  நிறுத்தப்பட்டமருத்துவப்படியினைப் அனைவருக்கும் பெற போராடுவோம் !!!

  அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர் தினத்தை சிறப்பாகக் கொண்டாட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • சிறப்பாக நடைபெற்ற AIBDPA விருதுநகர் மாவட்ட சிறப்புக்கூட்டம்.

  14-12-2015ல் விருதுநகரில் நடைபெற்ற ஓய்வூதியர்களின் சிறப்புக்கூட்டம்.

                   AIBDPA விருதுநகர் மாவட்ட சிறப்புக்கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர். S. முருகேசன் தலைமையில் BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து  நடைபெற்றது.  மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி  அனைவரையும் வரவேற்றார்.

              AIBDPA அனைத்திந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தனது சிறப்புரையில் 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பின் இன்றைய நிலை, மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அதன் பாதக அம்சங்கள், திருப்பதியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாடு, சென்னை கடலூர் பெருவெள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். BSNLEU விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். S. ரவிந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

                      அகில இந்திய மாநாட்டிற்கான சார்பாளர்களாக 4 தோழர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட பொதுக்குழுக் கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய். 4,000/- வழங்கப்பட்டது. 

 • AIBDPA திருச்சி மாவட்ட சிறப்புக்கூட்டம்

  10-12-2015ல் திருச்சியில் கூடிய ஓய்வூதியர்களின் சிறப்புக்கூட்டம்.

  20151210_142834

                  AIBDPA திருச்சிமாவட்ட சிறப்புக்கூட்டம் மாவட்டத் தலைவர் தோழர். P.கிருஷ்ணன் தலைமையில் BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து  துவங்கியது. மாவட்டச் செயலர் தோழர். ஜான் பாஷா  வரவேற்றார்.

              AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி, BSNLEU திருச்சி மாவட்டச்செயலர் தோழர். S. அஸ்லம் பாஷா சிறப்புரை ஆற்றினர்.

                      அகில இந்திய மாநாட்டிற்கான சார்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய். 4,000/- வழங்கப்பட்டது. 

 • சென்னை & கடலூர் வெள்ள நிவாரண நிதி

  மாநிலச்சங்க வேண்டுகோளின்படி சென்னை &கடலூர் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

        AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் விடுத்த வேண்டுகோளின்படி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களும் அனுப்பிய ரூபாய் 18,000/- கடலூர் வெள்ள நிவாரணமாக அனுப்பப்பட்டது.  அதன் பின்னர் 02-12-2015 பிறகு பெய்த கனமழையின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களையே புரட்டிப் போட்டதால் இரண்டாவது தடவையாக  வெள்ள நிவாரணம் கோரப்பட்டது.

             கீழ்க்கண்ட மாவட்டச் சங்கங்கள் தங்களது உறுப்பினர் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை (நிதி)யை உரிய மட்டங்களுக்கு நிவாரணமாக அனுப்பியுள்ளன. மற்ற மாவட்டங்களும் இப்பணியை விரைவு படுத்திட வேண்டுவதோடு அனுப்பிய மாவட்டங்களுக்கு மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

  வேலூர் மாவட்டம் – ரூபாய் 11000/-

  திருப்பூர் – ரூபாய் 2000 /-

  ஈரோடு மாவட்டம் – ரூபாய் 2000/-

  நாகர்கோவில் மாவட்டம் – ரூபாய் 1000/-

            தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக நமது மத்தியச் சங்கம்  (CHQ) ரூபாய் 25,000/- அனுப்பியுள்ளது.மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.