• சென்னை & கடலூர் வெள்ள நிவாரண நிதி

  மாநிலச்சங்க வேண்டுகோளின்படி சென்னை &கடலூர் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

        AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் விடுத்த வேண்டுகோளின்படி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களும் அனுப்பிய ரூபாய் 18,000/- கடலூர் வெள்ள நிவாரணமாக அனுப்பப்பட்டது.  அதன் பின்னர் 02-12-2015 பிறகு பெய்த கனமழையின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களையே புரட்டிப் போட்டதால் இரண்டாவது தடவையாக  வெள்ள நிவாரணம் கோரப்பட்டது.

             கீழ்க்கண்ட மாவட்டச் சங்கங்கள் தங்களது உறுப்பினர் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை (நிதி)யை உரிய மட்டங்களுக்கு நிவாரணமாக அனுப்பியுள்ளன. மற்ற மாவட்டங்களும் இப்பணியை விரைவு படுத்திட வேண்டுவதோடு அனுப்பிய மாவட்டங்களுக்கு மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

  வேலூர் மாவட்டம் – ரூபாய் 11000/-

  திருப்பூர் – ரூபாய் 2000 /-

  ஈரோடு மாவட்டம் – ரூபாய் 2000/-

  நாகர்கோவில் மாவட்டம் – ரூபாய் 1000/-

            தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக நமது மத்தியச் சங்கம்  (CHQ) ரூபாய் 25,000/- அனுப்பியுள்ளது.மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது.

 • DOT அதிகாரிகளுடன் AIBDPA தலைவர்கள் சந்திப்பு.

  78.2 % பஞ்சப்படி இணைப்பை விரைவுப்படுத்த தோழர்கள். நம்பூதிரி, ஜெயராஜ் DDG (Estt) &DIR(Estt) யுடன் சந்திப்பு.

              கடந்த 10-12-2015 அன்று AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி, பொதுச் செயலர் தோழர். ஜெயராஜ் DDG (Estt) &DIR(Estt) யுடன் சந்தித்து 78.2 சத பஞ்சப்படி இணைப்பு கோப்பு சம்பந்தமாக பேசினர். செலவின இலாக்கா (Dept. Of Expenditure)வால் கேட்கப்பட்ட/ எழுப்பப்பட்ட வினாக்களுக்கு மறுவரையரை (redraft) செய்யப்பட்டு மெம்பர் சர்வீஸ், மெம்பர் நிதி, DOT செயலர் வழியாக தொலைத்தொடர்பு அமைச்சரின் ஒப்புதல் பெறப்படும் என்றும் பின்னர் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கம் பெறப்பட்டது.

                 செலவின இலாக்கா (Dept. Of Expenditure) ஒப்புதலுக்காக நிதி அமைச்சரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.