• பாண்டியில் நடைபெரும் சிறப்பு கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

          BSNLஐ வளப்படுத்த FORUM சார்பில் தமிழகமெங்கும் இருந்து பாண்டியில் நடைபெரும் சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து தோழர்களையும், தலைவர்களையும் AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது. மேலும் கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 • தியாகிகள் தினம்

  தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் பெயரால்  உறுதியேற்போம். 

   

               1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

                இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம்.