• 09-02-2016 வேலூரில் அனைத்திந்திய மாநாட்டு விளக்கக் கூட்டம்.

  09-02-2016ல் வேலூரில் சிறப்பாக நடைபெற்ற AIBDPA அகில இந்திய  மாநாட்டு விளக்கக் கூட்டம்.

      AIBDPA அனைத்திந்திய மாநாட்டு விளக்கக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். K. ஏழுமலை தலைமையில் தொடங்கியது. மாவட்டச் செயலர் தோழர். ஜோதி சுதந்திரநாதன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாநில அமைப்புச் செயலர் தோழர்.  C. ஞானசேகரன், தோழர். K. கிருஷ்ணமூர்த்தி,  SDE Rtd, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

              தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்பரையில் 78.2% பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலையை விளக்கியதோடு, காலதாமதத்தைக் கண்டித்து திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி வரும் 10-03-2016ல் மாநில / மாவட்ட அளவில் தார்ணா நடத்திட வேண்டுகோள் விடுத்தார். மேலும் இன்றைய அரசியல்நிலை, மருத்துவ பில்களின் தேக்கநிலை, பிஎஸ்என்னலில் நடைபெற உள்ள சங்க அங்கீகாரத் தேர்தல் உள்ளிட்ட கருத்தாக்கம் மாநிலச் செயலரின் உரையில் இடம்பெற்றது. 

                     திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டின் சிறப்புக்களை அதில் கலந்து கொண்ட தோழர். பழனிச்சாமி, DE, Rtd VLR விளக்கிபேசினார். 

           160க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. 

  1)  78.2% பஞ்சப்படி இணைப்பின் காலதாமதத்தைக் கண்டித்தும், அதனை உடனே வழங்கிடக் கோரியும்  திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி வரும் 10-03-2016ல் வேலூரில் சிறப்பாக தார்ணாவை நடத்துவது.

  2)  மே 2016ல் பிஎஸ்என்னலில் நடைபெற உள்ள 7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றி பெறச் செய்ய தேர்தல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.