• ஆதரவுக்கரம் நீட்டுவோம்.

  தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தை ஆதரித்து மாவட்ட அளவில் ஆதரவு இயக்கம் நடத்திடுவோம்.

    புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் !

  காலமுறை ஊதியம் வழங்கு !!

  காலிப்பணியிடங்எளை நிரப்பு !!!

        உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசு ஊழியர்கள் கடந்த 10-02-2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனர். 

             கடந்ததேர்தலில்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளி்த்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி ரத்து செய்யக் கோரி நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக  இயக்கங்கள் நடத்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது. மாவட்டச்சங்கங்கள் உரிய கவனம் செலுத்தி இயக்கங்கள் நடத்திடவும்.