• சிறப்பாக சென்னையில் நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம்.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய மத்திய அரசு ஊழியர்மகா சம்மேளனம், அஞ்சல் ஆர்எம்எஸ் சங்கம் மற்றும் AIBDPA சங்கம்.

                 19-02-2016 அன்று சென்னை PPMG அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்மகா சம்மேளனம், அஞ்சல் ஆர்எம்எஸ் சங்கம் மற்றும் AIBDPA சங்கங்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊழியர்மகா சம்மேளனம் பொதுச் செயலர் தோழர். துரைப்பாண்டியன், அஞ்சல் ஆர்எம்எஸ் சங்கப் பொதுச் செயலர் தோழர். ராகவேந்திரன் பேசினர். AIBDPA மாநிலச் செயலர் தோழர். நரசிம்மனும் கலந்து கொண்டார்.