• AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்.

    25-02-2016ல் சென்னையில் சிறப்பாக நடைபெற்ற AIBDPA பொதுக்குழுக்கூட்டம்.

     

        AIBDPA சென்னை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர். கோதண்டம் தலைமையில் தொடங்கியது. மாவட்டச் செயலர் தோழர். N. சாய்ராம் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

            தமிழ்மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையில் 78.2% பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலையை விளக்கியதோடு, காலதாமதத்தைக் கண்டித்து திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி வரும் 10-03-2016ல் மாநில / மாவட்ட அளவில் தார்ணா நடத்திட வேண்டுகோள் விடுத்தார். மேலும் இன்றைய அரசியல்நிலை, பிஎஸ்என்எலில் நடைபெற உள்ள சங்க அங்கீகாரத் தேர்தலில் நமது நிலை மற்றும் அதைச்சார்ந்த பணியினை விளக்கிக் கூறினார்.            

    1)  78.2% பஞ்சப்படி இணைப்பின் காலதாமதத்தைக் கண்டித்தும், அதனை உடனே வழங்கிடக் கோரியும் திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி வரும் 10-03-2016ல் சென்னையில் சிறப்பாக தார்ணாவை நடத்துவது.

    2)  மே 2016ல் பிஎஸ்என்னலில் நடைபெற உள்ள 7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றி பெறச் செய்ய தேர்தல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.