• வேலூரில் வருமானவரி ஆலோசனைக் கூட்டம்.

  சிறப்பாக நடைபெற்ற வருமானவரி ஆலோசனைக் கூட்டம்.

              26-03-2016 இன்று வேலூர் AIBDPA மாவட்டச் சங்கம் ஏற்பாடு செய்த வருமானவரி ஆலோசனைக் கூட்டம் தோழர். K. கிருஷ்ணமூர்த்தி SDE RTD தலைமையில் நடைபெற்றது. வருமானவரி பிடித்தம் மற்றும் நிதிகள் சம்பந்தமான விளக்கங்களை திருமதி. ஸ்ரீ காயத்திரி தேவி (சார்ட்டட் அக்கௌண்ட்) அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரிய முறையில் விளக்கிக் கூறினார். மிகவும் பயனுள்ளதாக அமைந்த அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 • முத்தாய்ப்பாக அமைந்த AIBDPA மதுரை மாநிலச் செயற்குழு

  18-03-2016ல் சிறப்புடன் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு.

   

               இன்று 18-03-2016ல் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் மாநிலச் செயற்குழு தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக சங்கக் கொடியை அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் ஏற்றிவைத்ததோடு மாநிலச் செயற்குழுவை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். மாநில உதவிச் செயலர் தோழர் A. மீனாட்சி சுந்தரம் அஞ்சலி உரை நிகழ்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். M. கதிரேசன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாநிலச் செயலர் தோழர்  C.K. நரசிம்மன் செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்தார். செயல் பாட்டு அறிக்கையின் மீது மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்ததில் பங்கெடுத்தனர். 

 • மதுரை மாவட்ட AIBDPA மாநாடு மற்றும் பொது அரங்கு

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  மதுரை மாவட்ட மாநாடும் பொது அரங்கும்.

  Jpeg

  Jpeg

  மதுரை AIBDPA 3வது மாவட்ட மாநாடு மாவட்டத்தலைவர் தோழர்.R.மகபூப்ஜான் தலைமையில் 17-03-2016 இன்று சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை மாவட்டச் செயலர் தோழர். N.C.ஆதீஸ்வரன் நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் துவக்க உரை ஆற்றினார். தென் மாவட்டச் செயலர்கள் தோழர்கள் M.அய்யாசாமி, D. கோபாலன், P. ராமர், மீனாட்சி சுந்தரம் மற்றும் அனைத்திந்திய அமைப்பு செயலர் தோழர். K. காளி பிரசாத் வாழ்த்துரை வழங்கினர்.

             மதிய நேர உணவு இடைவேளைக்கு பின்பு பொது அரங்கு நிழ்ச்சி தோழர். மகபூப்ஜான் தலைமையில் துவங்கியது. மதுரைமாவட்ட SNEA மாவட்டச்செயலர் K. தெய்வேந்திரன், AIBDPA தமிழ் மாநில செயலர் C.K. நரசிம்மன், AIBDPA பொதுச் செயலர் K.G.ஜெயராஜ், BSNLEU மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன், BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். S. ஜான் போர்ஜியா, TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.  N. சோனைமுத்து, ஆகியோர் பேசினர்.

              மதுரை மாவட்ட பொருளாளர் தோழர். K. கதிரேசன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

 • AIBDPA தமிழ்மாநில செயற்குழு 18-03-2016ல் மதுரையில்

  மதுரையில் தமிழ் மாநிலச் செயற்குழுவும் பொது அரங்கும்.

           AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 18-03-2016 வெள்ளிக் கிழமையன்று மதுரையில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் : மதுரை தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மைய வளாகம், முதல் மாடி மனமகிழ் மன்றம்.

  நேரம் : 18-03-2016 வெள்ளிக்கிழமை, காலை 1000 மணி

  துவக்க உரை : 

  பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ், AIBDPA

  ஆய்படு பொருள் 

  (1) (அ) செயல் அறிக்கை

      (ஆ) நிதி நிலை அறிக்கை

  (2) அமைப்பு நிலை

     (அ) உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்

     (ஆ) பகுதிப்பணம்

     (இ) மாவட்ட மாநாடுகள்.

     (ஈ) மாநில மாநாடு.

  (3) நடந்து முடிந்த இயக்கங்கள் பரிசீலனை

  (4) BSNLல் 7வது உறுப்பினர் சரிபார்ப்பு

  (5) மாநில அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்.

  (6) டெலிபென்ஷனர்

  (7) காலியான நிர்வாகிகள் பதவிகளை நிரப்புதல்

  (8) தீர்மானங்கள்

             மாநிலச் செயற்குழுவை ஒட்டி பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் கலந்து கொள்ளும் பொது அரங்கு நிகழ்ச்சி 17-03-2016 வியாழன் மாலை 02.00 மணி அளவில் நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

   

 • தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்ற 78.2% தார்ணா

  தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற தார்ணா.

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, நெல்லை, மதுரை, விருதுநகர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட அனைத்து மாவட்டச்சங்கங்களின்  சார்பிலும் சிறப்பாக தார்ணா நடைபெற்றது. சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டச் சங்கங்களையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது. 

  சென்னையில் தார் ணா :

  AIBDPA மாவட்டத் உதவித்தலைவர் தோழர். அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி தோழர். அன்புமணி, மாவட்டத் தலைவர், BSNLEU, தோழர். மகேந்திரன், மாநில உதவிப் பொருளாளர், BSNLEU, AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், BSNLEU அ. இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். S.செல்லப்பா ஆகியோர் பேசினர். AIBDPA மாவட்டச் செயலர் தோழர். சாயிராம் நன்றி கூறி தார்ணாவை முடித்து வைத்தார்.

  நாகர்கோவில் மாவட்டம் :

  மாவட்டத் உதவித்தலைவர் தோழர். சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி AIBDPA அனைத்திந்திய அமைப்பு செயலர் தோழர் காளிபிரசாத், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். மீனாட்சி சுந்தரம், தோழர். சுப்பிரமணியன் BSNLEU உட்பட போராட்டத்தை விளக்கி பேசினர்.

  தூத்துக்குடி மாவட்டம்:

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் தூத்துக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பில் தூடி தொலைத்தொடர்பு மாவட்ட அலுவலகம் முன்பு AIBDPA மாவட்டத்தலைவர் தோழர். T.K. சீனிவாசன் தலைமையில் மாலைநேர தார்ணா நடைபெற்றது.
  போராட்டத்தை விளக்கி AIBDPA மாவட்டச்செயலர் தோழர். P. ராமர், AIBDPA மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள். R. மைக்கேல் சர்குணர், K. கந்தசாமி, தோழர். P. பொன்னையா, மாவட்ட உதவித் தலைவர் தோழர். K. சுப்பையா, BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.M. ஜெயமுருகன், BSNLEU மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் பேசினர். மாவட்டப் பொருளாளர் தோழர். P. அய்யாபிள்ளை நன்றி கூறி தார்ணாவை நிறைவு செய்தார்.

  திருச்சி மாவட்டம் :

  மாவட்டத் தலைவர் தோழர். கிருஷ்ணன், மாவட்டச் செயலர். அஸ்லம் பாட்சா தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணா சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். ஜான் பாட்சா பேசினார்.

  திருநெல்வேலி மாவட்டம்:

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் திருநெல்வேலி மாவட்டச்சங்கத்தின் சார்பில் நெல்லை தொலைத்தொடர்பு மாவட்ட அலுவலகம் முன்பு AIBDPA மாவட்டத்தலைவர் தோழர். S. முத்துச்சாமி தலைமையில் தார்ணா நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். தாமஸ், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், தோழர்கள் சுந்தரராஜன், நடராஜன், முத்தையா ஆகியோர் பேசினர். BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். சுவாமி குருநாதன் வாழ்த்தி பேசினார். 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணாவை மாவட்டப் பொருளாளர் தோழர். அருள்சாமி நன்றி கூறி நிறைவு செய்தார்.

 • AIBDPA நாடு தழுவிய மாபெரும் தார்ணா

  78.2 % IDA MERGER உத்தரவு வெளியிடக்கோரி நாடு தழுவிய தார்ணா.

          அனைத்திந்திய சங்க தலைவர்கள் தோழர் நம்பூதிரி, தோழர் ஜெயராஜ் ராஜேஷ் எம்பியுடன் தொலைத்தொடர்பு துறை அமைச்சரை 09-03-2016 இன்று சந்தித்து கடிதம் அளித்ததுடன்  அவசியமற்ற காலதாமதத்தை சுட்டிக்காண்பித்து தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். அதில் முன்னேற்றம் இல்லாததால் மத்தியச் சங்கம் திட்டமிட்ட நாடு தழுவிய மாபெரும் தார்ணாவை சிறப்பாக நடத்திட கோரியுள்ளனர்.

          தார்ணாவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

 • உலக மகளீர் தினம்.

  வேலூர் மகளீர் ஓய்வூதியர்கள் சிறப்பாக மகளிர் தினக் கொண்டாட்டம்.

  அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

            வேலூரில் உள்ள ஓய்வூபெற்ற மகளிர் தோழர்கள் சர்வ தேச மகளிர் தினத்தை பயனுள்ள வகையில் கொண்டாட திட்டமிட்டு வேலூரில் உள்ள ஆதரவற்ற மகளிர் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அன்பளிப்பு அளித்துள்ளனர்.

                ஓய்வு பெற்ற நிலையிலும் மகளிர் தினத்தை பொருளுதவி வழங்கி சிறப்பாக கொண்டாடிய வேலூர் மகளிர் தோழர்களை மாநிலச்சங்கம் மனதாரப் பாராட்டுகிறது.

 • உலக மகளீர் தினம்.

  வேலூர் மகளீர் ஓய்வூதியர்கள் சிறப்பாக மகளீ்ர் தினக் கொண்டாட்டம்.

 • 78.2 % பற்றிய இன்றைய தகவல்.

  78.2% IDA MERGER-MEETING WITH SECRETARY, DOT

  Shri. J.S.Deepak , Secretary, Department of Telecom has assured the AIBDPA delegation that he will do the needful in extending the benefit of 78.2% IDA merger to BSNL pensioners. The delegation consisting Com.V.A.N.Namboodiri, Advisor, Com.K.G.Jayaraj, General Secretary and Com.R.A.Nair, Treasurer handed over him the letter of intimation of the Tirupati AIC’s decision for countrywide Mass Dharna on 10-03-2016 demanding immeஜdiate settlement of 78.2% IDA merger and the list of new office bearers elected by the All India Conference.

  However unless and until something emerges positively in clear terms there will not be any change in our decision of Mass Dharna on 10-03-2016

  நமது AIBDPA பொதுச் செயலர்
  தோழர்.K.G.ஜெயராஜ் தனது முகநூல் பதிவு செய்த தகவல்.

 • மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில்

  18-03-2016 ல் மதுரையில் AIBDPA மாநிலச் செயற்குழு கூட்டம்.

         மதுரை தமுக்கம் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவைமைய வளாகத்தில் வைத்து 18-03-2016 அன்று காலை 1000 மணி அளவில் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

            AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் மாநிலச் செயற்குழுவை துவக்கி வைத்து துவக்க உரை ஆற்ற உள்ளார். 

             மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் மாநிலச்செயலர் வேண்டுகிறார்.