• கடலூர் , பாண்டியில் மாவட்டக்குழுக் கூட்டங்கள்.

  27 02-2016ல் சிறப்பாக நடைபெற்ற

  கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் AIBDPA மாவட்ட பொதுக்குழுக் கூட்டங்கள்.

            கடலூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர். கோவிந்தராஜலூ தலைமை தாங்கிட மாவட்டச் செயலர் தோழர். முத்துக்குமாரசாமி வரவேற்புரை நிகழ்தினார்.

         BSNLEU மாவட்டச் செயலர் தோழர். K.T. சம்பந்தம், BSNLEU மாநில அமைப்புச் செயலர் தோழர். A.அண்ணாமலை, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். AIBDPA  நிர்வாகி தோழர். மாணிக்க மூர்த்தி திருப்பதியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டை விளக்கி பேசினார்.

              சிறப்புரை  ஆற்றிய மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள், 78.2 சத பஞ்சப்படி இணைப்பின் இன்றைய நிலை அதற்காக மத்திய சங்க மாநாட்டு போராட்ட திட்டங்கள், இன்றைய அரசியல் நிலை,  BSNLலில் நடைபெற உள்ள 7வது சங்க அங்கிகாரத் தேர்தல் உள்ளிட்ட விபரங்களை தொகுத்து வழங்கினார்.

             மாவட்ட உதவிச் செயலர் தோழர். ஜெயராமன் நன்றி உரையாற்றினார்.

           கூட்டத்தின் முத்தாய்ப்பாக ஓய்வூதியர் பற்றிய விபரங்கள் மற்றும் பணபலன்கள் பெறும் வழிமுறைகள் அடங்கிய குறிப்புகள், திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டு தொகுப்புகள் அடங்கிய கையேடு மாவட்டச் செயலர் தோழர். முத்துக்குமாரசாமி வழங்கிட மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் வெளியிட்டார்.

  பாண்டி மாவட்டக்குழுக்கூட்டம்

  பாண்டிச்சேரியில் மாவட்ட உதவித் தலைவர் தோழர். சிவக்குமார் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றிட தோழர். பாலசுப்பிரமணியன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். 

  BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.  சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மாநிலச்செயலர் தோழர். C. K. நரசிம்மன் திருப்பதியில் நடைபெற்ற 2வது அனைத்திந்திய மாநாட்டு நிகழ்வுகளை விளக்கியதோடு அதன் முடிவுகளான வரும் மார்ச் 10ம் தேதி 78.2 பஞ்சப்படி இணைப்பு தார்ணா மற்றும் BSNLலில் நடைபெற உள்ள சங்க அங்கிகாரத் தேர்தலில் BSNLEUவை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஓய்வூதியர்களும் பாடுபடக் கேட்டுக் கொண்டார்.  

          கூட்ட முடிவில் மாவட்டச் செயலர் தோழர். சக்திவேல் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.