• தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்ற 78.2% தார்ணா

  தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற தார்ணா.

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, நெல்லை, மதுரை, விருதுநகர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட அனைத்து மாவட்டச்சங்கங்களின்  சார்பிலும் சிறப்பாக தார்ணா நடைபெற்றது. சிறப்பாக நடத்திய அனைத்து மாவட்டச் சங்கங்களையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது. 

  சென்னையில் தார் ணா :

  AIBDPA மாவட்டத் உதவித்தலைவர் தோழர். அப்துல் பாரி தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி தோழர். அன்புமணி, மாவட்டத் தலைவர், BSNLEU, தோழர். மகேந்திரன், மாநில உதவிப் பொருளாளர், BSNLEU, AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், BSNLEU அ. இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். S.செல்லப்பா ஆகியோர் பேசினர். AIBDPA மாவட்டச் செயலர் தோழர். சாயிராம் நன்றி கூறி தார்ணாவை முடித்து வைத்தார்.

  நாகர்கோவில் மாவட்டம் :

  மாவட்டத் உதவித்தலைவர் தோழர். சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி AIBDPA அனைத்திந்திய அமைப்பு செயலர் தோழர் காளிபிரசாத், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். மீனாட்சி சுந்தரம், தோழர். சுப்பிரமணியன் BSNLEU உட்பட போராட்டத்தை விளக்கி பேசினர்.

  தூத்துக்குடி மாவட்டம்:

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் தூத்துக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பில் தூடி தொலைத்தொடர்பு மாவட்ட அலுவலகம் முன்பு AIBDPA மாவட்டத்தலைவர் தோழர். T.K. சீனிவாசன் தலைமையில் மாலைநேர தார்ணா நடைபெற்றது.
  போராட்டத்தை விளக்கி AIBDPA மாவட்டச்செயலர் தோழர். P. ராமர், AIBDPA மாவட்ட உதவிச் செயலர்கள் தோழர்கள். R. மைக்கேல் சர்குணர், K. கந்தசாமி, தோழர். P. பொன்னையா, மாவட்ட உதவித் தலைவர் தோழர். K. சுப்பையா, BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.M. ஜெயமுருகன், BSNLEU மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் பேசினர். மாவட்டப் பொருளாளர் தோழர். P. அய்யாபிள்ளை நன்றி கூறி தார்ணாவை நிறைவு செய்தார்.

  திருச்சி மாவட்டம் :

  மாவட்டத் தலைவர் தோழர். கிருஷ்ணன், மாவட்டச் செயலர். அஸ்லம் பாட்சா தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணா சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் தோழர். ஜான் பாட்சா பேசினார்.

  திருநெல்வேலி மாவட்டம்:

  AIBDPA அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி 10-03-2016ல் திருநெல்வேலி மாவட்டச்சங்கத்தின் சார்பில் நெல்லை தொலைத்தொடர்பு மாவட்ட அலுவலகம் முன்பு AIBDPA மாவட்டத்தலைவர் தோழர். S. முத்துச்சாமி தலைமையில் தார்ணா நடைபெற்றது. போராட்டத்தை விளக்கி AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். தாமஸ், AIBDPA மாவட்டச் செயலர் தோழர். D. கோபாலன், தோழர்கள் சுந்தரராஜன், நடராஜன், முத்தையா ஆகியோர் பேசினர். BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். சுவாமி குருநாதன் வாழ்த்தி பேசினார். 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட தார்ணாவை மாவட்டப் பொருளாளர் தோழர். அருள்சாமி நன்றி கூறி நிறைவு செய்தார்.