• முத்தாய்ப்பாக அமைந்த AIBDPA மதுரை மாநிலச் செயற்குழு

    18-03-2016ல் சிறப்புடன் மதுரையில் நடைபெற்ற மாநில செயற்குழு.

     

                 இன்று 18-03-2016ல் மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் மாநிலச் செயற்குழு தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக சங்கக் கொடியை அனைத்திந்திய பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் ஏற்றிவைத்ததோடு மாநிலச் செயற்குழுவை துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்தினார். மாநில உதவிச் செயலர் தோழர் A. மீனாட்சி சுந்தரம் அஞ்சலி உரை நிகழ்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். M. கதிரேசன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மாநிலச் செயலர் தோழர்  C.K. நரசிம்மன் செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்தார். செயல் பாட்டு அறிக்கையின் மீது மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்ததில் பங்கெடுத்தனர்.