• 130வது மே தின நல் வாழ்த்துக்கள்.

  மே தின நல் வாழ்த்துக்கள்.

  இன்னும் நிறைவேறாத தொழிலாளி வர்க்கத்தின் கனவுகள்

            8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஒய்வு, 8மணி நேரம் உறக்கம் என்கிற மே தினத்தின் முழக்கங்கள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன. அனைவருக்கும் கிடைத்திட கேட்டு சிக்காக்கோ வீதியில் போராடி இரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகள் நினவைப் போற்றுவோம்.

  130 வது மேதின புரட்சிகர நல் வாழ்த்துக்கள்.

 • பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்.

  இன்று தோழர்கள் V.வெங்கட்ராமன், S.சூரியன் பணி நிறைவு.

            BSNLEU மாநில உதவித் தலைவர் தோழர். V. வெங்கட்ராமன் மற்றும் மதுரை மாவட்டச் செயலர் தோழர். S. சூரியன் BSNLலில் பணி நிறைவு செய்து பணி ஓய்வு பெறும் இருவரும் நீண்ட ஆயுளுடன் சமுதாய பணி ஆற்றிட AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.

 • 78.2 சத பஞ்சப்படி இணைப்பு கோப்பின் இன்றைய நிலை

  78.2% IDA Pension Fixation – latest position

  Com. V.A.N.Namboodiri, Advisor, AIBDPA, met Shri Samir Gupta, posted in place of Shri. Prachish Khanna Director(Estt.) who is on leave, today, 27th April 2016 and enquired about the latest position of the 78.2% IDA pension fixation issue of BSNL retirees. Director(Estt.) stated that the files are almost ready and will be forwarded to Cabinet Secretary after signing by the Secretary, DOT. It is expected that the Cabinet Note will be forwarded to Cabinet Secretary by this or next week.

 • வருந்துகிறோம்

  பண்ருட்டி தோழர். V. துரைராஜ் CTS, RTD மறைவு

          பண்ருட்டியில் ஆரம்ப காலம் தொட்டு சங்கபணியிலும்  KG போஸின் அணியை வலுப்படுத்தியதோடு இன்று வரை அவரின் கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தவரும் BSNLEU  சங்கத்திலும், பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்து AIBDPA சங்கத்திலும் சிறப்பாக பணி செய்த பண்ருட்டி தோழர். V . துரைராஜ் CTS, RTD நேற்று மாலை (25-04-2016) மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

           அவர்தம் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் AIBDPA கடலூர் மாவட்டச் சங்கமும் தமிழ்மாநிலச் சங்கமும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.

 • DDG (ESTT) யுடன் AIBDPA பொதுச்செயலர் மீண்டும் சந்திப்பு

  78.2 சத பஞ்சப்படி இணைப்பு கோப்பின் நிலை சம்பந்தமாக விசாரிப்பு

               21-04-2016 அன்று நமது பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ் DDG (ESTT) திரு. S.K. ஜெயின் அவர்களைச் சந்தித்து 78.2 சத பஞ்சப்படி இணைப்பு கோப்பின் நிலையினை விசாரித்தார். கூடுதலாக 50 ஹிந்தி மொழிபெயர்ப்பு காப்பிகள் தேவைப்படுவதாகவும் அதற்கான பணிகள் பென்ஷன் செக்ஷனில் நடைபெறுவதாகவும், பணி நிறைவு பெற்றவுடன் கேபினட் குறிப்புகள் கேபினட்டிற்கு விரைந்து அனுப்பப்படும் என்ற உறுதிமொழியினை அவர் தெரிவித்தார்.

             பின்னர் ADG (PENSION) அவர்களை சந்தித்து பணிகளை விரைந்து முடிக்கவும் கேபினட்டிற்கு அனுப்பவும் கேட்டுக்கொண்டார். இம்மாத இறுதியில் 25ஏப்ரலில் பணி நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

   

 • 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பின் முன்னேற்ற நிலை

  வெகுவிரைவில் கேபினட் பார்வைக்கு ஆயத்தமாகும் 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு.

               DOT செயலரின் ஒப்புதலுக்கு பின்னர் தொலைத் தொடர்பு அமைச்சரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது என்றும் அந்த கோப்பின் குறிப்புகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கப்பணி நடைபெருவதாகவும் அது முடிந்தவுடன் கேபினட் பார்வைக்கு வெகுவிரைவில் அனுப்பப்படும் என்றும் DDG  (ESTT) திரு. S.K. ஜெயின் அவர்கள் நமது பொதுச் செயலர் தோழர். ஜெயராஜிடம் தெரிவித்துள்ளார்.

 • AIBDPA 3வது சென்னை மாவட்ட மாநாடு.

  19-04-2016 ல் சிறப்பாக நடைபெற்ற 3வது சென்னை மாவட்ட மாநாடு.

                 மாவட்டத் தலைவர் தோழர். T. கோதண்டம் தலைமையில் நடைபெற்ற 3வது சென்னை மாவட்ட மாநாடு இன்று 19-04-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். N. சாய்ராம் வரவேற்றார். அஞ்சலி உரையினை தோழர். சுசிலா மோகனவேலு நிகழ்தினார்.

          மாநிலத் தலைவரும் அனைத்திந்திய துணைத்தலைவருமான தோழர். S. மோகன்தாஸ் மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார். தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். மாநில உதவிச் செயலர் தோழர். S. நடராஜா மற்றும் அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் தோழர். M.R.M. மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலரால் முன் வைக்கப்பட்ட ஆண்டறிக்கையும் வரவுசெலவு கணக்கும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

      1  .   புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,

  2. 7வது சங்க அங்கிகாரத் தேர்தலில் BSNL ஊழியர்சங்கம் வெற்றிபெற அனைத்து பணிகளிலும் ஒத்துழைப்பது,

  3. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் 2016ல் இடது சாரிகளின் ஆதரவு பெற்ற மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்பது,

  4. வரும் 2016 ஜூன் மாதம் முழுவதும் AIBDPA சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்துவது

  உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

             மேலும் வரும் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக தோழர். S. நடராஜா, மாவட்டச் செயலராக தோழர். T. கோதண்டம், மாவட்டப் பொருளாளராக தோழர். N. சாய்ராம் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

   

 • இனிய தமிழ் புத்தாண்டு – துர்முகி/ சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கார் 125வது பிறந்த தினம்.

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மற்றும்

  சமூகநலப் போராளிஅண்ணல் அம்பேத்கார் 125வது பிறந்த தினம்.

 • 78.2% பஞ்சப்படி கோப்பின் கேபினட் குறிப்புகள் DOT செயலரால் ஒப்புதல்

  12227028_1659508950991215_9187887839509902475_n

  இம்மாத (ஏப்ரல் ) இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடு – DOT செயலர் அறிவிப்பு.

          12-04-2016 அன்று AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி DOT செயலர் திரு. ஜெ. எஸ். தீபக் அவர்களை சந்தித்து 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு பற்றிய கேள்விக்கு ஜெ. எஸ். தீபக் அவர்கள் தாம் அனுமதி அளித்துவிட்டதாகவும் அதனை கேபினட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் கூறினார். மேலும் இம்மாத இறுதிக்குள் உத்தரவு வரலாம் என்பதையும் தெரிவித்தார்.

            நமது தலைவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தையும், அமைச்சரையும் பார்த்தும், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம், தார்ணா, உண்ணாவிரதம் என்று பல கட்ட போராட்டங்களை நமது சங்கம் நடத்தியதன் பயனாக  78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு கையெழுத்தாவதற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

          அதற்காக பாடுபட்ட தோழர் V.A.N. நம்பூதிரி மற்றும் மத்தியச் சங்கத்தை பாராட்டுவோம்.

 • நீலகிரி மாவட்ட மாநாடு

  10-04-2016ல் நீலகிரி மாவட்ட மாநாடு. 

            ஊட்டி தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் வைத்து AIBDPA நீலகிரி மாவட்ட மாநாடு வருகின்ற 10-04-2016ல் நடைபெற உள்ளது. மாநிலத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் மற்றும் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மனும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.