• 31-03-2016ல் DOT செயலருடன் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

  78.2% பஞ்சப்படி இணைப்பு கோப்பை கேபினட் அனுமதிக்கு அனுப்பிட DOT செயலர் உறுதியளிப்பு.

           

              31-03-2016ல் DOT செயலர் திரு. தீபக் அவர்களை நமது சங்க  ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி சந்தித்து 78.2 சத பஞ்சப்படி இணைப்பு 2013க்கு முன் ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாததை எடுத்துரைத்தார். மேலும் காலதாமதம் தவிர்த்து உடனே வழங்கிடக் கேட்டுக்கொண்டார்.

                பதிலுரைத்த DOT செயலர் திரு. தீபக் அவர்கள் கேபினட் குறிப்பு தனது மேஜைக்கு வந்து விட்டதாகவும் அதனை உனடியாக கேபினட் குழுவிற்கு அனுப்புவதாகவும் உறுதியளித்தார்.

 • பொது வேலைநிறுத்தம் 2016 செப்டம்பர் 02ல்

  மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு அறைகூவல்.

         30-03-2016ல் டெல்லியில் உள்ள மாவ்லங்கர் மஹாலில் வைத்து நடைபெற்ற மத்திய தொழிற்சங்க சிறப்பு மாநாடு தோழர். A.K. பத்மநாபன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிலாளர் மற்றும் மக்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்ய ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. டாக்டர். சஞ்சீவரெட்டி,INTUC, ஹர்பஜன் சிங்,HMS, குருதாஸ்தாஸ் குப்தா, AITUC, தபன்சென் CITU உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளையும், வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

             2016 ஜூன் ஜூலை மாதங்களில் மாநில மாவட்ட அளவில் தொழிலாளர்களை திரட்டிட கருத்தரங்கம் நடத்திடவும் 2016 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நாடு தழுவிய மகாதார்ணா நடத்துவது என்றும் 2016செப்டம்பர் 2ம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

               BSNLEU சார்பில் பேட்ரன் தோழர். V.A.N. நம்பூதிரி, பொதுச்செயலர் தோழர். P. அபிமன்யூ, துணைப் பொருளாளர் தோழர். குல்தீப் சிங் கலந்து கொண்டனர்.