• AIBDPA பாண்டி மாவட்டச் சங்கம் தேர்தல் நிதி அளிப்பு

    BSNLEU மாவட்டச் சங்கத் தேர்தல் நிதியாக ரூபாய் 3100/- வழங்கல்.

             பாண்டிச்சேரி AIBDPAமாவட்டச் செயலர் தோழர். சக்திவேல் BSNLEU மாவட்டச் செயலர் தோழர் சுப்பிரமணியனிடம் தேர்தல் நிதி ரூபாய். 3100/- வழங்கினார்.

  • CGM அலுவலகத்தில் AIBDPA வாக்கு சேகரிப்பு

    7வது சங்க அங்கிகாரத்தேர்தலில் BSNLEU க்கு ஆதரவாக தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில் தமிழ்மாநில AIBDPA  சங்கத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு.

                AIBDPA திருப்பதி அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தின்படி 2016 மே 10ம் தேதி நடைபெறும் 7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் BSNL ஊழியர் சங்க வெற்றிக்கு அனைத்து ஓய்வூதியர்களும் பாடுபடவேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் மாநிலச் சங்க உதவிச் செயலரும் சென்னை மாவட்டத் தலைவருமான தோழர்.  S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர்.  T.கோதண்டம், மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாய்ராம் மற்றும் சங்க முன்னணியினரும் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மனும் CGM அலுவலகத்தில் 03-05-2016 அன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் வாக்களிக்கக் கோரும் துண்டு பிரசுரமும் விநியோகித்தனர்.