• சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்

  25-06-2016 ல் சிறப்பாக நடைபெற்ற சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்.

        மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா தலைமையில் சென்னை மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று 25-06-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்றார்.

  தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். 11-07-2016ல் நடைபெரும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம், 7வது சம்பள கமிஷனில் ஓய்வூதியர்களின் பணபலன்,  வருகின்ற ஜூலைக்குள் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை விளக்கிப் பேசினார்.

  1. 11-07-2016ல் நடைபெறும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுதும் நடைபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் சிறப்பாக நடத்துவது,

  2. மத்திய,மாநில சங்க முடிவின்படி வரும் ஜூலைக்குள் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வலுவாக நடத்துவது

   உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

   கூட்ட முடிவில் தோழர். அப்சல் பாரி நன்றி கூறினார்.