• வெற்றிவிழா சிறப்புக்கூட்டங்கள் ஈரோடு, சேலம், திருச்சி

  AIBDPA GS தோழர். K.G. ஜெயராஜ், CS தோழர் C. K. நரசிம்மன், CP  தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை. 

   IMG-20160731-WA0011IMG-20160731-WA0008IMG-20160731-WA0003

  AIBDPA வெற்றி விழா சிறப்புக்கூட்டம் 28.7.2016 அன்று ஈரோட்டில் மாவட்டத்தலைவர் தோழர். N.சின்னையன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர்.  N. குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

  200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ், மாநில செயலர் தோழர் C. K. நரசிம்மன் மற்றும் மாநில தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர்.  BSNLEU ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். L. பரமேஸ்வரன், AIRPPA மாவட்டச்செயலர் N. ராமசாமி, AIBDPA மாநில துணைச் செயலர் தோழர். சின்னசாமி  உட்பட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

            மாவட்ட பொருளர் தோழர். அய்யாசாமி நன்றி கூறினார். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.

  சேலத்தில் சிறப்புக்கூட்டம் 29.7.2016

  AIBDPA வெற்றி விழா சிறப்புக்கூட்டம் 29.7.2016 அன்று சேலத்தில் மாவட்டத்தலைவர் தோழர். N. ராமசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர்.  N. பொன்னுவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.

   சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தில் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ், மாநில செயலர் தோழர் C. K. நரசிம்மன் மற்றும் மாநில தலைவர் தோழர். S.மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினர்.  AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர்  தோழர்.  N. குப்புசாமி AIBDPA மாநில துணைச் செயலர் தோழர். சின்னசாமி  உட்பட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

 • ARREARS CALCULATOR FOR PRE 2007 PENSIONERS

  A READY RECKONER FOR CALCULATING THE ARREARS FOR THE PRE 2007 PENSIONERS IS GIVEN BELOW.. IT IS PREPARED FOR AIBDPA BY COM. V.K.MURALIDHARAN, AO, O/O THE CGM, TAMIL NADU, CHENNAI.
  CLICK ON THE GIVEN NAME AND PRE 2007 BASIC PENSION AND REPLACE BOTH WITH YOURS. THEN CLICK ON TOTAL ARREARS.

  Pension_Calculator

 • 29-07-2016ல் நடைபெறும் வங்கி ஊழியர் போராட்டம் வெல்க !

  பத்துலட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் வெல்க !!!

  •  வங்கிகளை தனியார் மயப்படுத்தாதே !

  • வங்கிகளை இணைக்காதே !

  • மக்கள் சேமிப்புகளின் வட்டிவிகிதத்தை குறைக்காதே ! உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம்.

   இந்தியாவின் அரசுடமை வங்கிகளில் மொத்தம் 116 லட்சம் கோடி ரூபாய்கள் புழக்கத்தில் உள்ளன. இதில் 13 லட்சம் கோடி பெருநிறுவனங்களின் வாராக்கடன்களாக உள்ளன.

   மக்கள் பணம் 116 லட்சம் கோடியைத் தனியாருக்குத்தாரைவார்த்திட மோடி தலைகீழாய் நிற்கிறார்.

   வங்கிஊழியர்கள் இந்த மக்கள் பணத்தைப் பாதுகாக்க மக்களுக்காகப் போராடுகிறார்கள்.

  மக்கள் துணை நிற்போம் !!!

 • உற்சாகமாக நடைபெற்ற 4வது கோவை மாவட்ட மாநாடு.

  .facebook_1469641388376.facebook_1469641550501   IMG-20160728-WA0004

              250க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு சிறப்பித்த 4வதுகோவை மாவட்ட மாநாடு 27-07-2016 அன்று மாவட்டத்தலைவர் தோழர். V. சுப்பிரமணியன் தலைமையில் கோவை திவ்யாடே ஹாலில் வைத்து நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். L. உமாபதி வரவேற்றார்.

                    மாநாட்டை துவக்கிவைத்து AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் பேசினார். 78.2 % பஞ்சப்படி இணைப்பின் உத்தரவு பெறுவதில் இருந்த தடைகள், அதன் வெற்றி, 60:40ல் இருந்த நடைமுறைச் சிக்கல், அதனை மாற்றி 100சதமும் DOTயே ஏற்றுக்கொள்ளும் இன்றைய உத்தரவு, 7வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அதில் உள்ள ஓய்வூதியர்களின் பணபலன்களின் பிரச்சனைகள் மற்றும் 02-09-2016ல் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் என அனைத்து விபரங்களையும் விரிவாக தனது துவக்க உரையில் எடுத்துரைத்தார். சிறப்புரையாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் பேசினர். 

  IMG-20160728-WA0019IMG-20160728-WA0029IMG-20160728-WA0017

          BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C.ராஜேந்திரன், SEWA மாவட்டச் செயலர் தோழர். பிரசன்னன், AIPRPA தோழர். கருனாநிதி, TNGTA தோழர். S. சந்திரன், AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி, AIBDPA வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தோழர். பங்கஜவல்லி நன்றிகூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

           ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவுசெலவு கணக்குகள் விவாதங்களுக்கு பின் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய மாவட்டத் தலைவராக தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டச் செயலராக தோழர். P.B. ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளராக தோழர். M. வெங்கிடராஜலூ உள்ளிட்ட 17 தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

          மாநாட்டை சிறப்பாக நடத்திய கோவை தோழர்களுக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி  வாழ்த்துகிறது.

 • 27-07-2016ல் BSNLEU நடத்திடும் வெற்றிவிழா கூட்டங்களில் பங்கெடுப்போம் ! AIBDPA மத்திய மாநிலச் சங்கங்கள் அறைகூவல் !!

  ஓய்வூதியருக்கு 78.2 % IDA இணைப்பு,

  ஓய்வூதியம் வழங்க 60 % என்ற உச்சவரம்பு நீக்கம் – வெற்றியை கொண்டாடிட

  வெற்றிவிழா 27-07-2016 BSNLEU CHQ முடிவு.

  ஓய்வூதியருக்கு 78.2 % IDA இணைப்பு, ஓய்வூதியம் வழங்க 60 % என்ற உச்சவரம்பு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க BSNLEU, FORUM, AIBDPA சங்கங்கள் நீண்ட காலமாக கடுமையான போராட்டங்கள் மூலமாக வெற்றி கண்டுள்ளன. எனவே இந்த வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடும் விதமாக  27-07-2016 அன்று BSNLEU, FORUM AIBDPA உள்ளிட்ட அனைவரையும் அழைத்து வாயிற்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடிட புதுடெல்லியில் கூடிய BSNLEU மத்தியசங்க செயற்குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

  AIBDPA மத்திய மாநிலச் சங்கமும் இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்துள்ளன. தமிழ்மாநிலத்தில் உள்ள AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி 27-07-2016ல் BSNLEU நடத்தும் வெற்றிவிழாவில் பெரும்திரளாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்கிட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

 • CGM மற்றும் JtCCA வுடன் மாநிலச்செயலர் சந்திப்பு

  78.2 % பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விரைந்து அமுல்படுத்திட வலியுறுத்தி கடிதம்.

  AIBDPA தமிழ் மாநிலச்செயலர் தோழர். C. K. நரசிம்மன், சென்னை மாவட்டச்செயலர் தோழர். கோதண்டம் மற்றும் ஓய்வூதியர்களுடன் சென்று  தமிழ்மாநில CGM மற்றும் Jt.CCA வை சந்தித்து  78.2 % பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விரைந்து அமுல் படுத்திட கடிதம் அளித்தார். அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளனர்.

 • 78.2% IDA MERGER – DOT உத்தரவு வெளியிடப்பட்டது

  78.2% IDA MERGER – DOT உத்தரவு வெளியிடப்பட்டது

  78.2% IDA – இந்த வார இறுதியில் உத்தரவு வெளியாகலாம் என கடந்த 13-07-2016ல் நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்தது. இன்று DOT 78.2% IDA MERGERக்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. உறுதியான போராட்டங்களால் வெற்றி கிடைத்திட பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.

  DoT issues order for revision of pension based on 78.2% IDA merger.<<< view letter>>>

 • சிறப்பான கருத்தரங்கம் வேலூரில்

  அண்ணல் டாக். அம்பேத்கார் 125வது பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்.

  IMG-20160718-WA0055IMG-20160718-WA0045IMG-20160718-WA0047

  17-07-2016 அன்று AIBDPA மற்றும் AIPRPA இணைந்து வேலூரில் “சட்டச்சிற்பி அண்ணல்” டாக்டர் அம்பேத்கார் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கத்தை நடத்தினர்.

            200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கத்தை தோழர்கள் M. சிதம்பரம், மாவட்டத் தலைவர், AIPRPA, சுவாமிநாதன், AIBDPA கூட்டு தலைமையேற்றனர். வந்திருந்தவர்களை தோழர். S.சுந்தரராமன் , மாவட்டச் செயலர் AIPRPA, வரவேற்றார். கருத்தரங்கத்தின் நோக்கத்தை விளக்கி தோழர். B. ஜோதி சுதந்திரநாதன், மாவட்டச் செயலர், AIBDPA பேசினார். 

  AIBDPA மாநிலச்செயலர் தோழர். C.K. நரசிம்மன், AIBDPA மாநில அமைப்புச் செயலர் C. ஞானசேகரன். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் A.பெருமாள், BSNLEU மாவட்டச்செயலர் A. தங்கவேல், சிவராமன் , தோழர் S. தயாநிதி, விவசாயச் சங்கம், உட்பட மற்றும் பல தோழர்கள் கருத்தரங்கத்தை வாழ்த்தி பேசினர்.

          தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்க மாநில துணைப் பொதுச் செயலர் தோழர். ஆதவன் தீட்சண்யா ” அம்பேத்காரும் இன்றைய சமுதாயமும் ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

              நிறைவாக AIBDPA மாவட்டப் பொருளாளர் தோழர். ஸ்ரீதர் நன்றி கூறினார்.

   

 • AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி புதிய தொலைத்தொடர்பு அமைச்சருடன் சந்திப்பு

  MEETING WITH NEW COMMUNICATIONS MINISTER.

  Com.V.A.N.Namboodiri, Advisor, AIBDPA met the new Communications Minister Shri Manoj Sinha and congratulated him and paid respects. He mentioned about the role of the unions in the improvement of BSNL services and gave some suggestions also in the matter. He thanked for the settlement of 78.2% IDA pension fixation by the government. He further requested that the pension revision issue of the BSNL retirees with out going to the Cabinet needs to be settled early.

  Com. Namboodiri met the Minister along with NFPE leaders Com. Giriraj Singh, President and Com. R.N.Parashar Secretary General, who were also there to meet the Minister. They congratulated the Minister and focused the issues of the Postal Services and how it can be made profitable. Certain operational requirement were also mentioned by them.

  The Communications Minister patiently heard all and assured that he will study all issues and will do the needful.

 • AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி DOT செயலர், உறுப்பினர் நிதி மற்றும் சர்வீசஸுடன் சந்திப்பு

  AIBDPA MEETS SECRETARY, DOT, MEMBER (SERVICES) AND MEMBER (FINANCE)

  Com. V.A.N.Namboodiri, Advisor, AIBDPA today, 14th July 2016, met Shri J.S.Deepak, Secretary, DOT and thanked him for the settlement of the 78.2% IDA fixation as also getting withdrawn the condition of 60: 40 in payment of pension. He also spoke about the need to ensure pension revision for the BSNL retirees, whenever there is wage revision for BSNL employees, with out the need to approach the cabinet. He agreed to look in to the matter.

  Com. Namboodiri also met Smt. Annie Moraes, Member (Finance), DOT and thanked her for the effort in settling the above issue. He asked the Member (Finance) to ensure that the order on 78.2% is issued without further delay. She said that the file is with her and the orders will be issued at the earliest.

  Com.Namboodiri, Advisor, AIBDPA met Shri N.K.Yadav, Member (Services), and thanked him also. The issue of Pension revision of BSNL retirees was discussed in detail. He assured that the matte will be seriously attended to. He stated that the pension revision issues of both MTNL and BSNL are pending.

  AIBDPA is trying to gt the 78.2% IDA pension fixation orders at the earliest