• 78.2% IDA – இந்த வார இறுதியில் உத்தரவு வெளியாகலாம்.

    78.2% IDA – ORDERS EXPECTED BY THE END OF THIS WEEK.

    Com.V.A.N.Namboodiri, Advisor, AIBDPA met the concerned officers in DOT on today, 13th July 2016 with regard to the issue of orders on 78.2% IDA Pension fixation. Since there is a transfer of the incumbent in the post of Dir (Estt), the order is yet to be issued. It is expected that the same will be issued shortly.

  • தமிழகமெங்கும் வரலாற்று சிறப்புமிக்க 78.2% IDA merger வெற்றி கொண்டாட்டம்.

    NCCPA அறைக்கூவலை ஏற்று தமிழகத்தில் ஜூலை 11,13 தேதிகளில் ஆர்ப்பாட்டம். 

    தமிழகமெங்கும் வரலாற்று சிறப்புமிக்க 78.2% IDA merger இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்.

    IMG-20160713-WA0004

    ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டம்.

    IMG-20160713-WA0005

    ஈரோட்டில் நடைபெற்ற பொதுகுழுக்கூட்டம்

    AIBDPA ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம்13. 7.2016 அன்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் தோழர் அன்வர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தோழர் குப்புசாமி, மாநில துணை செயலாளர் சின்னசாமி 78.2%IDA உடன்பாடு பற்றி விளக்கவுரை ஆற்றினர். பார்த்திபன் DGM (F) உட்பட 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் அய்யாசாமி நன்றி கூறினார்.

    வேலூரில் 78.2 % IDA இணைப்பு கையெழுத்தானதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் மற்றும் NCCPA – அறைகூவலுக்கு இணக்க 11.07.2016 காலை 10.30 க்கு வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு AlB D PA – Al PRPA சார்பில் மாவட்ட செயலர் ஜோதி சுதந்திர நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

    IMG-20160711-WA0018

    வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.

    IMG-20160714-WA0007

    தூத்துக்குடியில் 78.2 % IDA இணைப்பு கையெழுத்தானதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் மற்றும் NCCPA அறைகூவலுக்கிணங்க 7வது ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    2016 ஜூலை 12 & 13 தேதிகளில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதி பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் தோழர் T.K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை மற்றும் அஞ்சலி மாவட்டச்செயலர் தோழர்.P. ராமர். அகில இந்திய சங்க துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தனது சிறப்புரையில் 7வது ஊதிய மாற்றத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளுக்கான NCCPA ஆர்ப்பாட்டம், 78.2%IDA உடன்பாடு பற்றி விளக்கவுரை, இன்றைய அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் 2016 செப்டம்பர் 2 மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் பற்றி விளக்கவுரை நிகழ்த்தினார். 

    திருச்சியில் 13-07-2016 அன்று மாவட்டத்தலைவர் தோழர். P. கிருஷ்ணன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. வரவேற்புரை மாவட்டச் செயலர் தோழர். I. ஜான்பாட்சா. வாழ்த்துரை தோழர்கள். BSNLEU மாவட்டச் செயலர் அஸ்லாம் பாட்சா, TNTCWU மாவட்டச் செயலர் சுந்தரராஜன், AIBDPA TNJ செல்வராஜன். மாநிலச் செயலர் தோழர் . C. K. நரசிம்மன் தனது சிறப்புரையில் 78.2 % IDA இணைப்பு பெறுவதற்கு நடத்திய போராட்டங்கள் இன்றைய அரசியல் நிலவரங்கள், 7வது ஊதிய மாற்றத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் மற்றும் 2016 செப்டம்பர் 2 மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட விபரங்களை எடுத்துரைத்தார்.

    கூட்ட நிறைவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக  நிறைவேற்றப்பட்டன.

    1. அடுத்த மாநிலச் செயற்குழுவை திருச்சியில்நடத்துவது,

    2. மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது,

    3. வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்துவது,