• 27-07-2016ல் BSNLEU நடத்திடும் வெற்றிவிழா கூட்டங்களில் பங்கெடுப்போம் ! AIBDPA மத்திய மாநிலச் சங்கங்கள் அறைகூவல் !!

    ஓய்வூதியருக்கு 78.2 % IDA இணைப்பு,

    ஓய்வூதியம் வழங்க 60 % என்ற உச்சவரம்பு நீக்கம் – வெற்றியை கொண்டாடிட

    வெற்றிவிழா 27-07-2016 BSNLEU CHQ முடிவு.

    ஓய்வூதியருக்கு 78.2 % IDA இணைப்பு, ஓய்வூதியம் வழங்க 60 % என்ற உச்சவரம்பு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க BSNLEU, FORUM, AIBDPA சங்கங்கள் நீண்ட காலமாக கடுமையான போராட்டங்கள் மூலமாக வெற்றி கண்டுள்ளன. எனவே இந்த வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடும் விதமாக  27-07-2016 அன்று BSNLEU, FORUM AIBDPA உள்ளிட்ட அனைவரையும் அழைத்து வாயிற்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடிட புதுடெல்லியில் கூடிய BSNLEU மத்தியசங்க செயற்குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

    AIBDPA மத்திய மாநிலச் சங்கமும் இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அறைகூவல் விடுத்துள்ளன. தமிழ்மாநிலத்தில் உள்ள AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி 27-07-2016ல் BSNLEU நடத்தும் வெற்றிவிழாவில் பெரும்திரளாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்கிட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.