• உற்சாகமாக நடைபெற்ற 4வது கோவை மாவட்ட மாநாடு.

  .facebook_1469641388376.facebook_1469641550501   IMG-20160728-WA0004

              250க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு சிறப்பித்த 4வதுகோவை மாவட்ட மாநாடு 27-07-2016 அன்று மாவட்டத்தலைவர் தோழர். V. சுப்பிரமணியன் தலைமையில் கோவை திவ்யாடே ஹாலில் வைத்து நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். L. உமாபதி வரவேற்றார்.

                    மாநாட்டை துவக்கிவைத்து AIBDPA பொதுச்செயலர் தோழர். K.G. ஜெயராஜ் பேசினார். 78.2 % பஞ்சப்படி இணைப்பின் உத்தரவு பெறுவதில் இருந்த தடைகள், அதன் வெற்றி, 60:40ல் இருந்த நடைமுறைச் சிக்கல், அதனை மாற்றி 100சதமும் DOTயே ஏற்றுக்கொள்ளும் இன்றைய உத்தரவு, 7வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அதில் உள்ள ஓய்வூதியர்களின் பணபலன்களின் பிரச்சனைகள் மற்றும் 02-09-2016ல் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் என அனைத்து விபரங்களையும் விரிவாக தனது துவக்க உரையில் எடுத்துரைத்தார். சிறப்புரையாக மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன், மாநிலத்தலைவர் தோழர். S.மோகன்தாஸ் பேசினர். 

  IMG-20160728-WA0019IMG-20160728-WA0029IMG-20160728-WA0017

          BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C.ராஜேந்திரன், SEWA மாவட்டச் செயலர் தோழர். பிரசன்னன், AIPRPA தோழர். கருனாநிதி, TNGTA தோழர். S. சந்திரன், AIBDPA ஈரோடு மாவட்டச் செயலர் தோழர். N. குப்புசாமி, AIBDPA வேலூர் மாவட்டச் செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தோழர். பங்கஜவல்லி நன்றிகூறி மாநாட்டை நிறைவு செய்தார்.

           ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவுசெலவு கணக்குகள் விவாதங்களுக்கு பின் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய மாவட்டத் தலைவராக தோழர். V. சுப்பிரமணியன், மாவட்டச் செயலராக தோழர். P.B. ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளராக தோழர். M. வெங்கிடராஜலூ உள்ளிட்ட 17 தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

          மாநாட்டை சிறப்பாக நடத்திய கோவை தோழர்களுக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளையும் மாநிலச் சங்கம் பாராட்டி  வாழ்த்துகிறது.