• உற்சாகமாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட மாநாடு

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

          AIBDPA தூத்துக்குடி மாவட்ட மாநாடு 28-08-2016 தூடி மாசிலாமணிபுரம் 3வது தெரு PCவேலாயுதம் அரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். T.K. ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி உரையினை தோழர்.K. பொன்னையா நிகழ்த்தினார். வரவேற்புரை தோழர்.K.கந்தசாமி. தேசியக் கொடியை ஏற்றிவைத்தும், மாநாட்டை துவக்கிவைத்தும் மாநிலத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் பேசினார். சங்கக்கொடியை ஏற்றிவைத்து மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் நிறைவுரையாற்றி பேசினார். BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M. ஜெயமுருகன், AIBDPA விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். அய்யாச்சாமி ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.

                 ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகளாக மாவட்டத்தலைவர் தோழர். T. சுப்பிரமணியன், மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டப் பொருளாளர் தோழர். P. அய்யாப்பிள்ளை நன்றி கூறினார். 

 • BSNLEU அலுவலக தாக்குதலைக் கண்டித்து சென்னை CGM அலுவலகம் முன்பு 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்

  IMG-20160824-WA0037

  சென்னை CGM அலுவலகம் முன்பு 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்.

  கடந்த 19-08-2016 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க BSNLEU மாநில அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திரிணமுல் (குண்டர்கள்) கட்சியினரைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பும் நடைபெற்றது. AIBDPA சார்பில் தோழர்கள் தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் மற்றும் தோழர் மாணிக்கமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.BSNLEU CGMஅலுவலக மாவட்டச்செயலர். தோழர். அன்புமணி நிறை உரை ஆற்றினார்.

 • BSNLEU அலுவலக தாக்குதலைக் கண்டித்து 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்

  கொல்கத்தாவில் BSNLEU அலுவலகம் மீது தாக்குதல்

  திரிணாமுல் குண்டர்கள் அராஜகம்.

             கடந்த 19-08-2016 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க BSNLEU மாநில அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திரிணமுல் கட்சியினரைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் 24-08-2016ல் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட BSNLEU மத்தியசங்கம் அறைக்கூவல் விட்டுள்ளது.

           AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் இதனை வன்மையாக கண்டிப்பதுடன், AIBDPA மாவட்டச் செயலர்கள் உரிய கவனம் செலுத்தி பெருவாரியான ஓய்வூதியர் தோழர்களை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

 • புதிய CCA திரு. டாக். நிரஞ்சனாவுடன் மாநிலச் செயலர் சந்திப்பு

            22-08-2016 அன்று தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் மற்றும் சென்னை மாவட்டப் பொருளாளர் தோழர். N. சாயிராம் ஆகியோர் இன்று புதிதாக பதவியேற்ற CCA திரு. டாக். நிரஞ்சனா அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். மேலும் 78.2சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவினை விடுபட்ட ஓய்வூதியர்களுக்கு விரைவில் அமுல்படுத்திட வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.  CCA அவர்கள் மேற்கண்ட பிரச்சனையில் உரிய கவனம் செலுத்துவதாகஉறுதியளித்தார். CCAயுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது.

 • சுதந்திரதின வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

  images (1)

 • BSNL சுதந்திர தினச்சலுகை அறிவிப்பு

  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரைவழி தொலைப்பேசியின் அழைப்புகள் இலவசம்

  புதுடில்லி: சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்  BSNL வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என இந்திய அரசுக்கு சொந்தமான BSNL அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, டில்லியில் உள்ள BSNL வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக BSNL  கணக்கிட்டு வருகிறது.

  இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் (இன்ஸ்ட்டலேஷன்) கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

  குறைந்தபட்சமாக வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல் இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை இலவச அழைப்பு சலுகையை இவர்களும் பெற முடியும் எனவும் அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 • 2016 ஆகஸ்ட் 10 பேரணி – AIBDPA தோழர்கள் பங்களிப்பு

           BSNLலின் சக்திமிக்க பேரணி நாடுதழுவிய அளவில் சிறப்பு

         வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம், புன்னகையோடு சேவை போன்ற இயக்கங்களை BSNL நிர்வாகமும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியதன் விளைவாக BSNLலின் லாபம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக BSNL கருவிகளையும், திட்டங்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்துவதற்காக 2016 ஆகஸ்ட் 10 அன்று பேரணிகளை நாடு முழுவதும் நடத்துவதற்கு BSNL நிர்வாகமும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் மீண்டும் கூட்டாக முடிவு செய்து 10-08-2016 அன்று நாடு முழுவதும் வெற்றிகரமாக பேரணியை நடத்தினர். தூத்துக்குடியில் 11-08-2016ல் பேரணி நடைபெற்றது.

  IMG-20160811-WA0022

      மேற்கண்ட பேரணிகளில் வேலூர், கோவை, பாண்டி, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நமது AIBDPA தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியில் கலந்து கொண்ட தோழர்களை தமிழ்மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

 • மாவட்டச்செயலர்கள் கவனத்திற்கு

  78.2 % IDA நிலுவைத் தொகை பெற விரைந்து நடவடிக்கை எடுத்திட பணி செய்வோம்.

              78.2 % IDA நிலுவைத் தொகை உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைத்திருப்பதால் மாவட்ட அளவில் பணிகளை துவக்கிட நமது மாவட்டச் செயலர்கள் மாவட்ட பொதுமேலாளரை சந்தித்து பணிகளை விரைவுபடுத்திட ஏற்பாடுகளை செய்திட மாநிலச்சங்கம் வேண்டுகிறது.