• 01-10-2016 முதல் பஞ்சப்படி (IDA) 5.5%

  IDA உயர்வு

  01-10-2016 முதல் பஞ்சப்படி (IDA) 5.5 சதம் உயர்ந்து மொத்தம் 120.3 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 • வேலூர் மாவட்ட சிறப்புக் கூட்டம்

  வங்கியில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கான குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி.

  img-20160927-wa0037img-20160927-wa0042

                 அகில இந்திய BSNL – DOT ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட சிறப்புக் கூட்டம் இன்று 27.09.2016 அன்று வேலூரில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். V. ஏழுமலை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச்செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

     “வங்கியில் ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கான குறிப்பேட்டின்” முதல் பிரதியை தோழர். V. மணி, DGM RTD அவர்கள் வெளியிட அதனை தோழர். K. சுந்தரம் DE RTD அவர்கள் பெற்றுக்கொண்டார். மாநில அமைப்புச் செயலர் தோழர். C. ஞானசேகரன் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். K. கிருஷ்ணமூர்த்தி, BSNLEU மாவட்டச் செயலர் தோழர். C. தங்கவேல், SNEA மாவட்ட உதவித் தலைவர் தோழர். L. லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

                78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விளக்கியும், அதற்கான கணக்கீடு பற்றியும் மாவட்டச்செயலர் தோழர். B. ஜோதி சுதந்திரநாதன் விளக்கமாக எடுத்துரைத்தார். AIBDPA சாதித்த சாதனைகளையும், 78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவை பெருவதற்காக நடத்திய போராட்டங்களை விளக்கியும் மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் பேசினார்.

            200க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்தை தோழர். விக்டர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

        புதிய முயற்சியாக வங்கியில் பென்ஷன் பெருவதை விளக்கி குறிப்பேடு வழங்கிட ஏற்பாடு செய்த வேலூர் மாவட்டச் சங்கத்தை தமிழ்மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

 • உற்சாகமாய் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மாநாடு

             AIBDPA விருதுநகர் மாவட்ட மாநாடு 25-09-2016 விருதுநகர் எம்ஆர்வி நினைவரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். U. முத்தையா சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். தோழர். A. ஜெயபாண்டியன் தியாகிகளுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

             மாநாட்டை துவக்கிவைத்து அனைத்திந்திய துனைத்தலைவரும் தமிழ்மாநிலத் தலைவருமான தோழர். S.மோகன்தாஸ் பேசினார். தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரையாற்றினார். BSNLEU மாவட்ட உதவிச்செயலர் தோழர். M. முத்துச்சாமி, JCTU விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். தேனி வசந்தன், SEWA தலைவர் தோழர். குருசாமி, BSNLEU மாவட்டப் பொருளாளர் தோழர். சந்திரன் உட்பட பலர்  வாழ்த்துரை வழங்கினர்.

           ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகளாக மாவட்டத்தலைவர் தோழர்.S. முருகேசன், மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி, மாவட்டப் பொருளாளர் தோழர். M. பெருமாள்சாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  

               65க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். 75 வயதிற்கு மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக தோழர். புளுகாண்டி  நன்றி கூறினார்.

              மாநாட்டை சிறப்பாக நடத்திய விருதுநகர் மாவட்டத் தோழர்களை பாராட்டுவதோடு புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாநிலச் சங்கம் மனதார வாழ்த்துகிறது. 

 • USO நிதி 1250 கோடி BSNLக்கு வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  தரைவழி சேவைகள் உள்ளிட்ட கிராமப்புற சேவைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய BSNLக்கு 2012-2013ம் ஆண்டிற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட USO நிதியை வழங்கிட பாரத பிரதமர் திரு. மோடி தலைமையில் கூடிய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இனிவரும் காலங்களுக்கு USO நிதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

  2015 ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்த கோரிக்கைகளில் ஒன்றான இது காலம் கடந்து அனுமதி கிடைத்தாலும் BSNLலின் இன்றைய வளர்ச்சிக்கு அந்த நிதி பயனளிக்கும்.

 • CMD BSNLலுடன் AIBDPA தலைவர்கள் சந்திப்பு

  CMD BSNL திரு. அனுபம் வத்சவாவுடன் தோழர்கள் VAN. நம்பூதிரி, K.G. ஜெயராஜ் சந்திப்பு.

  மருத்துவப்படிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி ஓய்வூதியர்களுக்கு மீண்டும் வழங்கிடவும், DOT ஓய்வூதியர்கள் குடியிருப்புக்களுக்கு வாடகை குறைப்பு, இணையதள பயன்பாடு இணைப்புகளுக்கு பத்து சத மானியம் உள்ளிட்ட நீண்டநாள் தீர்க்கப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-09-2016 அன்று பிஎஸ்என்எல் CMD திரு. அனுபம் வத்சவா அவர்களை AIBDPA ஆலோசகர் தோழர் நம்பூதிரி, பொதுச்செயலர் தோழர். ஜெயராஜ் சந்தித்து விளக்கினர். விபரங்களை கவனமாக கேட்ட CMD அவர்கள் சாதகமாக விரைந்து முடிவெடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

   

 • BSNLEU / FORUM of BSNL வெற்றிகரமாக நடைபெற்ற உண்ணாவிரதம்

             புதிய சம்பள மாற்றம் பேச்சு வார்த்தையை தொடங்கு, போனஸ் வழங்கு , காலிப்பணியிடங்களை நிரப்பு, ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய உண்ணாவிரதம் BSNLEU / FORUM of BSNL தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் சென்னை, வேலூர், ஈரோடு, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர்.

 • 02-10-2016ல் மாநிலச் செயற்குழு திருச்சியில்

  திருச்சியில் தமிழ் மாநிலச் செயற்குழு கூட்டம்.

           AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 02-10-2016 ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சியில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் : திருச்சி BSNL ஊழியர் சங்க அலுவலகம். (GM அலுவலக வளாகம்) 

  நேரம் :  02-10-2016 ஞாயிற்றுக் கிழமை, காலை 1000 மணி

  துவக்க உரை : 

  பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ், AIBDPA

  ஆய்படு பொருள் 

  (1) (அ) செயல் அறிக்கை

      (ஆ) நிதி நிலை அறிக்கை

  (2) அமைப்பு நிலை

     (அ) உறுப்பினர் சேர்ப்பு – புதுப்பித்தல்.

     (ஆ) பகுதிப்பணம் அனுப்பிய விபரம்.

     (இ) மாநில மாநாடு.

     (ஈ) மாவட்ட மாநாடுகள்.

    (உ)  மாநில அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்.

  (3) நடந்து முடிந்த இயக்கங்கள் பரிசீலனை

  (4) டெலிபென்ஷனர்

  (5) தீர்மானங்கள்

     அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

  குறிப்பு :- பகுதிப்பணம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் பகுதிப்பணம் செலுத்தும் வகையில் தயாரிப்புடன் வரவும்.

 • இதுவா தேச வளர்ச்சி ?

  GDP INCREASED 63.8 % IN 8 YEARS SALARY ONLY 0.2 % by VAN Namboodri.

                 The lies being spread by the government and the employers stand exposed before the people. As per the news analysis by the Hay Group Division of the Korn Ferry, India’s salary growth stood at a mere 0.2% for the last 8 years. At the same time the GDP has grown by 63.8%.

                   Further, there is wide unequal wage growth. While the top level employees are 30% well off after the recession period, the lower employees are 30% worse off.

              Both the UPA and the NDA governments have only been looking in to increasing the wealth and assets of the rich, the affluent and the corporates. They have been completely ignoring the demands of the toiling masses. The struggles and agitations by the central trade unions and other unions/federations for justice to the workers have been ignored and sidelined.

  The fruits of the economic growth of the country have been usurped by the rich. Where is justice for the poor employees? It is not surprising that more than 18 crore workers participated in the 2nd December 2016 strike fought for the betterment of the workers and the common people.

            2008 உலக பொருளாதர நெருக்கடிக்கு பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய உழைக்கும் மக்கள் சம்பளம் 0.2 சதவீதம் தான் அதிகரித்து உள்ளது. ஆனால் மக்கள் சீனாவில் இது 10.6 சதவீதம் அதிகரித்து உள்ளது.. அதேநேரம் இந்தியாவின் மொத்த தேசிய வருவாய் (GDP) 63.8% அதிகரித்து உள்ளது. இந்திய முதலாளிகள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றி தங்கள் சொத்துக்களை பெருக்கி உள்ளனர்.

 • ஓணம் வாழ்த்துக்கள்

  அனைவருக்கும் இனிய திருஓணம் நல்வாழ்த்துக்கள் !

  fb_img_1473826142282

 • AIBDPA தமிழ்மாநிலச் சங்கத்தின் முகவரி மாற்றம்

  மாவட்டச் செயலர்கள், மாநிலச்சங்க நிர்வாகிகள் புதிய முகவரியை குறித்து வைத்து பயன்படுத்த வேண்டுகிறேன்.

  மாநிலச்சங்கத்தின் புதிய முகவரி

  தோழர். C.K. நரசிம்மன்,

  மாநிலச் செயலர்,

  AIBDPA தமிழ் மாநிலச் சங்கம்,

  எண். 2/241, ‘C’  பிளாக், பிளாட் நெம்பர். 7, ரோஹிணி பிளாட்ஸ்,

  திலகர் அவென்யூ 2வது கிராஸ்,

  மடிப்பாக்கம்,

  சென்னை – 600 091.