• 2016 செப்டம்பர் 02ல் பொது வேலைநிறுத்தம்.

  அனைத்து மாவட்டச்சங்கங்களும் ஆதரவு இயக்கங்களை நடத்திட மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

  IMG-20160831-WA0006

  விலைவாசியைக் கட்டுபடுத்து !

  காலி பணியிடங்களை நிரப்பு !!

            உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை முன்வைத்து CITU, AITUC, HMS உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திடும் வேலைநிறுத்தத்தில் அனைத்து மாநிலச் சங்கங்களும் பொதுத்துறை சங்கங்களும் அமைப்புச் சாரா தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு இயக்கங்களை நடத்திட முடிவு செய்துள்ளன.  

                       நமது மாவட்டச் சங்கங்கள் 2016 செப்டம்பர் 02ல் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நடைபெறும் இயக்கங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க  வேண்டுகிறது. 

 • நெல்லையில் AIBDPA 4வது மாநிலமாநாடு

  நெல்லை, தூத்துக்குடி,நாகர்கோவில், விருதுநகர் மாவட்டங்கள் இணைந்து மாநாட்டை நடத்திட ஆலோசனை.

              கடந்த 27-08-2016 அன்று மாநிலத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் தலைமையில் நெல்லை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட AIBDPA மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலர்கள், முன்னணித் தோழர்கள், தென் மாவட்டங்களைச் சார்ந்த மாநிலச்சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர் காளிபிரசாத் கலந்து கொண்ட 4வது மாநிலமாநாடு நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

                4வது மாநில மாநாட்டை 2017 பெப்பிரவரியில் நெல்லையில் நடத்துவது என்ற முடிவு எட்டப்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட நான்கு தென் மாவட்டங்களும் இணைந்து மாநில மாநாட்டை நெல்லையில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

                  மாநில மாநாட்டை நெல்லையில் நடத்திட ஒப்புதல் அளித்த தென்மாவட்டச் சங்கங்களை மாநிலச்சங்கம் நன்றியுடன் பாராட்டுகிறது.