• வெற்றிகரமாக நடைபெற்ற பொது வேலைநிறுத்தம்.

            02-09-2016 அன்று நடைபெற்ற நாடு தழுவிய வரலாற்று சிறப்புமிக்க பொது வேலைநிறுத்தத்தில் சுமார் 18 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1991ல் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் 17வது முறையாக இன்றும் நடந்துள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களால் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு இழப்பு போன்ற மக்கள்விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை அமுல்படுத்தும் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் 12மத்திய தொழிற்சங்கங்கள், ஆயுள் காப்பிடு, வங்கிகள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுதுறை சங்கங்கள் மாநில அரசு ஆசிரியர் சங்கங்கள் அமைப்புசாரா சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. தொழிலாளர் விரோத BMS சங்கம் கலந்து கொள்ளவில்லை.

          தொழிலாளர்களால் தலமட்டங்களில் நிலமைகளுக்கேற்ப பேரணி, தார்ணா, ஆர்ப்பாட்டம், மறியல் என வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்து ஓய்வூதியர்களும் NCCPA, AIBDPA மற்றும் AIPRPA தார்மீக ஆதரவளித்து போராட்டம் நடத்தினர்.

        தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டங்களிலும் 250க்கும் மேற்பட்ட  நமது AIBDPA தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வேலைநிறுத்தத்திலும் ஆதரவு இயக்கங்களிலும் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ் மாநிலச் சங்கம் இதயபூர்வமாக பாராட்டி வாழ்த்துகிறது.