• உற்சாகமாய் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மாநாடு

               AIBDPA விருதுநகர் மாவட்ட மாநாடு 25-09-2016 விருதுநகர் எம்ஆர்வி நினைவரங்கில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். U. முத்தையா சங்கக்கொடியை ஏற்றிவைத்தார். தோழர். A. ஜெயபாண்டியன் தியாகிகளுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

               மாநாட்டை துவக்கிவைத்து அனைத்திந்திய துனைத்தலைவரும் தமிழ்மாநிலத் தலைவருமான தோழர். S.மோகன்தாஸ் பேசினார். தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரையாற்றினார். BSNLEU மாவட்ட உதவிச்செயலர் தோழர். M. முத்துச்சாமி, JCTU விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர். தேனி வசந்தன், SEWA தலைவர் தோழர். குருசாமி, BSNLEU மாவட்டப் பொருளாளர் தோழர். சந்திரன் உட்பட பலர்  வாழ்த்துரை வழங்கினர்.

             ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகளாக மாவட்டத்தலைவர் தோழர்.S. முருகேசன், மாவட்டச் செயலர் தோழர். M. அய்யாச்சாமி, மாவட்டப் பொருளாளர் தோழர். M. பெருமாள்சாமி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  

                 65க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். 75 வயதிற்கு மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டின் நிறைவாக தோழர். புளுகாண்டி  நன்றி கூறினார்.

                மாநாட்டை சிறப்பாக நடத்திய விருதுநகர் மாவட்டத் தோழர்களை பாராட்டுவதோடு புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாநிலச் சங்கம் மனதார வாழ்த்துகிறது.